எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 அக்டோபர், 2017

சாணத்தை இனி போஸ்டர்ல போடாதீங்க கம்போஸ்ட்டா போடுங்க.

சாணத்தை  இனி  போஸ்டர்ல  போடாதீங்க  கம்போஸ்ட்டா  போடுங்க.

சாணத்தை  இனி  சுவரொட்டியில் போடாதீங்க

  ங்காவது பிடிக்காத போஸ்டரைப் பார்த்தா உடனே சாணியை எடுத்து வீசாதீங்க. நீங்க கோபப்பட்டு சாணியை வீசுற அளவுக்குக் கூட அவங்க லாயக்கானவங்க இல்லீங்க . அந்த மதிப்பு மிக்க சாணிய உரக்குழியில் போடுங்க. அவ்வளவும் இயற்கை உரம்க.

  கென்யாவில் இயற்கைத் தொழு உரத்துக்கு மதிப்பு அதிகமாயிருக்கு. ஏன்னா இரசாயன உரம் விலை அதிகம் என்பதோடு நிலத்தையும் நீரையும் கெடுக்கும் தன்மை வாய்ந்தது. எனவே அவங்க இயற்கை த்தொழு உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்றாங்க. தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுகள்ல வெட்டப்பட்ட குழிகளில் மக்கிய இலை தழைகள், வீட்டின் காய்கறிக் கழிவுகள், கரும்புச்  சக்கைகள், மிருகங்களின் கழிவுகள் முக்கியமா மாட்டுச்சாணம் ஆகியவற்றைக் கொட்டி மண்ணைப் போட்டு மூடி  நான்கைந்து மாதங்களுக்கு மக்கச்செய்றாங்க. அதில் மைக்ரோ ஆர்கனிஸம்ஸ் எனப்படும் நுண்ணுயிரிகளும் பாக்டீரியாக்களும் காளான்களும் வளர்ந்து அவற்றை நுண்துகள்களாக உடைக்கின்றன. இதை உரமாப் பயன்படுத்துறாங்க.






  இரசாயன உரங்களை விட இந்த கம்போஸ்ட் உரம் ரொம்ப விலை கம்மி. நாமே தயாரிக்கலாம். நிலத்தைக் கெடுக்காது. தண்ணீரைக் குடிக்காதுஇன்னொரு முறையில் கோபர் காஸ் எனப்படும் பயோ காஸ் தயாரிக்கவும் இந்த சாணம் பயன்படுது. . மண்புழு போன்ற இயற்கையின் நண்பர்களையும் இந்த மக்கும் சாணம் உற்பத்தி செய்யும். இது பயிர்வளர்ச்சியை அதிகமாக்கும். மகசூலையும் பெருக்கும்.

  இயற்கை எரிவாயு ஆலையில் இதேபோல் மாட்டுச்சாணம், மற்ற பசுமைக் கழிவுகள் , உணவுக் கழிவுகள் எல்லாமே கொட்டப்பட்டு நன்கு மூடப்பட்டிருக்கும் . இவை நொதித்து உருவாகும் பயோகாஸ் எனப்படும் மீத்தேன் குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிறந்த எரிபொருளாகப் பயன்படுத்தப்படுது.   எரிவாயு  உற்பத்தியானவுடன் மிச்சமாகும் கழிவுகள் பயிர்வளர்ச்சிக்குச் சிறந்த உரமாகப் பயன்படுதுஇதைத் திரும்ப மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும் என்பதும் சிறப்பு.

  இந்த இயற்கை எரிவாயு கொண்டு மின்சாரம் தயாரிக்கமுடியும் என்பது மட்டுமல்ல பேருந்தைக்கூட இயக்குறாங்க ஸ்வீடன்லஸ்விச்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள்ல 2005 லிருந்து பயோகாஸ் ட்ரெயின் அமெண்டா அப்பிடீங்கிற தொடர்வண்டி சேவை கூட புழக்கத்துல இருக்கு.

  இந்தியாவில் குறிப்பா தமிழ் நாட்டில் ஆதி காலத்தில் இருந்தே சாணம் ஆன்மீகத்திலும் சரி இயல் வாழ்விலும் சரி மதிப்புமிக்க ஒன்றாகத்தான் கருதப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டிருக்குஇது மிகச்சிறந்த கிருமி நாசினி. மாட்டுச்சாணம் கொண்டு வீடு மெழுகுவது, வாசல் தெளிப்பது, குழிகளை அடைப்பது, சுவர் பூசுவது என்று உபயோகிச்சிருக்காங்க. நம்ம நாட்டில் மட்டுமில்ல தென் ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளில் கூட மக்கள் இன்னும் சாணம் பயன்படுத்தி வீட்டை மெழுகுறாங்க. இது தரைக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். பூச்சி பொட்டுகள் அண்டவிடாமல் செய்யும்

  வைக்கோல், ரம்பத்தூள் போன்றவற்றோடு கலந்து வட்ட வட்டமாக விராட்டியாகத் தட்டிக் காயவைத்து உணவு சமைக்க எரிபொருளாகவும் பயன்படுத்தி இருக்காங்க. சிலர் இரத்த காயம்பட்ட இடத்திலும் இரத்தப் போக்கை நிறுத்த சாணத்தைப் பூசுவாங்க.சாணத்தை  நீள நீளமா உருட்டியும் வெளிநாடுகள்ல கேக் மாதிரியும் ரொட்டித்துண்டு மாதிரியும் காயவைச்சு அடுக்கி வைக்கிறாங்க. இந்தியாவில் மின் மயானங்கள் இல்லாத இடங்களில் இந்த வறட்டியை வைத்து ஈமக்ரியைகளைச் செய்றாங்க.

 பசுஞ்சாணத்தை மட்டும் உருண்டையா உருட்டிக் காயவைத்து ஹோமம் போன்றவற்றில் போட்டு வணங்குவது வழக்கம். அதையே புடம்போட்டு சலித்து விபூதியாப் பூசிக்குவாங்க. இந்த விபூதி திருநீறு பூசுவது என்பதன் பின்னணியிலும் மருத்துவக் காரணம் இருக்கு. தலையிலும் நெற்றியிலும்  இருக்கும் கெட்ட நீரை இது இழுத்துவிடும்

  பையா தூஜ் எனப்படும் வடநாட்டுப் பண்டிகை அன்று சாணியில் பொம்மைகள் பிடித்து வைத்து  சகோதரன் நீண்ட ஆயுள் வாழவேண்டும் என்றும் அவர் நலனுக்காகவும் சகோதரிகள் வணங்குவார்கள். யமனால் தங்கள் சகோதரனுக்குத் துன்பம் நேரக்கூடாது என்பதற்காக வேண்டிக் கொள்வார்கள்யமதுவிதியை எனப்படும் அந்நாளில் எமனுக்கு அவர் சகோதரி யமுனை திலகம் வைத்து இனிப்பு ஊட்டியதன் ஞாபகார்த்தமாக இதைச்செய்கிறார்கள். அன்று சகோதரி வீட்டுக்கு வரும் சகோதரர்கள் சகோதரிக்குப் பரிசுகள் கொடுத்து மகிழ்விப்பார்கள்.

  ஒரிஸ்ஸாவில் கைவினைக் கலைஞர்கள் மாட்டுச் சாணம் கொண்டு பொம்மைகள் தயாரிக்கிறாங்க. சிலர் இதில் சிற்பமும் செய்றாங்கதஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போன்ற பொம்மைகள் களிமண்ணுடன் சாணமும் மரத்தூளும் கலந்து தயாரிக்கப்படுது. இடிமின்னல் தாக்காதிருக்க மிக உயரமான கோபுர கலசங்களில் வைக்கப்படும்  சாமை வரகு போன்ற தானியங்களோடு எருவில் செய்யப்படும் வறட்டியையும் தூளாக்கி சேர்ப்பார்கள்.

  செடிகளின் விதைகளைப் பாதுகாக்கவும் மாட்டுச்சாணம் பயன்படுது. செடிகளின் விதைகளை எரு என்று சொல்லப்படும் மாட்டுச்சாணத்தில் புதைத்து உருட்டிக் காயவைத்து பாடம் செய்கிறார்கள். நாம் பயணிக்கும் பொழுதுகளில் வனங்கள் காடுகள் புறம்போக்கு நிலங்களில் இவ்விதை உருண்டைகளை  நாம் போட்டு வந்தால்  அங்கே கிடைக்கும் சூரிய ஒளி, மழை பட்டு எருவை உரமாகக் கொண்டு அவை முளைக்க ஆரம்பிக்கும். எருவில் புதைத்துப் போடுவதால் எறும்பு மற்றும் மற்ற விதை, கொட்டை உண்ணும் விலங்குகளின் கைகளிலில் இருந்து தப்பி இவை முளைவிட இந்த எரு  ஒருகவசம்போல் உதவுகிறது.

  பசுமடங்களில் இந்த மாட்டுச்சாணம்  கோமயத்தோடு கலந்து சேமிக்கப்பட்டு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துறாங்கபசுஞ்சாணத்தைக் கொண்டு அதில் பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுது. பசுஞ்சாணம்,கோமியம்,பால், தயிர், நெய், கரும்புச்சாறு, இளநீர், வாழைப்பழம் ஆகியவற்றைப் பக்குவமாகக் கலந்து பதினைந்து நாட்களில் இந்த பஞ்சகவ்யத்தைத் தயாரிக்கிறார்கள். இதைக் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத்திறன் மற்றும் வீரியத்தன்மை அதிகரிக்கிறது. பூச்சி மற்றும் நோய்தாக்குதலையும் தவிர்க்கிறது

  இது மிகச் சிறந்த கிருமி நாசினி. கோபுர கலசங்களில் இடி மின்னல் தாக்காமலிருக்க புவித்தொடுப்புப் போல செயல்படுது. மிகச் சிறந்த இயற்கை உரம். காயவைத்துப் பொடியாக்கி செடிகளுக்குத் தூவலாம். இத்துடன் வெல்லச்சாறு கலந்து மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுது. இதைக் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் விதைகளைப் பல்லாண்டுகள் கவசம் போல் காக்கிறது.

 இதைக்கொண்டு ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கிறார்கள். சித்தர்கள் இதைக் கொண்டு பஞ்சகவ்யகிருதம் என்ற மருந்தைத் தயாரித்தார்கள். கோயில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது மட்டுமல்ல நோய் எதிர்ப்புச்சக்தியைக் கொடுக்கும்னு அப்படியே மருந்தாகவும்  உட்கொள்கிறார்கள். இயற்கை வேளாண்மையில் இது சிறந்த இடுபொருளாகவும் நில ஊட்டப் பொருளாகவும் பயன்படுது.

 இவ்வளவு சிறப்பு வாய்ந்த சாணத்தை  சுவரொட்டியில செடிகொடிகளுக்குப் போடுங்க. அவை உங்களுக்குப் பலமடங்கு பலனைத் தரும்.

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. நகர்ப் புறத்தில் சாணமெங்கே கிடைக்கிறது உரம்தயாரித்து உபயோகிக்கும் அளவுக்கு நிலமும் எங்கே

    பதிலளிநீக்கு
  3. unmaithan Bala sir. ithu self help group ladies kkaga velivarum bookkukku eluthiyathu.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...