எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

சாதனை அரசிகள், ங்கா நூல்களும் சில நட்புள்ளங்களும்

 முன்பு எல்லாம் அதாவது 2009, 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் சென்னை வரும் முகநூல் நட்புக்கள் என்னைப் பார்க்க விழைவார்கள். எனக்கும் அவர்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி உண்டாகும் என்பதால் டிஸ்கவரிதான் எங்கள் மீட்டிங் ஸ்பாட்

நண்பர் அப்துல் ரஹீம், சகோ பிரபாகரன் பிரபா ஆகியோர் அவ்வாறு வந்தவர்களில் முக்கியமானவர்கள். எனது நூல்களான சாதனை அரசிகள் , ங்கா வெளியான நேரம் அது. எனவே அவர்கள் அந்நூலை வாங்கும் பொருட்டு வந்தது எனக்கும் மகிழ்வும் பெருமையும் தந்தது. நன்றி அப்துல் & ப்ரபா தம்பி. 

எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டியின் ரேடியோவுக்காக நண்பர் நாகா ஒரு பேட்டி எடுத்துத் தரும்படிக் கேட்க நான் சாதனை மகளிர் சிலருடன் உரையாடிப் பேட்டி எடுத்துக் கொடுத்தேன். 

அதுவும் சிறப்பான பேர் பெற்றது. 


தம்பி பிரபாகரன் எனது சாதனை அரசிகள் நூலுடன். வந்து சந்தித்தமைக்கும், நூல் வாங்கியமைக்கும் நன்றி தம்பி. 


நண்பர் அப்துல் ரஹீம் எனது முதல் இரு நூல்களுடன் 
அரபு நாட்டில் வேலை செய்யும் இவர் இந்தியா வந்தபோது சென்னை வந்து எனக்காக நேரம் ஒதுக்கிச் சந்தித்தமை பெருமகிழ்வு அளித்தது. நன்றி நண்பரே.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...