மரபும்
அறிவியலும்
முளைப்பாரி
உழவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நமது
கிராமங்களும் சிறு நகரங்களும் இன்றும் பண்பாடும் பழமையும் மாறாமல் கொண்டாடும்
திருவிழாக்களில் முளைப்பாரியும் மதுக்குடமும் பெரும்பங்கு வகிக்கின்றன. வேளாண்
தொழில் செழித்து வளரவும் பயிர்பச்சைகள் பல்கிப் பரவவும் முளைப்பாரி எடுத்தல்
பெரும் பங்கு வகிக்கிறது.
பெரும்பாலும் கோடைகாலத்திலேயே – மே மாதத்தில் - முளைப்பாரி எடுப்பது நிகழ்கிறது. கோடைத்திருவிழாக்களில் அம்மன் கோயில்களுக்கு நேர்ச்சை செய்துகொண்டு முளைப்பாரி, பாளை, மதுக்குடம் எடுத்துவந்து கோயிலில் சேர்ப்பித்து சாமி கும்பிடுவார்கள். சிலர் நவராத்திரி போன்ற வைபவங்களிலும் கொலுவுக்கு முன் பாத்திரத்தில் முளைவிட்ட பயறுவகைகளை வைத்து பூஜை செய்வார்கள்.