எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 31 ஜூலை, 2023

திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.

 169.


3361.சாலைப் பணியாளர்களின் உபயோகத்துக்காக டாய்லெட் !.


3362.கட்டிடம் தானுங்கோ !

யூ ட்யூபில் 1751 - 1760 வீடியோக்கள்

 1751.ரசிகமணி டி கே சி பிள்ளைத்தமிழ் l  வள்ளிமுத்தையா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CixILyrH7yc


#ரசிகமணிடிகேசி, #பிள்ளைத்தமிழ், #வள்ளிமுத்தையா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#RASIGAMANITKC, #PILLAITAMIL, #VALLIMUTHAIAH, #THENAMMAILAKSHMANAN, 1752.அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் l தமிழரசி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=PQCgaun-lw4


#அதிரூபனும்சிண்ட்ரெல்லாவும், #தமிழரசி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ADHIROOPANUMCHINDRELLAVUM, #THAMILARASI, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 27 ஜூலை, 2023

முத்தக் குவளை

முத்தக் குவளை

 

மென் ஆர் ஃப்ரம் மார்ஸ். விமன் ஆர் ஃப்ரம் வீனஸ்.”

 

”இது எதுக்கு இப்போ சொல்றே”எனக்கேட்டான் ஸாம். ”இல்ல நமக்குள்ள அப்பப்ப ஏற்படுற சுருதி பேதத்தை சொன்னேன்” என்றாள் முத்தழகி. 

 

”ரொம்ப அவசரப்படுறீங்க. கடந்து போயிடலாம்னு பார்த்துக்கிட்டே இருக்கேன் முடியலையே” என்றாள் முத்தழகி.

 

”ஏன் கடந்து போகணும். மெதுவா அனுபவிச்சுப் போகலாம்தானே. எல்லாம் நம்ம கையில்தானே இருக்கு.” 

யூ ட்யூபில் 1741 - 1750 வீடியோக்கள்.

1741.ஏலோ ஏலேலோ l வட்ட நல்ல பொட்டு வைச்சு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=EUKeSGZYSCA


#ஏலோஏலேலோ, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN, 1742.அருள்தரு சிவபெருமான் 108 போற்றிகள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=vqrKgu2pdGk


#சிவபெருமான், #108போற்றி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SIVAPERUMAN, #108POTRI, #THENAMMAILAKSHMANAN, 

புதன், 26 ஜூலை, 2023

சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்

 168.


3341.எனது படைப்புகள் மற்றும் என்னைப்பற்றிய கட்டுரைகள் இடம்பெற்ற நூல்கள்


3342.எனது 24 நூல்கள்


யூ ட்யூபில் 1731 - 1740 வீடியோக்கள்.

1731.ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=KBfYcPfhxZo


#ராமஜெயம்,  #ஸ்ரீராமஜெயம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIRAMAJAYAM, #THENAMMAILAKSHMANAN, 1732.பஜகோவிந்தம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=SdEwUX36PRM


#பஜகோவிந்தம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#BAJAGOVINDHAM, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 21 ஜூலை, 2023

8.கருப்பையின் வடிவமைப்பும் பங்களிப்பும்

 8.கருப்பையின் வடிவமைப்பும் பங்களிப்பும்


மனித குலத்தைத் தழைத்தோங்கச் செய்வது கருப்பையின் திருப்பணி. அதன் அமைப்பு எப்படி இருக்கும், மாதவிடாய் ஏற்படுதல், கருவுறுதல், மற்றும் கர்ப்பகாலத்தில் அதன் பணி என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

பேரிக்காய் பார்த்திருக்கின்றீர்களா? அதன் வடிவத்தில் அமைந்த உறுப்பே ஓவரி என்னும் கருப்பை. இது மாதவிடாய், அதன் பின் கருவுறுதல் மற்றும் கர்ப்ப காலம் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுகிறது. இது மலக்குடலுக்கும் சிறுநீர்ப் பைக்கும் இடையில் இடுப்பின் இரு பக்கங்களில் அமைந்திருக்கின்றது. பெண்மையின் ஹார்மோன்களான எஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்டிரான் போன்றவற்றைச் சுரக்கிறது. இதனால் பெண்களுக்குப் பூப்படையும் வயதில் மார்பங்கள் பெரிதாகின்றன. இதன் அடையாளமாக அந்தரங்க உறுப்புகளில் ரோமம் முளைக்கத் துவங்குகிறது.

மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது ? முதல் பூப்பிற்குப் பின் வரும் மாதவிடாய் சுழற்சியின் போது இரத்தம் மற்றும் திசுக்களுடன் கருப்பைப் புறணி என்னும் எண்டோமெட்ரியத்துடன் கருவுறாத முட்டையைச் சுமந்து ரத்தப் போக்காய் மாதா மாதம் வெளியேறுவதால் ஏற்படுகிறது.

யூ ட்யூபில் 1721 - 1730 வீடியோக்கள்.

1721.திருவாசகம் l திருத்தெள்ளேணம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=T7mDYdrYRmc


#திருவாசகம், #திருத்தெள்ளேணம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUVASAGAM, #THIRUTHELLENAM, #THENAMMAILAKSHMANAN,1722.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 100 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/tHthcIf_Xdk


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 17 ஜூலை, 2023

கூடையிலே என்ன பூ குஷ்பு

 கூடையிலே என்ன பூ குஷ்பு


நீ எங்கே என் அன்பே நீ இன்றி இனி நான் எங்கே.” என்று உருகிப் ”போவோமா ஊர்கோலம்” என்று திருமணம் முடித்த காதலர்களுக்குத் தேசிய கீதமாக விளங்கியது 92 இல் வெளிவந்த சின்னத்தம்பி படம்இதற்கு முன்னே ”சைனீஸ் பட்லர்” என்று தான் கலாய்த்த குஷ்பூவையே ”யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா” என்று தன் நண்பர்கள் கலாய்க்கும் விதம் கார்த்திக் காதலிக்கும் படம்தான் வருஷம் 16.

மெழுகு பொம்மை போன்ற தோற்றம்லேசான சரிதா சாயலும்ஜீனத் அமன் சாயலும்மெல்லிய உருவமும் மீடியமான உயரமும் கொண்டவர் குஷ்பூபெண்மை விகசிக்கும் உடல்பெரிதான கண்கள்,  கொழு கொழு கன்னங்கள்கான்வெண்ட் பெண் தோற்றம்அழகிய பல்வரிசைகால்கேட் புன்னகைஅபாரத் துணிச்சல்அசாத்தியத் தன்னம்பிக்கைரோஜா நிறம் இதுதான் குஷ்பூபின்னர் அவர் இரட்டை ரோஜாவாகிவிட்டார்!

முக்கால்வாசிப் படங்கள் கவர்ச்சி நாயகித் தோற்றம் என்றாலும் சில படங்களில் தன் உணர்ச்சி மிகு நடிப்பால் நெகிழச் செய்திருக்கிறார்சின்னத் தம்பிவருஷம் 16, அலைபாயுதே ஆகியவற்றின் கிளைமாக்ஸ் சீன்ஸ்கிழக்கு வாசலில் கார்த்திக் பாடும் பாடிப் பறந்தகிளி பாடல் காட்சி ஆகியவற்றில் அவரின் உணர்ச்சி மிகுந்த நடிப்பு சிறப்பு.

யூ ட்யூபில் 1711 - 1720 வீடியோக்கள்.

1711.நவக்கிரக காயத்ரி மந்திரங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/KIMHgOPYS3Q


#நவக்கிரகம், #காயத்ரிமந்திரங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAVAGRAHA, #GAYATHRIMANTHRAM, #THENAMMAILAKSHMANAN, 1712.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 98 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/kAdCicEjcAo


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 13 ஜூலை, 2023

யூ ட்யூபில் 1701 - 1710 வீடியோக்கள்.

1701.திருப்பாவை - 19 l ஸ்ரீ ஆண்டாள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3Nd3XtWCZ-c


#திருப்பாவை, #ஸ்ரீஆண்டாள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPAVAI, #SRIANDAL, #THENAMMAILAKSHMANAN,1702.குழந்தைகள் நோய்நீங்க l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/mB2DZ5pWl_k


#குழந்தைகள்நோய்நீங்க, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#CHILDREN, #DISEASECURE, #THENAMMAILAKSHMANAN, 

சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்

 167.

3321.மகிழ்வுடன் பகிர்கிறேன். எனது 24 ஆவது நூல், "சோகி சிவா" டிஸ்கவரியின் வெளியீடாக மலர்கிறது. அழகான முன்னுரை வழங்கிய திரு. துரை. அறிவழகன் சாருக்கும், அட்டைப்படம் வரைந்து அளித்த திரு. திருநெல்வேலி பிரபாகரன் சாருக்கும், இந்நூலைப் பதிப்பிக்கும் டிஸ்கவரி புக்பேலஸ் திரு. வேடியப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. 


வெளியீட்டு நிகழ்வு பற்றிக் கூடிய விரைவில் அறிவிக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பும் என்னைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது. அனைவருக்கும் அன்பும் நன்றியும் மக்காஸ்

3322.எனது 24 ஆவது நூல் “சோகி சிவா” 23.4. 2023, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புக்பேலஸில் வெளியாகிறது. அனைவரும் வருக.

மகிழ்வுடன் பகிர்கிறேன். அனைவரும் வருக. ஞாயிறு 23.4. 2023 இன்று மாலை 6 மணிக்குச் சென்னை டிஸ்கவரி புக் பேலஸின் ஆர்ட் கேலரியில் சந்திப்போம்.

செவ்வாய், 11 ஜூலை, 2023

காட்டுத்தீயும் காதல் நோயும்

காட்டுத்தீயும் காதல் நோயும்

 

“ஐயையோ ஓடியாங்க ஓடியாங்க” என்ற மாண்பனின் குரல் கேட்டு மொத்த பங்களாவும் விழித்துக் கொண்டது. அவன் மனைவி பொம்மியும் இன்னுமுள்ள எஸ்டேட் பணியாளர்களும் சத்தமிட்டபடி அங்கே இங்கே ஓடிக்கொண்டிருந்தார்கள்.

 

கைபேசியை சார்ஜரில் இருந்து எடுத்துப் பார்த்த சாம் வேகமாக எழுந்தான். ஜன்னல் திரைச்சீலை விலக்கிக் கண்ணாடியின் மூலம் பார்த்தான். செக்கச் செவேலென இது என்ன எரிமலைக் குழம்பு வழிந்து ஓடிவருகிறதா. ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது போல ஜன்னல் எல்லாம் ஒரே செங்காவி நிறம், புகை. வெக்கை அனலடிக்கத் துவங்கி இருந்தது. படபடவென மாடியிலிருந்து கீழிறங்கத் துவங்கினான். உடன் விழித்த தேவியும் எழுந்து ஓடினாள்.

யூ ட்யூபில் 1691 - 1700 வீடியோக்கள்.

 1691.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 93 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/bpgMj59hVXI


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1692.திருப்பாவை - 16 l ஸ்ரீ ஆண்டாள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ob1XM0w_j4Q


#திருப்பாவை, #ஸ்ரீஆண்டாள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPPAVAI, #SRIANDAL, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 10 ஜூலை, 2023

ரோமாபுரியில் ஒரு உலா.விக்டர் இம்மானுவேலும் ட்ராஜன்ஸ் தூணும் புனித பேதுரு ஆலயமும்.

 யூரோப் டூரின் ஆறாம் நாள் இத்தாலியின் ரோம் நகருக்கு வந்தோம். ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களினால் கட்டப்பட்ட ரோம் நகரைச் சுற்றிப் பார்த்தோம். நடந்து நடந்து சலித்தோம். பார்த்துப் பார்த்து அசந்தோம். இறப்பதற்கு முன் ரோமைப் பார்க்கவேண்டும் என்ற வாக்கியத்தை மெய்ப்பித்து விட்டோம்.:) 

கொலோசியத்துக்குப் போய்வந்த பின் பொடிநடையாக இங்கே வந்தோம். இது ரோம் ஃபாரம் என்னும் இடத்துக்குச் செல்லு வழியில் உள்ளது என நினைக்கிறேன். ரோம் நகரத்தின் ஒவ்வொரு துணுக்கிலும் வரலாறு புதைந்துள்ளது.  

விக்டர் இரண்டாம் இம்மானுவேலுக்கான நினைவுச் சின்னம் இது. குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். தனித்தனியாய் இருந்த இத்தாலியை ஒருங்கிணைத்து ஆட்சி புரிந்தவர். எனவே மிகப்பெரிய நினைவுச் சின்னமாக அமைத்திருக்கின்றார்கள். 

தூண்களுடன் மாபெரும் அரங்குகளை அமைப்பது அப்போதைய கட்டிடக் கலையாக இருக்கும் போல. இதற்குப் பல்வேறு பாணிகளும் அவற்றிற்கான தனித்தனிப் பேரும் சொல்கிறார்கள். பொதுவாக க்ளாசிக்கல் க்ரீக் ஆர்க்கிடெக்ஸர் பயன்பாட்டில் உள்ளது. 

இது புனிதபேதுரு ஆலயத்தின் குவிமாடம். 

யூ ட்யூபில் 1681 - 1690 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

1681.வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் l  வை.கோபாலகிருஷ்ணன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=dh8JEajvxXw


#வர்ணம்தீட்டப்படாதஓவியங்கள், #வைகோபாலகிருஷ்ணன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#VARNAMTHEETAPADATHAOVIYANGAL, #VAIGOPALAKRISHNAN, #THENAMMAILAKSHMANAN,1682.நகுலன் l பூமிச்செல்வம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=vVtvWB6IDBw


#நகுலன், #பூமிச்செல்வம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NAGULAN, #BOOMICHELVAM, #THENULAKSHMANAN, 

ஞாயிறு, 9 ஜூலை, 2023

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:- 3

ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:- 3

  புதுவருட வகுப்பு நோட்டுப் புத்தகங்களுக்கு ஆதித்யாவும் ஆராதனாவும் தாத்தாவிடம்  அட்டை போடக் கற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு செய்தித்தாளை விரித்து அதன் மேல் வைத்து அட்டைபோடுவது எப்படி எனக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஆராவமுதன். இடையிடையே வழக்கம்போல கத்திரிக்கோலுக்கும் ஒட்டுப்பசைக்கும் ஆதித்யாவுக்கும் ஆராதனாவுக்கும் சண்டை வந்தது.

  ”அண்ணன் தங்கச்சிதானே எதுக்கும் விட்டுக் கொடுத்துப் போறதில்லை.”  ”என்ன சத்தம்” எனக் கேட்டவாறு பால்பாக்கெட்டுகளை எடுத்தவாறு உள்ளே சென்றார் அவர்களின் தாய்.

  உஷ் எனச் சைகை காட்டிய ஆராவமுதன் ”கொஞ்சநேரம் கதை நேரம். நோட்டை எல்லாம் அப்பிடியே வைங்க நான் ஒரு சின்ன கதை சொல்வேன். அப்புறம் நாம காஃபி, போன்விட்டா சாப்பிட்டுட்டுத் திரும்ப அட்டை போடலாம் ”என்றார்.

  ”மாமா நீங்க மட்டும் இல்லைன்னா இந்தக் குட்டீஸை என்னால சமாளிக்கவே முடியாது. தாங்க்ஸ் மாமா ”என்றபடி மூவருக்கும் சின்ன சின்ன கப்புகளில் பாதாம் அல்வாவும், முந்திரி பக்கோடாவும் கொண்டு வந்து வைத்தாள் ரம்யா.

யூ ட்யூபில் 1671 - 1680 வீடியோக்கள்.

1671.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 90 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/nr9E8-InXT4


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,1672.ஸ்ரீ ராகுகால துர்க்கா அஷ்டோத்திர சத நாமாவளி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3S4rUXcSV4s


#ஸ்ரீராகுகாலதுர்க்கா, #அஷ்டோத்திரசதநாமாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIRAGHUKALADURGA, #ASHTOTHRASATHANAMAVALI, #THENAMMAILAKSHMANAN, 

வியாழன், 6 ஜூலை, 2023

பால் சுரக்கும் பாளை - சோகிசிவா நாவலுக்கு திரு. துரை அறிவழகன் அவர்களின் முன்னுரை.

 பால்சுரக்கும் பாளை
கால ஊற்றில் இருந்து கசியும் நீர் குடித்த பொடிக் குருவி ஒன்றின் பார்வையில் இருந்து விரிகிறது நகரத்தார் கலாச்சார வாழ்வும் அவர்களின் தத்துவமும்
.

ஆச்சி, அப்பச்சிகள் என வாழ்ந்த மூதாதையர் சமூக வாழ்வின் சாரத்தின் ரேகைகளோடு தன் கதை வரைபடத்தை வரைந்துள்ளார் நாவலாசிரியர்.

சுண்ணாம்புக் கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை அரைத்து முட்டை வெள்ளைக் கருவுடன் கலந்த கலவையில் சுவர் பூச்சு; ஓடைக் கற்களை கொண்டு வந்து கைச் சூளையில் நீர்த்த சுண்ணாம்புக் கலவையில் சுனை சிற்பங்கள்……இப்படி வீடு கட்டுவதற்கு என்றே வாழ்ந்தவர்கள் நகரத்தார்கள்.

யூ ட்யூபில் 1661 - 1670 வீடியோக்கள்.

1661.ஆபத்பாந்தவா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Wr9-8-sFHAw


#ஆபத்பாந்தவா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ABATHBANDHAVA, #THENAMMAILAKSHMANAN, 1662.ஆஞ்சநேய தியானம் - 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=naB806FA8uU


#ஆஞ்சநேயதியானம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#ANJENAYADHIYANAM, #THENAMMAILAKSHMANAN, 

செவ்வாய், 4 ஜூலை, 2023

பஞ்சு மிட்டாய்

பஞ்சு மிட்டாய்

ஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டு வண்ண ரவிக்கை போட்டு”. ’ஜிங்கு ஜக்கு சக்குச் சக்கு ஜிங்கு ஜக்கு சக்குச் சக்கு  என்று கரகத்தை சுற்றிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். தலையில் கிளி வைத்த கரகமும் பஞ்சவர்ணக்கிளிபோலச் சிவந்திருந்த அவளும் கை விரித்து ஆடுகையில் மொத்தக் கல்லூரிக் கூட்டமும் வென்று பார்த்துக் கொண்டிருந்தது.

அவளின் நீலக்கலர் சராய் போன்ற கீழுடுப்பும் அதன் மேல் மிட்டாய் ரோஸில் கவுன் போன்ற மேலுடுப்பும் முகத்தில் கொஞ்சம் அதிகப்படியான மேக்கப்பும் கரகாட்டத்துக்கான கலாசார உருவத்தை ஒரு நவநாகரீக யுவதியின் மேல் தீட்டி இருந்தது. தமிழனின் தொன்மக்கலையை ஒரு கல்லூரியில் அவளின் கம்பீரம் தன்னம்பிக்கையாக நிகழ்த்திக் கொண்டிருந்தது.

ஹூய் ஹோய் என்று அவள் ஸ்டேஜில் வந்தபோது கத்தியது மாணவர் கூட்டம். ரெக்கார்டரை விடச் சத்தமாகக் கத்தினாலும் அவள் நெஞ்சு நிமிர்த்திக் கரங்குவித்து ஒரு அழகான கும்பிடோடு நாட்டியக்காரியின் லாவகத்துடன் ஸ்டேஜுக்கு நடுவில் வந்து நின்றதும் அசந்தது சபை.

யூ ட்யூபில் 1651 - 1660 வீடியோக்கள்.

1651.செல்வ கணபதியே l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HySOkgyP5II


#செல்வகணபதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SELVAGANAPATHI, #THENAMMAILAKSHMANAN,1652.ஸ்ரீ பார்த்தசாரதி மாலை - 87 l  சௌரியப்பெருமாள் தாசர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/30DBeSjQLuw


#ஸ்ரீபார்த்தசாரதிமாலை, #சௌரியப்பெருமாள்தாசர்,  #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIPARTHASARATHIMALAI, #SAURIYAPERUMALDASAR, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...