எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 30 அக்டோபர், 2012
மாமியார் மருமகள் உறவுமுறை..
வெள்ளி, 20 ஜூலை, 2012
செவ்வாய், 3 ஏப்ரல், 2012
முணுமுணுப்பு..வேடியப்பனின் நூல் எனது பார்வையில் ( திண்ணையில்)
முணுமுணுப்பு..வேடியப்பனின் நூல்
சிறுகதைகள் என்பது சட்டென்று படித்துவிட முடிவதால் எப்போதும் என் ஈர்ப்புக்கு உரியதாய் இருக்கிறது. ஒரு சில பக்கங்களில் நம்மை அந்த நிகழ்வெளிக்கு செலுத்துவது என்பது சிலரால்தான் கைகூடும். மண்ணின் மணம் வீசும் இக்கதைகளில் பனி படிந்த வயல் மண்ணை வெள்ளெலி தள்ளிய வெதவெதப்பையும் ஊரில் வீசும் சாரல் தழுவிய ஈரக்காற்றையும் உணர முடிகிறது. கண்மணி குணசேகரன் முன்னுரை அளித்திருக்கிறார். பாவை பப்ளிக்கேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்நூலின் விலை . 45 ரூபாய்.
ஞாயிறு, 11 மார்ச், 2012
வெள்ளி, 9 மார்ச், 2012
வியாழன், 1 மார்ச், 2012
சனி, 25 பிப்ரவரி, 2012
முகில் பூக்கள்.. எனது பார்வையில்..
முகில் பூக்கள்
தகிதா பதிப்பகத்தின் பல் நூல்களில் மழையும் மழை சார்ந்தும் உள்ள கார்கால நூல் இது.. மழை நேசனான சரவணன் அழகியல் குறித்தும்., சூழலியல் குறித்தும் கார்மேக..(காளமேகம் போல) மாகப் பொழிந்த ஈரக்கவிதைகளின் தொகுப்பு.. மழையற்ற இக்கோடையிலும் ஈரச்சிதறல்கள் நம்மை கவிதை வழி நனைக்கின்றன..
நாமும் மழை உண்ணும் சாதகப் பட்சிபோல கவிதை அருந்தி தாகமடங்கத் துவங்குகிறோம்..
வெள்ளி, 30 செப்டம்பர், 2011
தியானம் என்பது..
தியானம் என்பது
ஆத்மலயம்.. எனது பார்வையில்
ஆத்மலயம்..தன்னைத்தானே லயத்தோடு, சுருதியோடு ஒப்புரவாய் ஒழுக்கத்தின்பால் ஒழுகுதலே ஆத்மலயம் சித்திக்கும் கருவி. ஆன்மாவுக்கு பிறப்பு இறப்பால் களங்கம் ஏற்படுவதில்லை. உடல்தானே கருவியாகி நன்மைதீமை எல்லாம் அனுபவிக்கிறது.. அது மேற்கொண்ட கர்மவினைகளுக்கு ஏற்ப பிறவிகள் எடுத்து எல்லாம் அனுபவித்துக் கடந்து துறந்து ஆன்மவலு பெற்றுப் பரம்பொருளை அடைகிறது.
வியாழன், 29 செப்டம்பர், 2011
செந்தீ..
**************
கானகம் அழிந்தது.,
வனப்புலிகளோடு.
புள்ளிமான்களும் சிதைந்தன
அமைதி தேடி.
காட்டாறு பெருகியது
வாய்க்கால் அழித்து.
செங்கொடி செந்தீயானாள்
செங்கோட்டை எட்ட..
புதன், 28 செப்டம்பர், 2011
மழையாய் இருந்தபோது..
என்ற கணக்கெல்லாம் இல்லாமல்
பெய்யத்தோன்றும் போதெல்லாம்..
அடைமழையோ.,
தொறுதொறுப்போ.,
முணுமுணுப்போ.,
எங்கிருந்தோ சேர்ந்த அன்பை
சுமக்க முடியாமல் அலைந்து
எங்கேயோ வழிய ஊற்றி
செவ்வாய், 27 செப்டம்பர், 2011
சிலையாய் நீ. பூவரசியில்.
*************************
காகங்கள் எச்சமிட
கழுகுகள் உன் தோளமர
தனியனாய்
சாலை ஓரமெல்லாம்
கை நீட்டியபடி நீ
வெய்யிலோ
மழையோ
கைதட்டி., காலில் விழுந்த
எந்தத் தொண்டனும்
குடைபிடிக்காமல்
புதன், 13 ஜூலை, 2011
இருப்பு..பூவரசியில்
***************
மலைகளில்., விளம்பர
பெயிண்ட் அடித்தல்.,
பாறைகளில் ., பீச் மணலில்
முகங்களை வடித்தல்.,
மரங்களிலும் ., பேருந்துகளிலும்
பெயர்களைச் செதுக்குதல்.,
செவ்வாய், 12 ஜூலை, 2011
பலூன்கள்... பூவரசியில்..
**********************
காற்றூதி விரிவாக்கி
கடற்கரையில் விளையாடவும்
நெஞ்சடைக்கும்
குருதியோட்டம் சீராக்கவும்
கலவி முடிந்து
விந்து பிடிக்கும் பையாகவும்
கார் விபத்தில்
உயிர் காக்கும் மெய்யாகவும்..
டிஸ்கி:- இந்தக் கவிதை 28. மே 2011 பூவரசியில் தேனு கவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
திங்கள், 11 ஜூலை, 2011
நம்பிக்கை.. பூவரசியில்
**********************
விளைந்த புற்றுக்கள்
முளைவிட்ட நாகங்களோடு..
எங்கேயோ உரமடித்தால்
எங்கேயோ விளையுமென்று
வியாழன், 26 மே, 2011
திங்கள், 23 மே, 2011
தொற்று...
*****************
வெற்றிலைக்காவி.,
எச்சில்.,
நாப்கின் துண்டுகள்.,
வார்த்தைக் கிறுக்கல்கள்
விழுந்து கிடக்கும்
பொதுக்கழிவறையான
தனது தேகத்தை
கழுவிக்கொண்டே இருக்கிறாள்...

