எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 டிசம்பர், 2018

ஸ்ரீ லெக்ஷ்மியின் மூன்று நாவல்கள். ஒரு அறிமுகம்.

ஸ்ரீ லெக்ஷ்மியின் மூன்று நாவல்கள் நோஷன் ப்ரஸ் மூலம் வெளியாகி உள்ளன. இவரது நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய் நாவல் பற்றி நான் எழுதிய விமர்சனம் படித்திருக்கலாம். மிக அழகான எழுத்துக்குச் சொந்தக்காரர்.


சனி, 29 டிசம்பர், 2018

டெஸர்ட் சஃபாரியில் பெல்லி டான்ஸ்.

டெஸர்ட் சஃபாரியில் பெல்லி டான்ஸ்


சாட்டர்டே போஸ்ட் :- விவிஎஸ் சார் கூறும் ஐந்தில் விளையாதது ஐம்பதில் ..?

இந்த வாரமும் சாட்டர்டே போஸ்டில் மிக அருமையான தகவல் ஒன்றுடன் திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் உங்களை சந்திக்கிறார்.

ஐந்தில் விளையாதது அம்பதில் ……… ? மனோஜ்குமார் தன் இரண்டு மகன்களோடு அன்று என் வங்கிக்கு வந்தார். மூத்தவன் எட்டாம் வகுப்பு. இளையவன் ஐந்தாம் கிளாஸ். ஆளுக்கொரு உண்டியலைக் கையில் ஏந்தி இருந்தார்கள். குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறப்பு முகாம் ஒன்றை எங்கள் வங்கி நடத்தியது. ஒரு வருடம் முன்பு. அப்போது கணக்கு தொடங்கிய ஒவ்வொருவருக்கும் ஒரு உண்டியல் கொடுத்தோம். தகரத்தினால் ஆனதுதான். அடிப்பக்கத்தில் சாவி போட்டுத் திறக்கும் வசதி கொண்டது. அதைத்தான் ஒரு குழந்தை ஃபைவ் ஸ்டார் சாக்கலேட்டை இறுகப் பற்றியிருப்பது போல் கையில் வைத்திருந்தார்கள்.

செவ்வாய், 25 டிசம்பர், 2018

ரூஃபியின் ஆணை.

நம்மை விளித்துத் தோழி ஆணையிட்டால் அதை சிரமேற்கொண்டு முடிக்காவிட்டால் எப்படி. அதான் :)

Rufina Rajkumar இந்த விளையாட்டில் என்னைச் சேர்த்திருக்கிறார். நன்றி ரூஃபி.

1. தூக்குத் தூக்கி.

”தூக்குத் தூக்கி” இந்தப் படத்தின் பாடல்கள் எனக்குப் பிடித்தன. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன், சுந்தரி சௌந்தரி நிரந்தரியே,படம் முழுசா ஞாபகம் இல்லை ஆனால் இதில் முக்கியமா சிவாஜி சொன்னதையே திருப்பிச் சொல்லுவார். சின்னப் பிள்ளையில் அப்படி அம்மாவிடமும் தோழிகளிடமும் பேசிவாங்கிக் கட்டி இருக்கிறோம்ல. அதான் ரொம்பப் பிடிச்சிது :) ( கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கேட்பாள் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் நண்பன் இந்த ஐந்தையும் படத்தில் மெய்ப்பிக்க சிவாஜி முயற்சிப்பார். அதை சொல்லி என்னை யாரும் அடிக்கவேண்டாம் எனக் கேட்டுக் கொல்’கிறேன் :)

விளையாட்டின் விதிகள் எளிதானவை. தொடர்ந்து 10 நாட்களுக்கு, உங்களை மிகவும் பாதித்த, உங்கள் ரசனை/ சிந்தனையின் மீது ஓரளவேனும் ஆதிக்கம் செலுத்திய ஒரு திரைப்படத்தின் பிம்பம் ஒன்றை இங்கே பதிவிடவேண்டும். ஏதும் விளக்கவுரைகள் எழுதத் தேவையில்லை; படம் மட்டுமே போதுமானது; விருப்பமிருந்தால் படத்தின் பெயரைச் சொல்லலாம், மேலும் பலர் அதைப் பார்த்து ரசிக்க வாய்ப்பாக அமைய). தினம் உங்கள் நண்பர்களில் ஒருவரை நியமிக்க வேண்டும், விளையாட்டைத் தொடர்ந்து மேற்செலுத்திச் செல்ல.

நான் அழைப்பு விடுப்பது Revathi Narasimhan வல்லிம்மா அவர்களுக்கு

2.சபாபதி.

”சபாபதி” இந்தப் படம் என்னை பெரிசா பாதிச்சிச்சுன்னு, ஆதிக்கம் செலுத்துச்சுன்னுல்லாம் சொல்ல முடியாது. ஆனா சோவோட கண்ணு மாதிரி தெறிச்சு விழுறாப்புல முட்டைக் கண்ணோட டி ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பேசும்போது சிரிப்பு வரும். எங்க ஆயா வீட்டு ஐயா அடிக்கடி டெக்கில ( வி சி ஆர் ) போட்டுப் பார்ப்பாங்க. அப்போ பார்த்தது. ஏவிஎம் தயாரிப்பு. பர்ஃபெக்ட்.

நான் அழைப்பு விடுப்பது Kalyani Shankar நானானிம்மா அவர்களுக்கு.

திங்கள், 24 டிசம்பர், 2018

செலாக்குத்து ஆட்டமும் சலங்கை மனதும்.

2001. வசீகர மாயங்களோடு
அழகாய்த்தானிருக்கிறது
ஒளிந்தோடும் நதி.

2002. ஆடியில் நாம் ரசிக்கும் பிம்பங்கள் தன்னைத் தானே ரசித்துக் கொள்கின்றன 

2003. நம்ம நடிப்புக்கும் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுற எழுத்துக்கும் அர்த்தம் இருக்கான்னு இங்க நிறையப் பெண்கள் நினைக்கலாம். இன்று எனக்கு இருவர் அதன் தாக்கம் நிச்சயமாய் இருக்குன்னு மெய்ப்பிச்சு இருக்காங்க.காலையில் ராஜ்குமார் பார்த்திபன் கௌதமியின் நடிப்பைப் புகழ்ந்து அவர் நட்பைக் கோரியது. இப்போது சாய் இந்துவின் கவிதைகளால் கவரப்பட்டு சேலம் செந்தில் அவர் கவிதைகள் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து எல்லாம் சொல்லித் தேடிட்டு இருக்காரு. பார்க்கவே சந்தோஷமா இருக்கு.

ஆமாம் சாய் இந்து டீ ஆக்டிவேட் பண்ணிருக்காங்களா.

#உலகம்_உங்களைத்_தேடுகிறது_தொடர்ந்து_செயல்படுங்கள்_பெண்மணிகளே.

2004. வீழ்ச்சிதான் பயணமென்றாலும்
தரையிறங்காமல் இருப்பதில்லை
பொங்கித் ததும்பும் அருவி.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

கடமை தவறியதால் அழகை இழந்த தர்மராஜன். தினமலர். சிறுவர்மலர் - 49.

கடமை தவறியதால் அழகை இழந்த தர்மராஜன்
ரு காலத்தில் மிக அழகாக இருந்த இளைஞன் ஒருவன் மிகப் பயங்கரமான உருவத்தை அடையும்படி நேரிட்டது. அந்த அழகு தர்மராஜனான அவனை அப்படிச் செய்தவர் கயிலைமலையில் வாழும் பரமேஸ்வரன்தான். அதுவும் தர்மராஜன் செய்துவந்த தொழிலின் நிமித்தம்தான். அது என்ன தொழில். ஏன் அவர் அழகை இழந்தார் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
ர்மராஜனின் கொள்ளுப்பாட்டன் மகாவிஷ்ணு. அவரது மகன் பிரம்மா தர்மராஜனின் பாட்டன். அவரது மகன் சூரியன் தர்மராஜனைப் பெற்றவர். சூரியனுக்கும் உஷாதேவிக்கும் பிறந்தவன் தர்மராஜன் எனப்படும் காலதேவன். இவனை யமா என்றும் அழைப்பார்கள். இவனுக்கு இவனது தாய் உஷாதேவி மூலம் மனு என்ற சகோதரனும், யமுனை என்ற சகோதரியும் உண்டு. உஷாதேவி உருவாக்கிய இன்னொரு தாயான சாயாதேவி மூலம் சனி, சாவர்ணி மனு என்ற சகோதரர்களும் தபதி என்ற சகோதரியும் உண்டு.
சிறுவயதில் சாயாதேவியைத் தன் தாய் என நினைத்து வந்த யமா ஒரு கட்டத்தில் அது தன் தாய் அல்ல, தாயின் சாயல் கொண்ட தாய் உருவம் எனப் புலப்படுகிறது. அதனால் தன் தந்தையைத் தாய் ஏமாற்றுவதாகக் குறை கூறி கோபத்தால் காலால் எட்டி உதைத்து விடுகிறான். சாயாதேவி உடனே கோபமுற்று அவனது கால் புண்ணாகும்படி சபித்துவிடுகிறார்.

வெள்ளி, 21 டிசம்பர், 2018

இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக என் எழுத்துக்கள் பற்றியும்.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் - 2018 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி அழகப்பா பல்கலையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகவும் அய்க்கண் ஐயா, பழனி இராகுலதாசன் ஐயா ஆகியோருடன் பங்கேற்றேன்.

20 ஆம் நூற்றாண்டு சிறுகதை புதின ஆசிரியர்களில் எம் ஏ சுசீலாம்மா.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப்புதின சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் சுசீலாம்மா பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை தமிழ் உயராய்வு மைய இயக்குநர் செந்தமிழ்ப்பாவை அம்மா எழுதி இருக்கிறார்கள். அக்கட்டுரையை உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்துள்ளேன்.

புதன், 19 டிசம்பர், 2018

காரைக்குடிச் சொல்வழக்கு. சம்போவும் கவுடும்.

1141. வேதபாடசாலை – ரிக் வேதம் பயிற்றுவிக்கும் பாடசாலை. பாடசாலை கட்டுவித்து அதில் கனபாடிகள் ஒருவர் வேதத்தை மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பிப்பார். இதற்கு என இறையிலி நிலங்கள் மூதாதையரால் எழுதப்பட்டு அவற்றில் இருந்து கிடைக்கும் பயன்கள் ( நெல், தானியம் காய்கறி ) இந்தப் பாடசாலையில் பயில்வோருக்கு உணவாக வழங்கப்படும். பாடசாலை நிர்வாகச் செலவுக்கும் பயன்படும்.

1142. பசுமடம் – கோசாலை, தினப்படி பூஜைக்கு கடவுளுக்கு அபிஷேகம் செய்யப் பால் வழங்கும் பசுக்களைப் போஷித்துப் பராமரிக்கும் இடம். நகரத்தார் பரிபாலனம் செய்யும் ஒவ்வொரு கோவிலுக்கும் அநேகமாக பசுமடம் இருக்கும். இப்பசுமடத்தில் முதிர்ந்த மாடுகளையும் பராமரிப்பார்கள்.

1143. சம்போ (பூஜை) – காசியில் சிவனுக்கு செய்யப்படும் பூஜை சம்போ பூஜை.  காசி விஸ்வநாதர் கோயிலில் ஆறுகாலமும் நடக்கும் பூஜை நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திலிருந்து கூடைகூடையாய்ப் பூக்கள், அபிஷேகதிரவியங்கள் ஆகியன கொண்டு செல்லப்பட்டு நடத்தப்படும். சத்திரத்திலிருந்து ஆறு காலமும் மேள தாளத்துடன் தலைமேல் பித்தளைப் பூக்குடலைகளையும் அபிஷேகப் பொருட்களையும் சுமந்து பணியாளர்கள் முன்னே செல்ல அவர்களுடன் சத்திரத்தில் தங்கி இருக்கும் நகரத்தார் மக்கள் கோவிலுக்குச் சென்று அபிஷேகத்தையும் அலங்காரத்தையும் தீபாராதனையையும் கருவறையின் படியில் அமர்ந்து தரிசிக்கலாம். இந்தப் பூஜை ஊர்வலத்த்தும் பூஜைக்கும் சம்போ பூஜை என்று பெயர்.  

1144. மகேஸ்வர பூஜை – சிவனுக்கு செய்யும் பூஜை. திருமண சமயங்களில் வேண்டிக்கொண்டவர்கள் இப்பூஜையைச் செய்வார்கள். ஏழு பானைகளில் பொங்கலிட்டுப் படைப்பார்கள். மிக விமரிசையான பூஜை இது.

1145. கார்த்திகை வேல் பூஜை:- கார்த்திகை மாதத்துக்காரர்கள் ( விரதமிருப்பவர்கள் ) கார்த்திகை மாதம் ஒவ்வொரு சோமவாரமும் முருகனின் தெண்டாயுதம் வேலுக்கு அபிஷேகம் செய்து மாவிளக்கு வைத்து அர்ச்சனை செய்து ஏழுவகைக்காய்கறிகளுடன் சர்க்கரைப் பொங்கல் அன்னம் படைத்து பூஜித்து ஊரோடு உணவிட்டு உண்பார்கள். சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம், அறுபடைக் கவசம், ஸ்கந்த குரு கவசம், காவடிப் பாடல்கள், வேல் மாறல், வேல் வகுப்பு,  பாமாலைப் பாடல்கள் படிப்பார்கள். இதற்கு கார்த்திகை வேல் பூஜை என்று பெயர்.

திங்கள், 17 டிசம்பர், 2018

தீர்வைத் தேடும் பார்வை – ஒரு பார்வை


தீர்வைத் தேடும் பார்வை – ஒரு பார்வைஇந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை.


ஓலமிடும் ஆற்றுமணல் – ஒரு பகீர்ப் பார்வை.
இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஆறாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வையாசி 19 – ஒரு பார்வை.


வையாசி 19 – ஒரு பார்வை.


இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

வெள்ளி, 14 டிசம்பர், 2018

யக்ஞவல்கியரை ஞானத்தால் வென்ற கார்கி வாசக்னவி. தினமலர். சிறுவர்மலர் - 48.

யக்ஞவல்கியரை ஞானத்தால் வென்ற கார்கி வாசக்னவி. :-

ரு விஷயத்தைத் தெரியும் என்றால் தெளிவுற உரைக்க வேண்டும். தெரியாது என்றால் உண்மையை ஒப்புக்கொண்டு அதைக் கற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் ஒரு முனிவர் தனக்கு எல்லாம் தெரியும் என்ற இறுமாப்போடு இருந்தார். அவரின் இறுமாப்பை ஒரு பெண் தகர்த்தாள். அந்தப் பெண் யார் அந்த முனிவர் யார் என்று பார்ப்போம் குழந்தைகளே.
வேதகாலத்திலேயே பெண்கள் கல்வி கற்றிருந்தார்கள். மைத்ரேயி, லோபமுத்ரா போல் கார்கி வாசக்னவி என்ற பெண் ரிஷியும் அவர்களில் முக்கியமானவர். இவர் சிறந்த பெண் துறவி. தத்துவ ஞானி, பிரம்மவதனி என்று அறியப்பட்டவர். ப்ரஹதாரண்ய உபநிஷத்தில் இவரது புகழ் பேசப்படுகிறது. 

இவர் கார்கி முனிவரின் மகள். அந்தக் காலத்திலேயே ஆண் குழந்தைகளைப் போல் ஏழு வயதில் உபநயனம் செய்விக்கப்பட்டு குருகுலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் பயின்றவர். தத்துவங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் கரை தேர்ந்தவர். மிதிலாபுரி அரசர் ஜனகரின் சபையில் இருந்த ஒன்பது இரத்தினங்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர்.
க்ஞவல்கியரும் சாமான்யப்பட்டவரில்லை. இவரது பெற்றோர் பிரம்மரதன் , சுனந்தா என்போர். இவரது மாமா வேதங்களில் சிறந்த வைசம்பாயனர் என்பார். யக்ஞவல்கியர் சூரியனிடமிருந்து யஜுர்வேதத்தைக் கற்று அதை உலகுக்கு அளித்தவர். இவரும் ஜனகரின் அவையில் இடம்பெற்றிருந்தார்.

புதன், 12 டிசம்பர், 2018

சிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றி அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரை ஒளி, ஒலி வடிவில்.

அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரையை என் மகன் வீடியோ எடுத்திருக்கிறான் அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

மேலும் பேச ஆரம்பிக்கும்போது நான் ரெக்கார்ட் செய்து கொண்டேன். அதை சின்னவன் சவுண்ட் க்ளவுடில் போட்டு அனுப்பி உள்ளான்.செவ்வாய், 11 டிசம்பர், 2018

வான்படித்துறையும் வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும்.

1981. வாகீசரும் வாதவூராரும் வீட்டுமனும் இன்றைய காலையை உயிர்ப்பித்தார்கள். ராய சொவின் பாரதி பரலியாருக்கு எழுதிய கடிதம் நூற்றாண்டுக்குப் பின்னும் ஒளிர்கிறது.

1982. சுயத்தை திருப்திபடுத்தவே எழுதுகிறோம். பசி தீர்வதாயில்லை.  ஆன்ம அமைதிக்குள் ஒடுங்கும் நேரம் சாத்யமாகலாம்.  அப்போதும் அது நீராயும் காற்றாயும் நிரம்பி இருக்கும்.

1983. Senthil ஒரே நாள்ல சாட்டர்டே போஸ்ட்/ஜாலிகார்னர் ஆல்பத்துல நூத்திப்பதினோரு போஸ்ட்லயும் லைக்ஸா. கிறுகிறுன்னு வருது. விறுவிறுன்னு எழுதி அனுப்பவும்

1984. கார்த்திக் உங்க ஃபோட்டோ போலவே வரையப்பட்ட கோலம்.

1985. ஹாஹா ட்ரெண்டிங்ல ஒரு சுவாரஸியமான விஷயம் . ( ஃபேமஸ் ) எழுத்தாளரால் ப்ளாக் செய்யப்பட்டோர் குழுன்னு ஒரு பேஜ் இருக்கு.
என்னவெல்லாம் ஆரம்பிக்கிறாங்க. . மிடில.

விளையாட்டு வினையான கதை . தினமலர் சிறுவர்மலர் - 47.


மந்தரையின் வடிவில் வந்த விதி :-
நாளை விடிந்தால் பட்டாபிஷேகம். இளவல் ராமன் முடி சூடப் போகிறான். ஆனால் அதற்குள் இதென்ன கோலம் ? அவனது பிரியத்துக்குரிய சிற்றன்னை கைகேயி அவனைக் காட்டுக்குப் போகச் சொல்கிறாளே. என்ன நிகழ்ந்தது. ராமன் செய்த குற்றம் என்ன என்று போய்ப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அயோத்தி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடெல்லாம் மாவிலைத் தோரணங்கள். மாக்கோலங்கள். விளக்கு அலங்காரங்கள். சாதாரண குடிமக்களின் இல்லமே ஜொலிக்கும்போது பட்டாபிஷேகம் நடக்கப்போகும் அரண்மனை ஜொலிக்காதா என்ன.. அதுவும் ஜாஜ்வல்யமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அகிலும் சாம்பிராணியும் தூபமும் வேறு மணமூட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அந்த அரண்மனையில் கூனி ஒருத்தியின் இதயமும் கூனலாக இருண்ட எண்ணங்களோடு இருந்தது.

சனி, 8 டிசம்பர், 2018

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக.20 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் 6. 12.2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. அதில் மூன்று சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்க அழைப்பு வந்தது.

பேராசிரியர் திரு. அய்க்கண் அவர்கள், பேராசிரியர் திரு. இராகுலதாசன் அவர்கள் ஆகியோரோடு வலைப்பதிவர் & எழுத்தாளரான என்னையும் தமிழ் உயராய்வு மையத்தின் இயக்குநர் திருமதி செந்தமிழ்ப்பாவை அழைத்திருந்தார்கள்.இந்தக் கருத்தரங்கம் லெ.சித.லெ. பழனியப்ப செட்டியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.

சாட்டர்டே போஸ்ட். ஜாயிண்ட் அக்கவுண்ட் வகைகள் பற்றி விவிஎஸ் சார்.

திரு வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன் சார் பதினைந்து நாட்களுக்கு முற்பட்ட சனிக்கிழமைப் பதிவிலும் இன்சூரன்ஸ் பற்றிச் சொல்லி இருந்தார். சண்டேன்னா ரெண்டுங்கிறாங்க பேப்பர்காரங்க. நம்ம ப்லாகில் சாட்டர்டேன்னா ரெண்டு. ஏனெனில் செந்திலிடம் ஒன்றும், விவி எஸ் சாரிடம் ஒன்றும் வாங்கிவிட்டேன்.

தொடர்ந்து விவிஎஸ் சார் அவர்கள் இன்சூரன்ஸ், முதலீடு, வங்கிப் பரிவர்த்தனைகள் பற்றி என் ப்லாகுக்கு விவரங்கள் தந்துதவுமாறு கேட்டிருக்கிறேன். அதனால் இன்று அவர் ஜாயிண்ட் அக்கவுண்டில் ஃபார்மர் பற்றிச் சொல்லியிருப்பதைப் பகிர்ந்திருக்கிறேன். எனவே போனஸா சார் கொடுக்கும் விவரங்களை அறிந்து மற்றவர்க்கும் அனுப்ப வேண்டுகிறேன்.


நீங்கள் ஒரு ஃபார்மர் ஆவது சேஃப் !
எனக்கு ஒரு மகன் மட்டுமே. மனைவி இறந்து விட்டாள். மகன் கொஞ்சம் செலவாளி. அவனை எப்படி நான் ஜாயிண்ட் அக்கவுண்டில் சேர்ப்பது ? பாதுகாப்பாக இருக்காதே ?

சாட்டர்டே ஜாலிகார்னர். செந்தில் நடேசனின் - வரிசை கொடுத்ததும் வங்கி அனுபவமும்.

ஏழெட்டு ஆண்டுகளாக முகநூலில் நண்பராயிருப்பவர் செந்தில் கே நடேசன். அவ்வப்போது குண்டச்சி தேவசேனாவுக்கு ( அனுஷ்கா) என்று குறிப்பிட்டுக் கவிதைகள் படைத்து சிரிக்க வைத்தவர். இதை காதலும் காதல் சார்ந்த இடமும் என்ற வலைப்பதிவில் பதிவேற்றி இருக்கிறார். !

இவரின் முகநூல் பக்கத்தில் நிறைய தன்னம்பிக்கை போஸ்டுகள் பார்த்திருக்கிறேன். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன் . அவர் எழுதியது உங்களுக்காக இங்கே.

சாட்டர்டேன்னா இரண்டு. ஏன் பத்ரிக்கை எல்லாம் சண்டேன்னா இரண்டு பதிவு போடுறத ஆதரிக்கிறீங்கள்ல. அதுனாலதான் இன்னிக்கு விவிஎஸ் சாரோட ஜாயிண்ட் அக்கவுண்ட் பதிவும், செந்திலோட இந்தப் பதிவும். போஸ்ட் மழையில் என்ஜாய் பண்ணுங்க. :)

///பெயர்:- செந்தில் கே நடேசன் தந்தை: நடேசன் தாய்: அலமேலு ஆச்சி ஊர் :- சிலம்பவேளாங்காடு - பட்டுக்கோட்டை தொழில்: விவசாயம் தற்போதைய வசிப்பிடம்: தோஹா - கத்தார் தற்போதைய வேலை:- கொள்முதல் அலுவலர் பொழுதுபோக்கு: வாசித்தல், யோசித்தல் மற்றும் எழுதுதல் அவ்ளோதான்/////

என்னதான் கன்டினியூ ரீடிங் வர அளவுக்கு பெரிசு பெரிசா எழுதி பேஸ்புக்ல போஸ்ட் பண்ணாலும்....சார்ட்டர்டே போஸ்ட் க்கு எழுதுங்கன்னு ஆச்சி சொன்னப்போ.... ​ ஒன்னுமே தோணல... சார்ட்டர்டே போஸ்ட்ல ஏற்கெனவே போட்ட போஸ்ட்களை எல்லாம் பார்த்தப்போ , அங்கே ஏற்கெனவே பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் எழுத வச்சிருந்தாங்க ஆச்சி....

வியாழன், 6 டிசம்பர், 2018

அழகப்பா பல்கலைக்கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாழ்த்துரை.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் டிசம்பர் ஆறாம் தேதியன்று தமிழ்ப்பண்பாட்டு  மையத்தின் சார்பில் 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்களின் பன்னாட்டுக் கருத்தரங்கம் ( 2018 ) நடைபெற்றது.

சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசியான் கவிஞர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு  36 கவிஞர்களுள் ஒருவராகக் கவிதை சொல்லும் வாய்ப்புக் கிட்டியது.  அது மலாயில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகவும் வெளிவந்தது. அங்கேயே மலாயிலும் வாசிக்கப்பட்டது.இந்த வருடம் சிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்து கொண்டு கருத்தரங்க ஆய்வுக் கோவையைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கும் அரிய வாய்ப்பும் கிட்டியுள்ளது.

புதன், 5 டிசம்பர், 2018

தமிழ்க்கடல் இராயசொவின் பார்வையில் மகாகவி பாரதி.இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

செவ்வாய், 4 டிசம்பர், 2018

அம்மா - ஒரு பார்வை.

இந்த விமர்சனம் அமேஸானில் ”மொழிபெயர்ப்பு நூல்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்


அழகப்பா பல்கலையில் எனது கவிதை சூலும் சூலமும்.

மகிழ்வுடன் பகிர்கிறேன். அழகப்பா பல்கலைக்கழகத்தில் எனது கவிதை ஒன்றும் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. :)

சூலும் சூலமும் என்ற தலைப்பில் அன்னபட்சி கவிதைத் தொகுதியில் வெளியான அக்கவிதை அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வியின் முதலாமாண்டு முதல்பருவப் பாடத்திட்டத்தில் இக்கால இலக்கியம் என்ற தலைப்பில் ( 2018 - 2019 )  இடம் பெற்றுள்ளது.

திங்கள், 3 டிசம்பர், 2018

சாம்பவி க்ரியா- இனிக்கும் சுவாசம்.
இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( நான்காம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

சனி, 1 டிசம்பர், 2018

புரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள். தினமலர். சிறுவர்மலர் - 46.

புரவியைப் பிடித்த வீர இரட்டையர்கள்.


தேசம் தேசமாகச் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது ஒரு புரவி. அதை ஒருவரும் கட்டி வைக்க முயலவில்லை. ஆனால் இரட்டையராய்ப் பிறந்த சின்னஞ்சிறுவர்கள் அதைக் கட்டி வைத்துவிட்டார்கள். அயோத்தி மாநகரமே போருக்கு வந்தும் அதை மீட்க முடியவில்லை. கடைசியாக ராமன் வந்துதான் மீட்டார். அப்படிப்பட்ட வீரச் சிறுவர்கள் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

வால்மீகி முனிவரின் ஆசிரமம். காலைச் சந்தி. அங்கே முனிவர்கள் தினசரி பூஜை புனஸ்காரங்கள் செய்து வேதபாராயணம் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். வால்மீகி முனிவரின் அருகே இரட்டை நிலவு போல் காட்சி தரும் இரு சிறுவர்கள் அவருடைய பூஜைக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர் லவன் மற்றும் குசன். சீதைக்கும் ராமருக்கும் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

இவர்கள் தாய் சீதை வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தபின் இவர்களைப் பெற்றாள். அதனால் அவர்களுக்கு ராமர் தம் தந்தை என்பது தெரியாது.
”சாமி ..ஒரு குதிரை சர்வ அலங்காரத்தோட நம்ம ஆசிரமம் பக்கமா வருது. அது யாரோடதுன்னு தெரியல “ என்று சொன்னார் ஒருவர்.
“அலங்காரத்தோட வருதுன்னா அது அஸ்வமேத யாகக் குதிரையா இருக்கலாம் “ என்று சொன்னார் வால்மீகி முனிவர்.
“அது ஏன் இங்கே வருது. அதப் போய் நாங்க பிடிச்சுக் கட்டி வைக்கிறோம். அனுமதி கொடுங்க” என்று கேட்டார்கள் சிறுவர்களான லவனும் குசனும்.
Related Posts Plugin for WordPress, Blogger...