எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சாக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 டிசம்பர், 2018

சாக்குப் போக்குச் சொல்லாதீங்க.


சாக்குப் போக்குச் சொல்லாதீங்க. :-

சாக்குப் போக்குச் சொல்லாதீங்க

  ஏதேனும் ஒரு விஷயத்தைச் செய்ய தாமதப்படுத்திக் காரணம் சொல்பவர்களைப் பார்த்து “ சாக்குப் போக்குச் சொல்லாதீங்க “ என்று கடிவது நடைமுறை. சுறுசுறுப்பில்லாமல்  வேலை செய்து கெடுப்பவர்களைப் பார்த்து “நொண்டிக்குதிரைக்குச் சறுக்கினதே சாக்கு “ என்று கிண்டலடிப்பதும் உண்டு. சாக்கு என்பது இங்கே தட்டிக் கழிப்பது என்ற பொருளில் வருகிறது.  ’பை’ என்ற ஓரெழுத்துச் சொல்லுக்குத் தமிழில் சாக்கு என்றொரு அர்த்தமும் உண்டு. !

  சணல் செடியின் தண்டுகளில் இருந்து இருந்து சணல் பிரித்தெடுக்கப்பட்டுச் சாக்கு தயாரிக்கப்படுகிறது. இது வங்காளத்தில் அதிகம் விளைவதால் வங்காளத்தின் தங்க இழை என்று அழைக்கப்படுகிறது. பதினேழாம் நூற்றாண்டில் ஸ்காட்லாண்டின் டண்டி என்ற இடத்தில் உள்ள ஆலைகளில் இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுத்துப் பயன்பாட்டுக்கு வந்தது. சணல் ஒரு பணப்பயிரும் கூட