2019 ஃபிப்ரவரி பதினாலு அன்று சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் என்னுடைய காதல் வனம் நூல் வெளியிடப்பட்டது.
அன்று ஏராளமான அன்பு உள்ளங்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள்.
ஸ்டில்ஸ் ரவி சாருக்கு நான் சரியான நேரத்தைக் கூறாததால் அவர் முன்பே வந்துவிட்டு வேறு ஃபங்க்ஷன் இருப்பதால் சென்று விட்டார்.
அன்று விழாவை ஸ்பெஷலாக்கியவர் கல்லூரித்தோழி அன்பு ஏர்னஸ்டினின் கணவர் பிரபல புகைப்படக்காரர் அருளானந்த குமார் அவர்கள். ஒரு கிராண்ட் ஃபங்க்ஷன் அளவுக்குப் புகைப்படங்களை எடுத்துத் தள்ளித் திணறடித்துவிட்டார். அவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள் !
அன்புத் தங்கையும் தோழியுமான புவனாவுடன்.
அன்பு ஆச்சி மகள் லெக்ஷ்மி ராமசாமியும், அன்புத் தோழி விஜயலெக்ஷ்மியும். இவர் காரைக்குடி வாசகர் வட்ட நண்பர்.
அன்பின் முனைவர் ஆதிரா முல்லையுடன்.
பதிப்பாளர் வேடியப்பனின் உரை.
ஒவ்வொரு முறையும் எனக்காக ஸ்பெஷலாக வருகை தரும் அன்பின் தோழி நெல்லை உலகம்மை.
மதிப்பிற்குரிய நண்பர் வெளி ரங்கராஜன் அவர்களுடன்.
வெகு தொலைவுகளில் இருந்து வந்து காதல் வனம் நூலை வெளியிட்டுப் பெற்றுக் கொண்டு, உரை நிகழ்த்திக் கலந்து கொண்டு வாழ்த்திய பெருமக்களின் அன்புள்ளங்களுக்கு நன்றி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)