எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 பிப்ரவரி, 2012

ஃப்ளாட் வாங்குவது புத்திசாலித்தனமா..? ஹனு ரெட்டி ரியால்டியின் வைஸ் பிரசிடெண்ட் அருண் குமாரின் ஆலோசனை.


இன்றைய மத்தியதரக் குடும்பத்தின் ஆசைக் கனவுகளில் ஒன்று சொந்த வீடு.. இந்த சொந்த வீடு என்பது இன்றைக்கு இருக்கும் இட விலை உயர்வு., உயர்ந்து வரும் கட்டுமானப்பொருட்களின் விலை, கட்டுமானச் செலவு பொறுத்து நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.. செலவைக் கட்டுப்படுத்திப் புறநகரிலோ. அல்லது சிறுநகரங்களிலோ இடம் மற்றும் வீடு அல்லது ஃப்ளாட்டுக்களில் முதலீடு செய்ய நினைக்கும்போது இந்த முன்னெச்சரிக்கைகளைப் படித்துவிட்டு முதலீடு செய்யுங்கள். உங்கள் வாழ்நாளுக்கான கனவு இல்லமோ., எக்கனாமிக் ஃஃப்ளாட்டோ., எதாகயிருந்தாலும் தேர்ந்து செய்யும் முதலீடு உங்கள் பிற்கால வாழ்க்கைக்கான சேமிப்பாகும்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இவள் புதியவளில் டிப்ஸ்..7.1.குக்கரில் சாதம் வைக்கும் போது வெளியில் தண்ணீரில் எலுமிச்சை தோல் அல்லது புளி போட்டு வைத்தால் குக்கர் கருக்காது.

2. ஹிந்தி, கைவேலைப்பாடுகள், ஸ்லோகம் தெரிந்தவர்கள் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக சொல்லிக் கொடுக்கலாம். படிக்க சிரமப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கலாம்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

ஃபெட்னாவின் வெள்ளி விழா மலருக்கு படைப்புக்கள் அனுப்ப.. (FETNA )

அமெரிக்காவில் வசிக்கும் தோழி விஜி சத்யா அவர்களுக்கும், வலைப்பதிவர் பழமை பேசிக்கும் முதலில் நன்றிகள். முகநூல் நண்பர் நாகூர்கனி காதர்மொஹ்தீன் பாஷா அவர்களுக்கும் நன்றிகள். வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை நடத்தும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் படைப்புக்களை மார்ச்சுக்குள் அனுப்பி வையுங்கள். அதன் வெள்ளிவிழா மலரில் உங்கள் படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் இடம் பெறும்.

/////தமிழ்ச்சங்கப் பேரவை வெள்ளி விழா - படைப்புகள்

வணக்கம். வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளி விழாவானது, முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாக எதிர்வரும் சூலை 6. 7. 8 ஆகிய நாட்களில், பால்டிமோர் சமூக அரங்கில் எழுச்சியோடும் மிடுக்கோடும் பெருமிதத்தோடும் கொண்டாடப்படவிருக்கிறது. வெள்ளி விழா குறித்துக் கூடுதல் விபரங்களைப் பெற பேரவையின் வலைதளத்தினைப் பாவிப்பீர்களாக!

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

மணல் சிற்பம்..

மணல் சிற்பம்.:-
********************

கடற்கரையில் நீ
அளைந்த மணலை
துப்பட்டாவில் ரகசியமாய்
அள்ளி வந்தேன்.

கண்ணாடிப் பைக்குள்
இடம் மாறி
அன்றைய மாலையோடு
உறைந்திருக்கிறது அது.

வியாழன், 23 பிப்ரவரி, 2012

செல்..பேசி.. காதல்..

செல்.. பேசி.. காதல்..
********************************

முகங்களை படங்களில் மட்டுமே
பார்த்துக் காதலித்தார்கள்.

குரல்களின் தரிசனத்துக்காய்
ஆறுகாலப் பொழுதும் தவமிருந்தார்கள்.

தேவன் தேவியின் ததாஸ்துவோடு
வட்டமிடத் தொடங்கின தலைமேலே குரல்கள்.

புதன், 22 பிப்ரவரி, 2012

துண்டான முகம்..


துண்டான முகம்.:-
******************************

இன்னொன்றான முகம்
கழன்று விழுந்தது நேற்று.

சம்பங்கித் தோட்டத்தில் நடந்தது
இந்த முகம் உரிக்கும் உற்சவம்.

ஆட்டில் உரிந்த தோலாய்
கவிச்சியடித்துக் கிடந்தது அன்பு.

சனி, 18 பிப்ரவரி, 2012

அருண் திருமணமும், ஆராதனாவின் , ”ங்கா..” வெளியீடும்...

திரு தாமோதர் சந்துரு அண்ணனின் நண்பரும் எனது முகநூல் நண்பருமான திரு . ராஜ் சிவாசுந்தர். புத்தகம் வெளியிடும் முன் தங்கள் இல்லத்துக்கு வரும்படி அழைத்துச் சென்று உபசரித்தார். மேலும் வீட்டின் அருகிலுள்ள ராஜ கணபதி ஆலயத்தில் அந்தப் புத்தகத்தை வைத்து ஆசி பெறும்படி செய்தார்.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

ஜெர்மானிய விருதுக்கு நன்றி ஜிஜி. ( LIEBSTER BLOG AWARD)

வார்த்தைச் சித்திரங்கள் என்ற வலைப்பதிவு எழுதிவரும் தங்கை ஜிஜி அவர்கள் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்கள். இது ஜெர்மானிய விருதாம். இதை 5 பேருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமாம்.

புதன், 15 பிப்ரவரி, 2012

ஈரோடு சங்கமத்தில் வலைப்பதிவர்களின் ஆஸ்காருக்கு நன்றி

சமூக கலை இலக்கிய இணையப் பங்களிப்புக்காக அவரவர் பெயர் பொறித்த ஸ்பெஷல் விருது.!
ஈரோடு .. என் வாழ்வில் மறக்க முடியாத ஊர்.. பதினைந்து வலைப்பதிவர்களை ஆஸ்கார் வாங்கியது போல மகிழச் செய்த மங்களகரமான ஊர். எவ்வளவோ வேலைகள் செய்கிறோம். அங்கீகாரம் கிடைக்கும் அல்லது பணம் கிடைக்கும். ஆனால் இலக்கியம் நமக்காகவே படைக்கிறோம். நம் சொந்த திருப்திக்கு. அதை மற்றவர்களும் பாராட்டும்போது தன்னம்பிக்கை பெருகுகிறது.

சங்கமத்துக்கு அழைத்து காலையில் மிக விமரிசையான விருந்துக்குப் பின் ஈரோடு வலைப்பதிவர்களை சந்தித்தோம். என்னுடையது ஒரு 2 மாச லேட் போஸ்ட். இன்னும் பலர் அது பற்றி விரிவாக பகிர்ந்திருக்கிறார்கள். நிறைய கமிட்மெண்ட்ஸ் மற்றும் என்னுடைய புத்தகம் தொடர்பாக அலைந்ததில் மனதை ஒன்றுபடுத்து எழுத இயலாமல் போயிற்று. தனியாகக் கலந்து கொள்ளச் சென்ற வலைப்பதிவர்களுக்கு ஒரு இடத்திலும், தம்பதிகளாக வந்தவர்களுக்கு சண்முகா லாட்ஜிலும் தங்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுவரை கணவர் கூடவே நாம் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறோம். ஆனால் முதல் முறையாக நம்மை , நம் எழுத்தை அங்கீகரித்து அவர்கள் அழைத்து தங்கச் சொன்னது மிகப் பெருமையாக இருந்தது. ஒற்றைப் பைசா சம்பாதிக்கிறோமோ இல்லையோ , இலக்கியம் நமக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்ற பெருமிதம். அந்தப் பெருமிதத்தை உணரச் செய்த திரு . தாமோதர் அண்ணனுக்கும் ஈரோடு வலைபதிவர் குழுமத்துக்கும் என்ன நன்றி சொன்னாலும் தகும். ரயில்வே ஸ்டேஷனில் இருந்து காரில் அழைத்து வந்து ஹோட்டலில் விட்டார்கள். இரட்டைப் படுக்கைகள், வெந்நீர், குளிர்சாதனம் , சுத்தமான பாத்ரூம்கள், உடை மாற்றுமிடங்கள் என்று நல்ல தங்குமிடம் அது. நன்கு உறங்கி ஓய்வெடுத்து மறுநாள் திரு சீனா சார் அவர்களின் குடும்பத்தோடு சங்கமம் நடக்கும் ஹாலுக்கு சென்றோம். நல்ல காலை உணவுக்குப் பின் ஆரம்பமாயிற்று சங்கமம் நிகழ்வுகள்.

திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். வலைப்பதிவர்களின் வலிமை குறித்து சொன்னார்கள். ஈரோடு புத்தகத்திருவிழாவில் நுழைவுத் தொகை வாங்காமல் எல்லாரையும் அனுமதிப்பதாக சொன்னார்கள். ஈரோடு புத்தக வாசிப்பாளர்கள் மிகுந்த ரசனையான நகரம். அங்கே மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவராக ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார். அதே அவரின் பேச்சிலும் வெளிப்பட்டது. தாமோதர் சந்துரு அண்ணன் அவர்களும் சிறப்பாக பேசினார்கள்.

நன்றி உரை என்று கூற முற்பட்டபோது ஒரு எண்ணக் கோர்வையில்லாமல் பேசினேன். எங்கு ஆரம்பிப்பது எப்படி முடிப்பது எனத் தெரியாமல்.
வலைப்பதிவர்களின் ஆஸ்காரைக் கையில் வாங்கியதும் கொஞ்சம் கிறுகிறுத்தது உண்மை. பத்ரிக்கையாளராக என்னை ஆக்கியதே வலைப்பதிவர் என்ற முகம்தானே.. அந்த முகத்தை என்றும் இவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை கெடாமல் காக்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

விருதும் விருந்தும் கொடுத்தும் களைக்காத மனதோடும், முகத்தோடும் அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்த திரு தாமோதர் சந்துரு அண்ணாவுக்கும் ஈரோடு வலைப்பதிவர் குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

ஈரோடு சங்கமமும், வெல்விஷர் தேவதைகளும்..


ஈரோடு சங்கமமும் வெல்விஷர் தேவதைகளும்..

2011ஆம் ஆண்டு தை பிறந்த போது சென்னை சங்கமத்தில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒவ்வொரு வருடமும் தை பிறக்கிறது. ஏதோ ஒரு வழியும் பிறக்கிறது. 2010 வலைச்சரம் ஆசிரியரானதில் இருந்து இரண்டு வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக தன்னம்பிக்கை அதிகரித்தது. வலைச்சரத்தில் ஆசிரியப் பணி ஆற்ற அழைத்து தன்னம்பிக்கை ஊட்டிய சீனா சாருக்கு நன்றி..

சனி, 11 பிப்ரவரி, 2012

மதிப்பீடு...

மதிப்பீடு..:-
*************************

தோட்டத்தில்
குயில் கூவியது.
மயில் அகவியது.
வழிப்போக்கர்கள்
அடித்துக் கொண்டார்கள்

இது அழகென்றும்
அது கறுப்பென்றும்.
காக்கைக் கூட்டில்
முட்டையிடும்
கான(க)க்குயிலென்றும்.

இலையாய் மிதந்தபடி..

மோதிரக்கையால்
மெல்லமாக செல்லக்
குட்டுப்பட்டாலும்
அனுபவிப்பவரின்
எண்ணங்களில்
ஒளிந்திருக்கிறது
வலிக்கான இலக்கணம்..
தொட்டுப்பார்க்கும்தோறும்
புடைப்பற்ற இன்பமாய்..

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

உன்னுடையது எது,,?

ஜடாமுடியாயோ.,
குறுந்தாடியாயோ
இருப்பது குறித்து
உலகுக்கு கவலையில்லை..

க்ரீடமாகவோ ஹாரமாகவோ
அழகுபடுத்திக் கொள்வதும்.,
அசிங்கப்படுத்திக் கொள்வதும்,
அதைப் பெருமையாய் எண்ணுவதும்
ஒற்றைக் கண்ணோட்டமே..

வியாழன், 9 பிப்ரவரி, 2012

பாரதி மணி ஐயாவின் ஆசியுரை சாதனை அரசிகளை வெளியிட்டபின்.


பாரதி மணி ஐயா..

இலக்கிய உலகில் எனக்கு மறக்க முடியாத பெயர். ஒரு புத்தகம் , சில கட்டுரைகள் எழுதி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். வைக்கம் முகம்மது பஷீரின் சப்தங்கள் நாடகத்தில் பஷீராக நடித்தவர். புகைப்படத்தில் பார்த்த பின் இவர்தான் பஷீரோ என எண்ண வைத்தவர். வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலும், வீர சிவாஜி என்றாலும், திருஞான சம்பந்தர் என்றாலும் நடிகர் சிவாஜியின் சாயல் மனதுள் படிவது போல இவர் போலத்தான் பஷீரும் இருக்கவேண்டும் எனத் தோன்றியது.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சாதனை அரசிகளுக்கு நட்புரை நல்கிய நல்உள்ளம் பாத்திமா பாபு..


பல வருடங்களாக ., குறிப்பாக தொலைக்காட்சி என்று நாம் பார்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே செய்தி வாசிப்பில் என்னைக் கவர்ந்தவர் பாத்திமா பாபு அவர்கள். ஷோபனாவும், சந்தியாவும் வாசித்த போதும் சிலரைப் பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து விடுமல்லவா அந்த வகை இவர்.

வியாழன், 2 பிப்ரவரி, 2012

பொங்கல் டிட் பிட்ஸ்.. இவள் புதியவளில்.

வீரர்களின் திருநாள்;-
**************************

பனங்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிக அதிகமாக கிடைக்கும். இவற்றை அவித்தும் சுட்டும் உண்பார்கள். நிறைய நாட்டுக் காய்கறிகள் கிடைக்கும் காலம் இது. சேலம் பக்கம் முழு தேங்காய்க்குள் ஓட்டையிட்டு பாசிப்பருப்பு வெல்லம் போட்டு முழுதாய் சுட்டு உடைத்து தின்பார்கள்.


புதன், 1 பிப்ரவரி, 2012

ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டு பொங்கல் அனுபவம். இவள் புதியவளில்.


இது ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம். :-

ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்ட கதிர் கிராமமும் வயலும் வயல் சார்ந்த வாழ்வை விரும்புவர். இயற்கையோடு இயைந்த பொங்கல் கொண்டாட்டாத்தையும் ., விவசாயிகளுக்கே உரித்தான மாட்டுப் பொங்கலையும் சிறப்பாகப் பகிர்ந்து உள்ளார். ”உழுதுண்டு செல்வாரே செல்வார் ,, மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்பது இங்கு பொருத்தமாய் இருக்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...