எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
காதலர் தின வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதலர் தின வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

தாயுமானவர்களும், தந்தையுமானவர்களும் – ஆதலினால் காதல் செய்வீர்.

தாயுமானவர்களும், தந்தையுமானவர்களும் – ஆதலினால் காதல் செய்வீர்.


கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்றே அர்த்தம்” என்பது திரைப்பாடல்.  ”காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் “ என்கிறார் முண்டாசுக் கவிஞரும். ” கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடிகட்குக் காதல் என்பது மேடையில் காண்பதற்கு இனிப்பு இயல்வாழ்வில் கசப்புத்தான். “

இல்லறவாழ்வின் அறநெறி விழுமியங்களைக் கடைப்பிடித்தல். அதுதான் சிறப்பென்று புறத்திணையில் சுட்டப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே பெண்களின் கல்வி வீரம் புகழ், புலமை ஆகியவற்றோடு இல்லறவாழ்விற்கு ஏற்றபடி தகவமைத்துக் கொள்ளுதல் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது.

அநேகக் காதல்கள் வெளித்தோற்றத்தை வைத்து மட்டுமே ஏற்படுகின்றன. காதல் இந்த வயதில்தான் வரும். இன்னாருடன்தான் வரும் என்பதெல்லாம் வரையறுக்க முடியாது. டீச்சரைப் பார்த்துப் பால்ய பருவத்தில் காதலிக்காதவர்களே இல்லை எனலாம். காதல் என்பது இயற்கைச் சுழற்சி, பருவத்தின் கிளர்ச்சி, உயிர்களின் உயிர்ப்பு, ஹார்மோன்களின் ஆர்ப்பரிப்பு.

இலக்கியமும், சினிமாவும், ஆன்மீகமும் வரலாறும் காட்டும் காதல்கள் அநேகம். ஷாஜகான் மும்தாஜ், நெப்போலியன் ஜோஸ்பின், கிளியோபாட்ரா மார்க் ஆண்டனி ரோமியோ ஜூலியட், அனார்கலி சலீம், புரூரவஸ் ஊர்வசி, சகுந்தலை துஷ்யந்தன். இவற்றில் அநேகக் காதல்கள் உண்மையானவை, மனமொத்தவை, ஆனால் நிறைவேறாதவை. அவற்றின் நிறைவேறாத் தன்மையின் சோகச் சுவைக்காகவே சிறப்பித்துக் கூறப்படுகின்றன.

சனி, 14 பிப்ரவரி, 2015

கெட்ரெடி ஸ்டார்ட் .. கோடு போடு.. கட் பண்ணு .. காதல் சொல்லு. :- ( VALENTINE'S DAY SPECIAL )



ரெடி ஸ்டார்ட் .. கோடு போடு.. கட் பண்ணு .. காதல் சொல்லு. :-

ஒருபடத்தில் பரோட்டா சூரி பரோட்டா கடையில் ஒரு போட்டிக்காக  50 பரோட்டா சாப்பிடும்போது சுவற்றில் கரியால் போடப்படும் அடையாளக்கோடுகள்தான் இந்த விளையாட்டிலும் அடிப்படை.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

நிலவுத் தேனீயும் சூரியப் பட்டாம்பூச்சியும்.

1.உன் நினைவு மகரந்தத்தோடு
பட்டாம் பூச்சிகள் சுற்றுகின்றன..
சேகரிக்கும் பூவாகிறேன்.

***********************************

2. உன்னைத் தேடித்தேடிக்
களைக்கும் இமைகள்
உன் வருகைப் பூ மலர்ந்ததும்
படபடத்து பட்டாம்பூச்சியாகின்றன..


**************************************
 
3. தங்கப் பட்டாம்பூச்சியாய் சூரியனும்
வெள்ளிப் பட்டாம்பூச்சியாய் நிலவும்
பூமிப்பூவை மாறி மாறி மொய்த்தபடி..

***************************************

வியாழன், 14 பிப்ரவரி, 2013

காதல் கசப்பா இனிப்பா..



காதல் கசப்பா இனிப்பா..

இன்னிக்கு வாலண்டைஸ் டே.. நாமளும் எதுனாச்சும் கவுஜ சொல்லணும்னு பார்க்குறேன். அல்லது கருத்து பகிரணும்னு பார்க்குறேன். ரோசிச்சு ரோசிச்சு வயசான மாதிரி ஆயிடுச்சு..

"நம் தோழியி"ல் போட்டபடி "காதலுக்கு தூது சென்றேன் . உதைத்தார்கள்." "அத்தைமகனும் தோழியும் பின்ன நானும்" என்றெல்லாம் காதலுக்காவது தூது போயிருக்கமான்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...