எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 பிப்ரவரி, 2022

பாட்டிக்ஸ் மௌச்சஸ் - 1

 பாட்டிக்ஸ் மௌச்சஸ் என்னும் பறக்கும் படகுகளில் ஃபிரான்ஸ் சென்றிருந்தபோது பயணம் செய்தோம். சுமார் 200 பேர் டெக்கில் அமர்ந்து ஸீன் நதியின் மேல்  பயணித்த அனுபவம் மறக்க முடியாதது. லே மிஸரபிள்ஸ் என்ற விக்டர் ஹியூகோவின் நாவல் எல்லாம் ஞாபகம் வந்தது. 


அங்கே இருக்கும் சுதந்திர தேவி சிலைதான் முதலும் மூலமுமான சிலை. அமெரிக்காவில் இருப்பது அதன் பிந்தான் நிர்மாணிக்கப்பட்டது என்றார்கள். 

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

திருமுறைகளைத் தொகுத்த கணபதி தோழன்.

திருமுறைகளைத் தொகுத்த கணபதி தோழன்

ஒரு குழந்தை கணபதியையே தோழனாக வரிக்க முடியுமா. அவரிடமிருந்தே திருமுறைகள் பற்றிக் கேட்டுத் தொகுக்க முடியுமா ? முடியும் என நிரூபித்திருக்கிறார் நம்பியாண்டார் நம்பி என்பவர்.
பத்தாம் நூற்றாண்டுக் காலம் அது. இராஜ இராஜ அபய குலசேகர சோழன் ஆட்சி புரிந்து வந்தான். காட்டுமன்னார்கோவில் என்ற ஊரின் அருகே திருநாரையூர் என்ற எழில்மிகு ஊரில் பொள்ளாப் பிள்ளையார் கோவில் ஒன்று இருந்தது. அக்கோவிலில் பிள்ளையாருக்கு அனந்தேச சிவாசாரியார் என்பார் தினப்படி பூஜைகள் செய்து வந்தார்.
தினமும் பிள்ளையாரைப் பூசித்து உணவு படைத்து விட்டு வீடு திரும்பும்போது தன் கண்ணில்படும் எளிய குழந்தைகளுக்கு அவ்வுணவைக் கொடுத்துவிட்டு வருவார். இவ்வாறு அவர் வரும்போது அவரது மகன் நம்பியாண்டார் நம்பி “ அப்பா, இன்றைக்கு பிரசாதம் எங்கே ? “ எனக் கேட்பார்.

சனி, 19 பிப்ரவரி, 2022

சில்வர்ஃபிஷ் & பாரதி பதிப்பகத்தில் என் நூல்கள்.

இந்த வருடம் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் பாரதி பதிப்பகத்தின் அரங்கு எண் 6, 7 இல் எனது 4 புது நூல்கள் கிடைக்கும். 

இந்த  வருடம் புதிதாய் இரு பெண் பதிப்பாளர்கள் பற்றியும் அவர்கள் வெளியிடும் என் நூல்கள் பற்றியும் இங்கே அறிமுகப்படுத்துவதில் களிபேறுவகை கொள்கிறேன்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

தானப்பன் கதிர் அவர்களின் பார்வையில் “பெண் பூக்கள்”

 #பெண்பூக்கள் ..


பூக்களில் உண்டா ஆண், பெண் என்று என்ற கேள்வியுடன் பூக்களின் பெயர்தாங்கி வரிசை கட்டி நிற்கின்றன 57 கவிதைகள் என பதிப்பாளர் ஜெபக்குமார் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

வியாழன், 17 பிப்ரவரி, 2022

என்னுடைய பத்தொன்பதாவது நூல் நீலகேசி.

 என்னுடைய பத்தொன்பதாவது நூல் நீலகேசி. இதையும் புதினமாக எழுதி உள்ளேன். நான் மிகவும் ரசித்து எழுதிய நூல். பிரபஞ்சத் தத்துவங்களை, பொருண்மைகளை எளிமையாக விளக்கும் நூல். 


புதன், 16 பிப்ரவரி, 2022

என்னுடைய பதினெட்டாவது நூல் நாககுமார காவியம்

 என்னுடைய பதினெட்டாவது நூல் நாககுமாரகாவியம். இதைப் பாரதி பதிப்பகத்துக்காகப் புதினமாக எழுதி உள்ளேன். மிகச் சுவாரசியமான நூல். 


திங்கள், 14 பிப்ரவரி, 2022

நன்னெறிக் கதைகள். ( எனது 15, 16 வது நூல்கள்)

 சில்வர்ஃபிஷ். பதிப்பகத்தின் மூலம் என்னுடைய பதினைந்தாவது, பதினாறாவது நூல்கள் “ நன்னெறிக் கதைகள் “ வெளிவந்துள்ளன. இந்த புத்தகத் திருவிழாவில் சில்வர்ஃபிஷ் ஸ்டாலில் அவை கிடைக்கும். குழந்தைகளுக்குப் பரிசளிக்க ஏற்றவை.


வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

தாயுமானவர்களும், தந்தையுமானவர்களும் – ஆதலினால் காதல் செய்வீர்.

தாயுமானவர்களும், தந்தையுமானவர்களும் – ஆதலினால் காதல் செய்வீர்.


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்றே அர்த்தம்” என்பது திரைப்பாடல்.  ”காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் “ என்கிறார் முண்டாசுக் கவிஞரும். ” கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடிகட்குக் காதல் என்பது மேடையில் காண்பதற்கு இனிப்பு இயல்வாழ்வில் கசப்புத்தான். “

இல்லறவாழ்வின் அறநெறி விழுமியங்களைக் கடைப்பிடித்தல். அதுதான் சிறப்பென்று புறத்திணையில் சுட்டப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே பெண்களின் கல்வி வீரம் புகழ், புலமை ஆகியவற்றோடு இல்லறவாழ்விற்கு ஏற்றபடி தகவமைத்துக் கொள்ளுதல் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது.

அநேகக் காதல்கள் வெளித்தோற்றத்தை வைத்து மட்டுமே ஏற்படுகின்றன. காதல் இந்த வயதில்தான் வரும். இன்னாருடன்தான் வரும் என்பதெல்லாம் வரையறுக்க முடியாது. டீச்சரைப் பார்த்துப் பால்ய பருவத்தில் காதலிக்காதவர்களே இல்லை எனலாம். காதல் என்பது இயற்கைச் சுழற்சி, பருவத்தின் கிளர்ச்சி, உயிர்களின் உயிர்ப்பு, ஹார்மோன்களின் ஆர்ப்பரிப்பு.

இலக்கியமும், சினிமாவும், ஆன்மீகமும் வரலாறும் காட்டும் காதல்கள் அநேகம். ஷாஜகான் மும்தாஜ், நெப்போலியன் ஜோஸ்பின், கிளியோபாட்ரா மார்க் ஆண்டனி ரோமியோ ஜூலியட், அனார்கலி சலீம், புரூரவஸ் ஊர்வசி, சகுந்தலை துஷ்யந்தன். இவற்றில் அநேகக் காதல்கள் உண்மையானவை, மனமொத்தவை, ஆனால் நிறைவேறாதவை. அவற்றின் நிறைவேறாத் தன்மையின் சோகச் சுவைக்காகவே சிறப்பித்துக் கூறப்படுகின்றன.

சனி, 5 பிப்ரவரி, 2022

செட்டிநாட்டு வீடுகளை ஜொலிக்கச் செய்யும் லெக்ஷ்மி ராமசாமி!

 செட்டிநாட்டு வீடுகளை ஜொலிக்கச் செய்யும் லெக்ஷ்மி ராமசாமி!


லெக்ஷ்மி ராமசாமி பள்ளத்தூரைச் சேர்ந்தவர். சென்னையில் வசிக்கிறார். கணவர் திரு சபாபதி நாராயணன், மகன் செழியன் நாராயணன் என்று கட்டுச்செட்டான குடும்பம். கணவர் PAYHUDDLE என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது மகன் செழியன் பன்னிரெண்டாம் வகுப்புப் படித்து வருகிறார்.

க்ளோரோஃபில் ஃபேஷன்ஸ் என்ற டைலரிங் யூனிட் நடத்தும் இவர் ஒரு இன்சூரன்ஸ் முகவராகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டு வெளிநாட்டுக்கெல்லாம் சென்று வந்திருக்கிறார். மகனது பள்ளியில்  சந்தித்த தோழிகளோடு இணைந்து மாதவி மாஸ்டரிடம் குச்சுப்புடி கற்றுப் பல்வேறு அரங்கங்களில் நிகழ்ச்சி நடத்தி உள்ளார். ஆளுயர ஃபர் பொம்மைகள் எனப்படும் கைவினைப் பொருட்கள் செய்வதிலும் சமர்த்தர். இவை எல்லாவற்றையும் மிஞ்சும் விதமாகத் தனது சகோதரருடன் இணைந்து பழைய செட்டிநாட்டு வீடுகளைப் புதுப்பித்து வருகிறார்.

இவரது குடும்பம், தாயாரின் குடும்பம், கணவரின் குடும்பம் என அனைவருமே இவர் புரியும் அனைத்துத் தொழில்களிலும் மிகவும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்து வருகிறார்கள். இது அவருக்கு மேலும் ஊக்கத்தை அளிப்பதால் தனது எண்ணப்படித் தான் ஈடுபட நினைத்த துறைகளில் எல்லாம் வெற்றியே ஈட்டி வருகிறார்.

தையற்கலையில் ஆர்வம் வந்தது எப்படி என்று கேட்டபோது ”ஒரு தொழில் ஆரம்பிக்கப்படுகின்றது என்றால் ஒன்று ஒரு பெரிய இடைவெளி இருக்கும் இல்லையேல் இருக்கும் தீர்வுகள் நன்றாக இருக்காது அல்லது விலை உயர்ந்ததாக இருக்கும். நான் தொழில் ஆரம்பித்ததற்கு இரண்டாவதே காரணம். எனக்குச் சிறு வயதில் இருந்தே பேஷன் டிசைனிங்கில் ஆசை இருந்தாலும் என்னால் அதைப் பயில முடிய வில்லைபிறகு என்னுடைய தேவைகளுக்காக நான் பல டிசைனர்களைச் சார்ந்திருந்தேன்எனக்கு அது மிகவும் திருப்திகரமாக இல்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...