எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஆகலாம் அப்துல்கலாம்.

அக்கினிச்சிறகுகள் கொண்டு
கனவுகளைச் செதுக்கு
ஆகலாம் அப்துல்கலாம்.

உயரவேண்டுமென்ற உத்வேகம்
குறிக்கோளில் பிடிவாதம் கொள்
ஆகலாம் அப்துல்கலாம்.

சாதாரண மனிதனிலிருந்து
அசாதரணாய் வெளிப்படு
ஆகலாம் அப்துல்கலாம்.

ஊன்உயிர்  உள்ஒளி
உள்ளக்கிடக்கை சேர்ந்தால்
ஆகலாம் அப்துல்கலாம்.

தேசத்தைக் காதலி
அன்பால் நிரப்பிவை
ஆகலாம் அப்துல்கலாம்.

தந்தைதாயைப் போற்று
இந்தைப் பிறவியிலேயே
ஆகலாம் அப்துல்கலாம். 

3 கருத்துகள்:

 1. இப்போது சில பதிவுகள் கவிதைகளாகவே வருகின்றனவே

  பதிலளிநீக்கு
 2. நன்றி ilakkijan

  நன்றி பாலா சார். ஆம் இவை ஒரு போட்டிக்காக எழுதப்பட்டவை. முடிவு தெரியவில்லை. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. அதான் வலைத்தளத்தில் போட்டுவிட்டேன்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...