எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மெல்லினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மெல்லினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 மே, 2017

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”



புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் இன்று என் முதல் மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஆறாவது நூல் ) “பெண்மொழி” வெளியாகி உள்ளது. இது ஆஸ்த்ரேலிய மெல்லினத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 



பக்கங்கள் - 309.
விலை ரூ 150/-/ $3.99
http://www.pustaka.co.in/home/ebook/tamil/penmozhi 

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.


பெண்கள் பற்றி, பெண்கள் கையாளவேண்டிய சூழ்நிலைகள் பற்றி , அவர்கள் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி, பேதை பெதும்பை முதல் பேரிளம் பெண்வரையான பெண்களின் எழுச்சி முன்னேற்றம் பற்றிக் கூறும் நூல் இது. இயல்பாய் ஒன்றிக் கலக்கப் பேச்சு நடையில் எழுதி இருக்கிறேன்.

செவ்வாய், 28 ஜூலை, 2015

பூக்களும் பூவையர்களும்.

பூக்களும் பூவையர்களும்.


பூக்களிலே நானும் ஒரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்.
பூவாய் நான் பிறந்தாலும்
பொன்விரல்கள் தீண்டலையே.
பொன்விரல்கள் தீண்டலையே
நான் பூமாலை ஆகலையே.

என்ற மு மேத்தாவின் கவிதை கல்லூரிப் பருவத்தில் படித்தது. அரளிப்பூ சொல்வது போல் அமைந்த இக்கவிதை முதிர்கன்னிகளையும் அவர்தம் நிலையையும் குறிப்பது. இன்னும் மறக்காமல் நினைவில் நிற்கின்றது.

நேரு மாமா என்றால் க்கெல்லாம் ரோஜாப்பூ ஞாபகம் வரும். புன்னகை பூத்தல், நறுமுகை, ென்னஅரும்புதல், முல்லைச் சிரிப்பு, இவை எல்லாமே மலர் தொடர்பான சொற்கள். மலர்விழி, பூங்குழலி, மல்லிகா, ரோஜா, பைரோஸ், ஜாஸ்மின், தாமரை, செந்தாமரை, குறிஞ்சி, வாணி, திலகம், செண்பகம், வள்ளி, புஷ்பா, மாலா , ஃப்ளோரா, ஃப்ளாரன்ஸ், என்று நம்மூர்ப் பெண்களின் பெயர்களிலும் சரி மலர்கள் மணம் வீசுவன.

திங்கள், 1 ஜூன், 2015

ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-

ரேட்டிங்கும் ரா(ங்)கிங்கும் :-

சமீபகாலமா எதை எடுத்தாலும் ரேட்டிங்க்தான். ஒரு பொருளை வாங்கப் போனாலும் சரி ஒரு அலுவலகத்தில் வருடாந்திர முடிவிலும் சரி, ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சரி. ரேட்டிங் போட்டு அவர்களைத் தரம்தாழச் செய்வதில்தான் முனைப்பாக இருக்கிறது உலகம்.

முன்பு எல்லாம் பொருட்களுக்கு ரேட்டிங்க் வைத்து விற்பதில்லை. தரமான பொருட்களையே நாம் வாங்கினோம் என்பதல்ல. அவ்வளவு சுகாதாரக் கேடும் நோயும் ப்ளாஸ்டிக் உபயோகமும் , மரபணு மாற்றப் பயிர்களும் உரங்களும் தாக்காத காலகட்டத்தில் இருந்தோம். சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இன்றைப் போல பெருவாரியாக விதம் விதமான காய்ச்சல்களும் தொற்று நோய்களும் இல்லை. கொஞ்சம் ஆரோக்கியமாகவே இருந்தோம் என்று சொல்லலாம்.

புதன், 27 மே, 2015

திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-



திருமண இயந்திரங்களும் தீப்பாய்ந்த அம்மன்களும்:-

குவாலியர் கோட்டை. கோடையில் கொழுந்துவிட்டெறிகிறது குவாலியர் மாநகரம்.அதைவிட அதிகமாய் அங்கே கொழுந்து விட்டெறிகிறது ஜௌஹார்குண்ட் என்னும் நெருப்புக் குண்டம். வண்ண வண்ணமாக கண்ணாடிகள் பதித்த உடையணிந்த அழகும் இளமையும் நளினமும் நிரம்பிய ராஜபுதனத்துப் பெண்கள் நிரம்பியிருக்கின்றார்கள் நெருப்புக்குண்டத்தின் முன். சம்சுதீர் அல்துமிஷின் படைகள் ஆக்கிரமிக்கப் போகின்றன கோட்டையை. ராஜா இறந்தபின் ராணிகள் மீதும் ஆக்கிரமிப்பு நடந்துவிடும். அதைப் போன்ற ஒரு அவலம் நிகழ்ந்துவிடும்முன் ராணிகள் அனைவரும் அங்கே அரண்மனைக்கு நீர் வழங்கிக்கொண்டிருந்த குளத்தில் குதித்து உயிரிழக்கின்றார்கள். மிச்சமுள்ளவர்கள் ஜௌஹார் குண்டத்தில் தீப்பாய்கிறார்கள். எங்கும் பரவுகிறது சதியின் வாசனை. சதி தேவிகள் பதிவிரதா தேவிகள் என்று வணங்கப்படுகின்றார்கள்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2015

சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-

சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-

வாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களையும் தன்னுடைய துறையில் ஈடுபட்டு ஜெயித்து வானளாவிய அதிகாரத்தோடு திகழும் பெண்களையும் சாதனைப் பெண்கள் எனவும் சக்தி வாய்ந்த பெண்கள் எனவும் சொல்லலாம். இந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளைப் பார்த்து இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஆண்கள் மட்டுமல்ல சமூகமே அச்சமுறுகிறது என்றே சொல்லலாம். இந்திரா காந்தி,மார்கரெட் தாட்சர் போன்ற சில பெண் தலைவர்களையே நாம் சக்தி வாய்ந்த பெண்மணிகளாக அறிந்திருக்கிறோம். இன்னும் பலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

ஃபோர்ப்ஸ் பத்ரிக்கையில் பெப்சிகோ இந்திரா நூயி, எஸ் பி ஓ சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா , ஐசிஐசிஐ சந்தா கோச்சார்  (இவருக்கு ஃபார்ச்சூன் பத்ரிக்கையும் நம்பர் ஒன் பட்டம் அளித்திருக்கிறது. ), சிஸ்கோ சிஸ்டம்ஸ் பத்ம ஸ்ரீவாரியார், பயோகான் கிரண் மஜூம்தார்,, ஆகியோர் மட்டுமல்ல. ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா சர்மா, கேப் ஜெமினி இந்தியாவின் அருணா ஜெயந்தி, பணக்காரப் பெண்மணிகள் சாவித்ரி ஜிண்டால், இந்து ஜெயின், அனு அகா, ,மீடியா பெண்மணி ஷோபனா பார்த்தியா ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ) , ஜே. கே. லெக்ஷ்மி சிமிண்ட் வினிதா சிங்கானியா, லலித் சூரி ஹாஸ்பிட்டாலிட்டி திவ்யா சூரி சிங், கிண்டால் புஷ்பா பானர்ஜி இன்னும் பல ப்ரபலங்களும் இருக்காங்க  அந்த லிஸ்ட்ல நம்மைப் போன்ற சாதாரணப் பெண்களும் இருக்காங்க.

செவ்வாய், 24 மார்ச், 2015

அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்:-


அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும். :-

அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்

 MISSION IMPOSSIBLE ,FACE OFF போன்ற படங்களில் அதன் நாயகர்கள்  ஜான்  ட்ரவால்டோ & நிக்கலஸ் கேஜ், டாம் க்ரூஸ் ஆகியோர் முகமூடி போல முகத்தை மாற்றிக்கொள்வதைப் பார்த்து அசந்திருக்கிறேன். மூக்குச் சீரமைப்புச் செய்துகொண்ட பிறகு நடிகை ஸ்ரீதேவி ஹிந்திப்பட உலகையே ஒரு கலக்கு கலக்கினார். ஆனால் யதார்த்தத்தில் அவ்வளவு சுளுவானதல்ல முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை என்பதுமைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு நடனப் பயிற்சியில் மூக்கு உடைந்துவிட அதனால் அவர் ஒரு முகச்சீரமைப்பு சிகிச்சை செய்துகொண்டார். அதில் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்பட மீண்டும் ஒரு  மறுசீரமைப்பு சிகிச்சை என அடுத்தடுத்த சிகிச்சைகள் செய்து கொண்டார். ஆனால் இயல்பாய் அவர் ஆடிய பழைய பாடல்களில் இருக்கும் ஒரு வெகுளித்தனமான அழகு புதுமுகத்தில் காணாமல் போய் இருந்தது. அதே நடனத்திறமைதான் என்றாலும் ப்ளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் அழகான பூரணமான முகத்தைப் பெறலாம். ஆனால் அதே போன்ற எளிமையான கொள்ளை கொள்ளும் அழகும் தோல் மென்மையும் மாறக்கூடும்

திங்கள், 9 மார்ச், 2015

உடை அரசியலும் உடல் அரசியலும்.

செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை உடுத்தத் தயங்குறியே.. என்ற திரைப்படப் பாடல் கேட்டு இருக்கலாம். தமிழ்நாட்டுப் பெண்கள் என்றால் புடவைதான் அணிய வேண்டும் என்ற மனோபாவத்தில் கிண்டலாக எழுதப்பட்ட பாடல் அது.

தோள்சீலைப்போராட்டம் எனக் கேள்வியுற்றிருக்கலாம்.போன நூற்றாண்டுகளில் தென்னிந்திய கேரள ஊர்களில் சாதியால் தாழ்ந்ததாக முத்திரை குத்தப்பட்ட பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி இல்லை. உயர்சாதிப் பெண்டிர் மட்டுமே. மூன்று முண்டுகள் அணியலாம். மற்ற பெண்கள் இரண்டு முண்டு மட்டுமே. அதுவும் மேல் முண்டு எனப்படும் தோள்சீலையையும் பெரும்போராட்டத்துக்குப் பின்னே சட்டத்தின் உதவி பெற்று அணியத் துவங்கினார்கள். பெருங்கொடுமையாக இருக்கிறதல்லவா.

திங்கள், 8 டிசம்பர், 2014

காணாமல் போனவர்களும் கடத்தப்பட்டவர்களும்:-



காணாமல் போனவர்களும் கடத்தப்பட்டவர்களும். :-

காணாமல் போனவர்களும் கடத்தப்பட்டவர்களும்

தினமும் செய்திகளில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புப் பார்த்திருப்பீர்கள். திருவிழாக்களுக்குச் செல்லும்போது, எதிர்பாராத பயண விபத்துக்கள், வெள்ளம், சுனாமி ஆகியவற்றைத் தவிர தானாகக் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போவது. சினிமாவில் நடிக்கும் ஆசையில்,காதல் வேட்கையில் , வீட்டில் படிக்க முடியாமல், அல்லது பால் வேறுபாடு உணர்வு ஏற்படுவதன் காரணமாகவும் இது நடப்பதுண்டு.. 

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

திருநம்பிகளும் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்கள்.:-

திருநம்பிகளும் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்கள்.:-

இருவேறு உலகங்களுக்கு இடைப்பட்ட திரிசங்கு உலகத்தில் வாழ்பவரை திருநம்பிகள் என்றும் திருநங்கைகள் என்றும் சொல்லலாம். அவன் அவள் என்று இரு பாலினங்கள் மட்டுமே உயர்திணையாயிருக்க அது என்று அஃறிணையாகக் குறிப்பிடப்படுபவர்கள் இந்தத் திருநம்பிகள் திருநங்கைகள்.

திங்கள், 9 ஜூன், 2014

இளம் குடிமகன்களும் குடிமகள்களும் :-

இளம் குடிமகன்களும் குடிமகள்களும் :-
 "மது லோகா " இது பெங்களூருவில் இருக்கும் ஒரு மதுபானக் கடை.. ஆணுக்குப் பெண் சளைத்தவரில்லை எனக் காட்ட இங்கே இரு பாலாரும் மதுப் புட்டிகளைக் க்யூவில் சரிசமமான அளவில் நின்று வாங்கும் கண் கொள்ளாக்காட்சியைக் காணலாம். பெற்றவர்கள் பிள்ளைகளைப் படிக்கவும் வேலை செய்யவும் அனுப்பி வைக்க அவர்கள் இங்கே வெளிநாட்டுக் கலாச்சாரப்படி உடை உடுத்தி வெளிநாட்டுப் பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் குளிரான க்ளைமேட்டுக்காகக் குடிக்கிறார்கள்

திங்கள், 2 ஜூன், 2014

ஐம்பத்தாறு வகை மனிதர்களும் அங்கீகரிக்கப்படாத தொழிலும். :-

ஐம்பத்தாறு வகை மனிதர்களும்  அங்கீகரிக்கப்படாத தொழிலும். :-

இரண்டு பாலினங்கள் மட்டுமே எல்லா இடங்களிலும் கேட்கப்படுகின்றன மற்றும் குறிப்பிடப்படுகின்றன. மூன்றாம் பாலினத்தவர் தங்களையும் இணைக்கக் கோரியுள்ளார்கள். ஆனால் முதன் முறையாக முகநூலில்  பாலினம் எனக் குறிப்பிடப்படும் இடத்தில் 50 விதமான பால் வகைகளை வகைப்படுத்தப் போவதாக செய்தித்தாளில் படித்தேன்.

மனிதர்களே ஐம்பது வகையாயிருக்கும்போது , அவர்களின் பல்வேறுபட்ட காம விழைவுகள் பெருவாரியாகப் பேசப்படும்போதும், காமம் தீர்க்கும் தொழிலில் ஈடுபடும் பெண்களையும் திருநங்கைகளையும் மட்டுமே இன்னும்  சமூகம் மோசமானவர்களாகச் சித்தரிக்கின்றது. அழகிகள் கைது என்று   வரும் செய்தித்தாள்களில் ஒன்றாவது அழகன்கள் கைது என்று கேள்வியுற்றிருக்கின்றீர்களா
Related Posts Plugin for WordPress, Blogger...