எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சில்பாராமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில்பாராமம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஜூன், 2020

உல்லாசிகளும் உழைப்பாளிகளும்.

ஹைதையில் உள்ள கலாச்சார கிராமமான ( கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடிகளும் உண்டு ) சில்பாராமத்தில் கைவினைக் கலைஞர்களையும் உழைப்பாளி மக்களையும் கௌரவப்படுத்தும் விதத்தில் டாப்ளோ போல சிலைகள் அமைத்துள்ளார்கள்.

அங்கேயே வெய்யில் கால உல்லாச விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. போட்டிங் இருக்கிறது. அதோடு இந்த மாதிரி ஏர் பலூனில் தண்ணீரில் ஆட்டமும் போடலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமே.

காற்று நிரப்பிய இந்தப் பந்து/பலூனில் பிள்ளைகள் ஏறியவுடன் இந்த கறுப்பு ஜிப்பை ஒட்டி விடுகிறார்கள். அதன் பின் பிள்ளைகள் உள்ளே தவழலாம், உருளலாம், ஓடலாம். இணைப்பாக கயிறும் உள்ளது. அவர்கள் தடுமாறினால் இழுத்துப் பிடித்து நிறுத்தி வெளியே கொண்டு வரலாம். இந்த உல்லாச பலூனில் ஏற கட்டணம் உண்டு.

பணம் படைத்தவர்க்கான உல்லாச விளையாட்டுகள் இன்னும் பல உண்டு. :)


புதன், 13 மே, 2020

பறையாட்டமும் போலிபாக காட்டையாவும்.

ஷில்பாராமல் பற்றிப் பல்வேறு இடுகைகள் முன்பே போட்டிருக்கிறேன். அங்கே பறையாட்டத்தோடு இந்தியாவிலேயே உயரமான மனிதரான போலிபாக காட்டையாவையும் பார்த்தோம். ( POLIPAKA GATTAIYA) .

அவர் படம் கடைசியா வரும் :)

மிக எழிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கலாச்சார கிராமம். ஹைதையின் ஹைடெக் சிட்டியின் அருகே அமைந்துள்ள இதனருகில் இந்திரா காந்தி சிலையும் சைபர் சிட்டியின் சைபர் டவரும் இருக்கின்றன. மேலும் உதிரி இரும்புகளால் ஆன அநேக சிலைகள் ஹைதையை வடிவழகோடு வைத்திருக்கின்றன.


செவ்வாய், 19 மே, 2015

கொண்டாட்டப் பறையும் நீதிக்கான பறையும்.

கொண்டாட்டப் பறை.

பறையறிவித்தல் என்றால் சத்தமாக அறிவித்தல் என்று அர்த்தம்.பறை என்பது  ஒரு தமிழிசைக்கருவியுமாகும். தோலால் ஆன  மேளம் எனப்படுகிறது. எல்லா இசையும் கேட்க இனிமை என்றாலும் ஆடவைக்கும் அளவு ஒவ்வொரு செல்லையும் தூண்டுவது பறைக்கே சாத்தியம்.

அடிச்சுத் தூள் கிளப்புறது என்பார்களே அதை இங்கே ஹைதராபாத்தில் உள்ள சில்பாராமம் என்ற கலாசார கிராமத்தின் கோடைத்திருவிழாவான சில்ப சந்தியா வேடிகா என்ற மாலை நேரக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாத்தேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...