எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஷில்பாராமில் பாரம்பரிய நடனக் காட்சிகள் .

ஹைதை ஷில்பாராமத்தில் ( கலாச்சாரக் கிராமம்)  கோடைத்திருவிழாவின்போது பரதநாட்டியம் போன்ற பாரம்பரியக் கலைகளை வளர்த்தெடுக்கப் போட்டிகள் நிகழ்த்துகிறார்கள்.
 வரவேற்கும் நடனப் பெண் சிலைகள் அற்புதம்.


சின்னச் சின்னப் பெண் குழந்தைகள் அற்புதமாக நடனம் ஆடுகிறார்கள்.


பரதநாட்டியம் போக இந்தியாவின் பாரம்பரிய நடனங்கள் இசை எல்லாவற்றுக்கும் ஒரு ஒரு நாள் ஒதுக்கி போட்டிகள் நிகழ்த்திப் பரிசளிக்கிறார்கள்.   ஒரு முறை இவற்றைக் கண்டு களிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

மிக அருமையாக நடனம் ஆடிய இந்த நால்வரும் என் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தார்கள் .

ஒருவர் சிறுகுழந்தை போன்ற மென்மையுடன் ஆடினார். அனைவர் நாட்டியத்தில் லக்ஷ்மியும் சரஸ்வதியும் மஹிஷாசுரமர்த்தினியும் இடம் பெற்றிருந்தார்கள்.

இன்னொருவர் பெரியவர் போன்ற முகபாவனையுடன் ஆடினார்.
மூன்றாமவர் நடனத்தின் நடுவில் தீபங்களைக் கைகளில் ஏந்தி - தீபங்களின் நிருத்தியங்களுடன் மிக மிக அழகாக ஆடினார்.



நான்காமவர் கொஞ்சம் பெரிய பெண். இவர் அற்புதமாக அங்கே மஹாலக்ஷ்மியையும் மஹாசரஸ்வதியையும் மஹிஷாசுரமர்த்தினியையும் எழுந்தருளப்  பண்ணினார்.



மொத்தத்தில் கண்ணுக்கும்  மனதுக்கும் டிலைட்.
ஆங் அப்புறம் முக்கிய விஷயம் அங்கே நாரதர், புரந்தரதாசர் ( அப்பிடித்தான் நினைக்கிறேன் )
அப்புறம் நர்த்தன நடராஜரும் கூட இருந்தார்கள்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 1 . 

 ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 2.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 3.

ஷில்பாராமம். ஹைதை, ஹைடெக் சிட்டியின் ஒரு கலாசார கிராமம் & கோடைத் திருவிழா. பார்ட் 4.

2 கருத்துகள்:

  1. படங்கள் அருமை அக்கா...

    2014-ல் நடந்தவையா...?

    பதிலளிநீக்கு
  2. aam Kumar sago :)thanks :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...