எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ப்ளாஸ்டிக் சர்ஜரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ப்ளாஸ்டிக் சர்ஜரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 மார்ச், 2015

அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்:-


அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும். :-

அழகர்களும் அழகிகளும் அறுவை சிகிச்சைகளும்

 MISSION IMPOSSIBLE ,FACE OFF போன்ற படங்களில் அதன் நாயகர்கள்  ஜான்  ட்ரவால்டோ & நிக்கலஸ் கேஜ், டாம் க்ரூஸ் ஆகியோர் முகமூடி போல முகத்தை மாற்றிக்கொள்வதைப் பார்த்து அசந்திருக்கிறேன். மூக்குச் சீரமைப்புச் செய்துகொண்ட பிறகு நடிகை ஸ்ரீதேவி ஹிந்திப்பட உலகையே ஒரு கலக்கு கலக்கினார். ஆனால் யதார்த்தத்தில் அவ்வளவு சுளுவானதல்ல முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை என்பது.  மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு நடனப் பயிற்சியில் மூக்கு உடைந்துவிட அதனால் அவர் ஒரு முகச்சீரமைப்பு சிகிச்சை செய்துகொண்டார். அதில் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்பட மீண்டும் ஒரு  மறுசீரமைப்பு சிகிச்சை என அடுத்தடுத்த சிகிச்சைகள் செய்து கொண்டார். ஆனால் இயல்பாய் அவர் ஆடிய பழைய பாடல்களில் இருக்கும் ஒரு வெகுளித்தனமான அழகு புதுமுகத்தில் காணாமல் போய் இருந்தது. அதே நடனத்திறமைதான் என்றாலும் ப்ளாஸ்டிக் சர்ஜரியின் மூலம் அழகான பூரணமான முகத்தைப் பெறலாம். ஆனால் அதே போன்ற எளிமையான கொள்ளை கொள்ளும் அழகும் தோல் மென்மையும் மாறக்கூடும்.