எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 மே, 2020

பறையாட்டமும் போலிபாக காட்டையாவும்.

ஷில்பாராமல் பற்றிப் பல்வேறு இடுகைகள் முன்பே போட்டிருக்கிறேன். அங்கே பறையாட்டத்தோடு இந்தியாவிலேயே உயரமான மனிதரான போலிபாக காட்டையாவையும் பார்த்தோம். ( POLIPAKA GATTAIYA) .

அவர் படம் கடைசியா வரும் :)

மிக எழிலாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கலாச்சார கிராமம். ஹைதையின் ஹைடெக் சிட்டியின் அருகே அமைந்துள்ள இதனருகில் இந்திரா காந்தி சிலையும் சைபர் சிட்டியின் சைபர் டவரும் இருக்கின்றன. மேலும் உதிரி இரும்புகளால் ஆன அநேக சிலைகள் ஹைதையை வடிவழகோடு வைத்திருக்கின்றன.




இந்த இசை கேட்டு மயங்கித் தாளமிடாதவர்களே இல்லை.



மிக அருமையாக உயிர்த்துடிப்போடு துள்ளி ஆடி வாசித்தார்கள் இந்த இளையர்கள்.


வாயிலில் கம்பீரமாக குதிரையில் ஆரோகணித்து இரு டெரகோட்டா வீரர்கள் நம்மை வரவேற்கிறார்கள்.



பக்கவாட்டில் அழகுக்காக வைக்கப்பட்டிருக்கும் காண்டா மணி.


நம்முடைய ஃபோட்டோகிராஃபிக் திறமையைக் காட்ட வேண்டாமா :)



எண்ட்ரன்ஸ் டிக்கெட் கிடைத்து உள்ளே செல்லும்வரை இவ்விசையை ரசித்தோம் அனைவரும்.


டண்டக்கு டண்டக்கு டண்டக்கு டண்டான்

டமுக்கு டமுக்கு டமுக்கு டமுக்கு

டண்டனக்கா டண்டனக்கா

என்று விதவிதமான ஓசைகள் பட்டாசு கிளப்பின :)


உள்ளே பல்வேறு கடைகள் அதிலொன்று பூக்கடை. அங்கே இருந்த ப்ளாஸ்டிக்  சூரியகாந்தி. :)

நடந்து காலலிச்சா கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாங்க


யட்சியின் சிலையருகே வைஷ்ணோ தேவி, குட்டிக் காளி.

யட்சி !!!

அன்னை தெரசா.

குழந்தையையுடன் நாமும் பாதுகாப்பாய் அன்னையின் கைப்பிடியிலும் காலடியிலும் :)

யட்சியுடன் ஒன்று உக்கிரம் குறைந்து .. ஜோடியாய்.

கலாச்சார கிராமத்துக்குப் போயிருக்கும்போது அங்கே இருக்கும் ஆதிவாச சிற்பத்துக்குள் நம் தலையை மட்டும் நீட்டிஒரு ஃபோட்டோ. பக்கத்தில் ஒரு ஆதிவாசி இளைஞர் சிற்பமும் இருந்தது. ஆனால் ஜோடியாக எடுக்க ரங்க்ஸ் ஒத்துக் கொள்ளாததால் நான் மட்டும் பெண் சிற்பத்தின் கழுத்தில் தலையைக் கொடுத்தேன் :)

மாபெரும் யானைச் சிற்பம். அதில் ஏறி மகிழும் குட்டிப் பசங்க.

அதன் பக்கம் நின்று ஃபோட்டோ எடுத்து மகிழும் பெரியவங்க.


இவர்தான் அந்த உயரமான மனிதர் போலிபாக காட்டையா. இவர் 1975 இல் புண்டூர் என்ற ஆந்திர கிராமத்தில் பிறந்தவர். தாய் லெக்ஷ்மம்மா. இவருக்குத் திருமணம் ஆகலை. 2014 மே 17  இல் எடுத்தது இந்த ஃபோட்டோ. ஆனால் இவர் 2015 இல் தனது 40 ஆவது வயதிலேயே மாரடைப்பினால் இயற்கை எய்திவிட்டார்னு இப்போ படிச்சேன். மிகுந்த வருத்தமாக இருந்தது. ஹ்ம்ம். ஆனால் கூகுளைத் தட்டினால் இவரோடு மக்கள் எடுத்துக்கிட்ட ஆயிரக்கணக்கான ஃபோட்டோக்களைப் பார்க்கலாம்.


திரும்பவும் இரவில் இவர்களின் ஷில்பா சந்தியா வேடிகா என்ற பறை நிகழ்ச்சியை மேடையிலும் கண்டு களித்தோம்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 . 

 ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 4.

ஷில்பாராமில் பாரம்பரிய நடனக் காட்சிகள் .

3 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    நன்றி மணவாளன்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...