எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சோகிசிவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோகிசிவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 ஆகஸ்ட், 2023

அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.

சமர்ப்பணம் :- அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.

சோகி சிவா நாவலில் என்னுரை. :-



சமர்ப்பணம் :- அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.

என்னுரை:- வெக்கையும் கரம்பையும் நிரம்பிய செட்டிநாட்டு மண்ணில் செம்புறாங்கற்களின் மேல் கம்பீரமாய் நிற்பவை வலசை வந்த நகரத்தார்களின் இல்லங்கள். அங்கே இந்த நூற்றாண்டு வரை கொண்டு விக்கச் சென்ற கணவர்களை எதிர்நோக்கி வாழ்ந்து வரும் ஆச்சிகள் ஏராளம். சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 72 ஊர்களில் வாழ்ந்து வரும் ஆச்சிகள், ஆயாக்கள், அப்பத்தாக்கள், பாட்டி ஆயாக்களில் அனைவரிலும் நாம் வாழ்வரசிகளையே அநேகம் காவிய நாயகிகளாகப் பார்த்திருப்போம். ஆனால் அந்தக் கோட்டை வீடுகளில் கணவனைப் பிரிந்த  வெள்ளைச்சீலைக்கார ஆச்சிகளின் தனிமைத் துயர் அவர்களால் மட்டுமல்ல. வேறு எவர்களாலும் வரைந்து காட்டப்படவே இல்லை, இன்றுவரை. 

வியாழன், 6 ஜூலை, 2023

பால் சுரக்கும் பாளை - சோகிசிவா நாவலுக்கு திரு. துரை அறிவழகன் அவர்களின் முன்னுரை.

 பால்சுரக்கும் பாளை




கால ஊற்றில் இருந்து கசியும் நீர் குடித்த பொடிக் குருவி ஒன்றின் பார்வையில் இருந்து விரிகிறது நகரத்தார் கலாச்சார வாழ்வும் அவர்களின் தத்துவமும்
.

ஆச்சி, அப்பச்சிகள் என வாழ்ந்த மூதாதையர் சமூக வாழ்வின் சாரத்தின் ரேகைகளோடு தன் கதை வரைபடத்தை வரைந்துள்ளார் நாவலாசிரியர்.

சுண்ணாம்புக் கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை அரைத்து முட்டை வெள்ளைக் கருவுடன் கலந்த கலவையில் சுவர் பூச்சு; ஓடைக் கற்களை கொண்டு வந்து கைச் சூளையில் நீர்த்த சுண்ணாம்புக் கலவையில் சுனை சிற்பங்கள்……இப்படி வீடு கட்டுவதற்கு என்றே வாழ்ந்தவர்கள் நகரத்தார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...