எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மரபும் அறிவியலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரபும் அறிவியலும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 பிப்ரவரி, 2020

மஞ்சளும் குங்குமமும் - 300 மாணவிகளும்.

பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது "மஞ்சளும் குங்குமமும்" நூல். இது எழுத்தாளர் தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் எழுதியது. இந்த நூல் மாணவிகள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது. அவர்களின் வாசிப்புக்காக இந்த நூல் வழங்கப்பட்டது. பின்னர் இந்த நூல் குறித்து மாணவிகளுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 300 பேர் இந்தத் தேர்வினை எழுதினர். அதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தானம் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய நிகழ்வான "வாக்கத்தான் 2020" நிகழ்வின்போது பரிசு வழங்கப்பட்டது. மாணவியர் பங்கேற்று விழா மேடையில் நூல் குறித்தும் பேசினர். இந்த ஆண்டு வாக்கத்தானின் மையக் கரு "பெண் என்னும் பேராற்றல்". அதில் மாணவியர் பங்கேற்பு என்பது மிகப் பொருத்தமானது.

-- நன்றி திருமலை சார் & நமது மண்வாசம்.




திங்கள், 10 ஜூன், 2019

நமது மண்வாசம் ஐந்தாவது ஆண்டு தொடக்க விழாவில் மஞ்சளும் குங்குமமும் வெளியீடு.

எனது பத்தாவது நூலான ”மஞ்சளும் குங்குமமும் ” நமது மண்வாசம் இதழின் ஐந்தாவது ஆண்டுத் தொடக்க விழாவில் வெளியிடப்படுகிறது. மதுரையில் 10.6.2019, திங்கட்கிழமையன்று காலை 10 மணிக்கு பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடாக எனது நூல் மலர்கிறது.

வெள்ளி, 4 ஜனவரி, 2019

அஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.

அஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.
  அஃகப் பானையும் எஃகுப் பானையும்

  “தஞ்சாவூரு மண்ணு எடுத்துத் தாமிரபரணித் தண்ணியவிட்டு சேர்த்து சேர்த்து செய்ததிந்தப் பொம்மை” என்ற பாடலைக் கேட்டிருக்கலாம். பெண்ணைக் குறித்துப் பாடப்பட்ட பாடலானாலும் பானை வகைகள் டெல்டா போன்ற பகுதிகளில் இருக்கும் களிமண் கொண்டு ஆற்று நீரால் பிசையப்பட்டு வனையப்படுவதை இப்பாடல் அழகாக விவரிக்கின்றது. அதே போல் திருமணமானதும் தம்பதியர் வாழ்வு செல்வச் செழிப்போடு சிறந்தோங்கினால் ’பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்று சொல்வதும் உண்டு.  

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

நீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம். - பர்ஸுக்கும் பாதகமில்லை. உடலுக்கும் உபத்திரவமில்லை.

நீராவியில் நீடிக்கும் ஆரோக்கியம்.

வெந்தும் வேகாம அள்ளிப்போட்டுக்கிட்டு வேலைக்கு ஓடுறவங்களே கொஞ்சம் நின்னு நிதானிச்சுக் கவனிங்க. உங்க உணவுல இருக்குற ஊட்டச்சத்துதான் உங்க உடம்புக்கு சக்தி கொடுக்குது. கொழுப்பு, ப்ரோட்டீன், விட்டமின் மினரல்ஸ் நார்ச்சத்து ஆகியவை அடங்கிய சரிவிகித உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க நேரம் இருக்கா. தினப்படி அட்டவணை போட்டு அத காலரீஸ் மூலம் கணக்கிட்டு உண்ண முடியுமா.

செவ்வாய், 3 அக்டோபர், 2017

சாணத்தை இனி போஸ்டர்ல போடாதீங்க கம்போஸ்ட்டா போடுங்க.

சாணத்தை  இனி  போஸ்டர்ல  போடாதீங்க  கம்போஸ்ட்டா  போடுங்க.

சாணத்தை  இனி  சுவரொட்டியில் போடாதீங்க

  ங்காவது பிடிக்காத போஸ்டரைப் பார்த்தா உடனே சாணியை எடுத்து வீசாதீங்க. நீங்க கோபப்பட்டு சாணியை வீசுற அளவுக்குக் கூட அவங்க லாயக்கானவங்க இல்லீங்க . அந்த மதிப்பு மிக்க சாணிய உரக்குழியில் போடுங்க. அவ்வளவும் இயற்கை உரம்க.

  கென்யாவில் இயற்கைத் தொழு உரத்துக்கு மதிப்பு அதிகமாயிருக்கு. ஏன்னா இரசாயன உரம் விலை அதிகம் என்பதோடு நிலத்தையும் நீரையும் கெடுக்கும் தன்மை வாய்ந்தது. எனவே அவங்க இயற்கை த்தொழு உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்றாங்க. தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுகள்ல வெட்டப்பட்ட குழிகளில் மக்கிய இலை தழைகள், வீட்டின் காய்கறிக் கழிவுகள், கரும்புச்  சக்கைகள், மிருகங்களின் கழிவுகள் முக்கியமா மாட்டுச்சாணம் ஆகியவற்றைக் கொட்டி மண்ணைப் போட்டு மூடி  நான்கைந்து மாதங்களுக்கு மக்கச்செய்றாங்க. அதில் மைக்ரோ ஆர்கனிஸம்ஸ் எனப்படும் நுண்ணுயிரிகளும் பாக்டீரியாக்களும் காளான்களும் வளர்ந்து அவற்றை நுண்துகள்களாக உடைக்கின்றன. இதை உரமாப் பயன்படுத்துறாங்க.

திங்கள், 22 மே, 2017

மரபும் அறிவியலும் :- முளைப்பாரி.



மரபும் அறிவியலும்

முளைப்பாரி

  ழவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது கிராமங்களும் சிறு நகரங்களும் இன்றும் பண்பாடும் பழமையும் மாறாமல் கொண்டாடும் திருவிழாக்களில் முளைப்பாரியும் மதுக்குடமும் பெரும்பங்கு வகிக்கின்றன. வேளாண் தொழில் செழித்து வளரவும் பயிர்பச்சைகள் பல்கிப் பரவவும் முளைப்பாரி எடுத்தல் பெரும் பங்கு வகிக்கிறது.

  பெரும்பாலும் கோடைகாலத்திலேயே – மே மாதத்தில் - முளைப்பாரி எடுப்பது நிகழ்கிறது. கோடைத்திருவிழாக்களில் அம்மன் கோயில்களுக்கு நேர்ச்சை செய்துகொண்டு முளைப்பாரி, பாளை, மதுக்குடம் எடுத்துவந்து கோயிலில் சேர்ப்பித்து சாமி கும்பிடுவார்கள். சிலர் நவராத்திரி போன்ற வைபவங்களிலும் கொலுவுக்கு முன் பாத்திரத்தில் முளைவிட்ட பயறுவகைகளை வைத்து பூஜை செய்வார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...