எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 அக்டோபர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கோமதிஅரசுவும் கருத்துக் கோலங்களும்.


கோமதி மேம். நான் பெரிதும் மதிக்கும் வலைப்பதிவர். அவரது கோலங்கள் தொடர்பான ஈடுபாடு பாராட்டுக்குரியது. லேடீஸ் ஸ்பெஷலில் கோலங்கள் தொடர்பாக இவர் வலைத்தளம் குறித்துப் பதிவு ( மிகச் சிறப்பான இடுகை அது ) வாங்கியிருந்தாலும் இவரின் வலைத்தளத்தில் சுலோகங்களும் புகைப்படங்களும் இன்னொரு வசீகரம். எனக்கும் கோலங்களில் ஈடுபாடு உண்டு என்பதால் அவரிடம் சும்மாவுக்காக கோலங்கள் தொடர்பான ஒரு கேள்வி.


[தொடர்ந்து வலைத்தளவாசிகள் படித்துப் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்துவதாலேயே தொடர்ந்து எழுதுகிறோம். எனக்கு நேரம் வாய்க்கும் சமயங்களில் ( முகநூல்ல மொக்கையப் போட மட்டும் நேரம் இருக்காக்கும் என்று சக வலைப்பதிவ நட்புகள் மொத்த வேண்டாம். ஹிஹி ) எல்லாரின் வலைத்தளமும் வந்து வாசித்து கமெண்டிடுவேன். ஆனால் நான் வர்றேனோ வரலையோ அதைப் பொருட்படுத்தாமல் ( பெரிது படுத்தாமல் ! ) எந்தப் பாரபட்சமும் இல்லாமல் என் வலைத்தளத்தை வாசிக்கும் பின்னூட்டமிடும் அனைவருக்கும் நன்றி. ] 

////கோமதி மேம்  கோலங்கள் போடுதல் தொடர்பான உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ////


அந்தக் காலத்தில் அரிசி மாவால் வீட்டின் முற்றத்தில் பலவகை யந்திரவுருக்களால் போடப்படுவதாம் கோலம்.கோலங்கள் தீயசக்திகளை,தீயதேவதைகளை வீட்டினுள் வருவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது.

மார்கழி மாதம் கோலம் போடுவதால் கிடைக்கும் நன்மை:- 
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்த நமக்கு கை,கால்களை அசைத்து, இடுப்பை வளைத்துப் பெருக்கித் தெளித்துக் கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் கிடைக்கிறது.

அதிகாலை நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சியும் கிடைக்கிறது.

வான்வெளியில் இருந்து  பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள், ரிஷிகளிடமிருந்து ஆற்றல்களும் ஆசிகளும் கிடைக்கும்.

நல்ல காற்று - ஓசோன் வாயு கிடைக்கிறது.

 ஒளி வடிவமான இறைவனை வணங்கும் போது ஒளி ஆற்றல் (நெருப்பு )கிடைக்கிறது.

மண் மீது நின்று கோலம் போடும் போது       நிலத்தின் ஆற்றல் கிடைக்கிறது.

அரிசி மாவால் கோலங்கள் போட்டால் அது ஈ, எறும்புகளுக்கு உணவாகும் என்பார்கள்.

கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போடமுடியும். இல்லையென்றால் கோலம் அலங்கோலம் தான். நம் மனதைப் பிரதிபலிப்பது கோலம்.

குறிப்பாக மார்கழி மாதத்தில் அக்கம் பக்கத்தில் என்ன கோலம் போட்டு இருக்கிறார்கள் என்று காலையில் நாங்கள் ஒரு சிறு வலம் வருவோம், முன்பு இருந்த தெருவில். அவர்கள் நம் கோலத்தைப் பார்க்க வருவார்கள்,நாங்கள் அங்கு போய்ப் பார்ப்போம். ஒருத்தருக்கு ஒருவர் பாராட்டிக் கொள்வோம். அது மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். அடுத்தநாள் இன்னும் நன்றாகப் போட வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுக்கும். 

ஆனால் இப்போது எல்லாம் மாறி விட்டது எல்லாம் ஓட்டம், ஓட்டம், ஓட்டம் தான். நின்று நிதானித்துப் பேச நேரமில்லை. இந்தப்பூவிற்கு இந்தக் கலர் கொடுத்து இருக்கலாம் என்று அபிப்பிராயங்கள் சொல்ல ஆள் இல்லை. பார்வையாளர்கள் அற்ற விளையாட்டுத் திடலில் விளையாடுவது போல் உள்ளது இன்றைய நிலை.

அமெரிக்கா போய் இருந்த போது நவராத்திரிக்கு மகனின் வீட்டு வாசலில் நான் மாக்கோலம் போட்டபோது, சாவி அவர்களின் ’வாஷிங்டன் திருமணம்’ கதை நினைவுக்கு வந்தது. அதில் ஜார்ஜ்டவுனிலுள்ள பெண்மணிகள், ஆண்மணிகள் (!), சிறுவர், சிறுமியர்,அனைவரும், பாட்டிகள் கோலம் போடும் அழகைக்  காண்பதற்குக் கூடியகூட்டத்தையும், அவர்கள் அரிசி மாவைக் கரைத்து எடுத்துக் கோண்டு வளைத்து வளைத்துப் போட்ட கோலத்தை  வைத்த கண் எடுக்காமல் பார்த்ததையும், செம்மண்ணால் பார்டர் கொடுத்த அழகை புகழ்ந்ததையும் நான் படித்தது எனது நினைவுக்கு  வந்தது.அப்போது   நான் போடும் கோலத்தைச் சுற்றி நின்று அமெரிக்கர்கள்  பார்ப்பது போல் கற்பனை செய்தேன். சிரிப்பு வந்தது.


///உங்களுக்குப் பேர்வாங்கித்தந்த கோலம் எது. ?///;

தேனம்மை, நான் கோலத்தில் ஆராய்ச்சி செய்து பட்டம் வாங்கி இருப்பது போல் உங்கள் கேள்வி உள்ளது. 

ஏதோ என் அம்மா, ’கோலம் போடத் தெரிந்து இருக்கணும், பெண்ணுக்கு’  என்று சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் சொல்லிக் கொடுத்த கோலத்தை இரவு சிலேட்டில் போட்டுக் காட்டி மறுநாள் வாசலில் தரையில் போடவேண்டும். முன்பு நான் கோலம் போடும்போது  ”புள்ளிகள் சென்னையிலிருந்து பாம்பாய்க்குப் போவது போல் இருக்கும்’, ’தண்ணீர் வைத்து அழித்து விட்டு மறுபடியும் போடு’ என்பார்கள், நாள், கிழமைகளில் என்ன கோலம் போட்டு, செம்மண் கொடுக்க வேண்டுமென்று ஒரு நாள் வகுப்பு நடக்கும். என் அக்கா என் அம்மா போல அழகாய்க் கோலம் போடுவார்கள். அதற்கு என் அம்மா,  ’கண் கண்டால், கை செய்யவேண்டும்’ என்பார்கள். ’உன் அக்காவைப் பார்!’ என்பார்கள் . அக்கா திருமணமாகி புகுந்தவீடு போன பின் நான் கோலங்கள் போட ஆரம்பித்தேன்.

அப்படி சிறுவயதிலிருந்து நான் வரைந்த கோல நோட்டுகள்,  வார, மாதப் பத்திரிக்கைகளில் வந்த கோலங்களின் சேகரிப்பு என்று ஒரு பெட்டி நிறைய இருக்கிறது.   அந்தபெட்டியை நான் மார்கழி மாதம் எடுக்கும் போதே என் கணவர், ’என்ன! கோல ஆராய்ச்சியா?’ என்று கேட்பார்கள்.  அதில் இருக்கும் கோலத்தில் ஒன்றைத் தேர்ந்து எடுத்து முதல் நாள் இரவே போட்டுப் பார்த்து மறு நாள் போய் வாசலில் போடுவேன். அதற்கு வேண்டிய கலர்ப்பொடிகளையும் தயார் செய்து வைத்துக் கொள்வேன், கிண்ணங்களில். 

பேர் வாங்கித் தந்த கோலங்கள் என்றால், எதைச் சொல்வது? அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு நான் புள்ளி வைத்து வரைவதை விட, புள்ளி இல்லாமல் ஏதாவது படம் வரைவது பிடிக்கும். அவர்களின் சட்டையில் உள்ள படங்கள், சாக்லேட் டப்பாவில் உள்ள படங்களை கொண்டுவந்து கொடுத்து  வரையச் சொல்வார்கள்.

 ஒவ்வொரு ஆங்கில வருடப்பிறப்புக்கும் ஏதாவது கருத்து சொல்வது போல் கோலம் வரைவேன் முன்பு.

 அதனால், அடுத்த வருடம் வந்தவுடன் பக்கத்து வீட்டுப் பிள்ளைகள், ’ஆன்டி!  இந்த வருடம் என்ன கோலம்?’ என்று கேட்பார்கள். அவர்களுக்காகத் தான் கோலமே போட்டேன். இப்போது அவர்கள் எல்லாம் பெரியவர்களாக ஆகி விட்டார்கள். ஒரு சிலருக்குத் திருமணம் ஆகி விட்டது. சிலர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் வேறு ஊர், வெளிநாடு என்று போய் விட்டார்கள்.

புள்ளிவைத்த கோலங்கள், வரைகோலங்கள்,என்று போட்டாலும் அவர்களின் விருப்பத்திற்காக நான்  இடை இடையே வரையவும் செய்வேன்.

அவர்கள் எல்லாம் விரும்பிய  நான் வரைந்த கோலம்  பார்க்க ஆவலாய்  இருக்கிறதா? இங்கு பகிர்ந்து இருக்கிறேன். ’ ப்ப்பூ! இதுதானா? ’என்று எல்லாம் கேட்கக் கூடாது. சிறுவர் சிறுமிகளுக்கு நான் வரையும் கோலம் அழகு. ”ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல” அவர்களுக்கு நான். அவ்வளவுதான்!


2009ல் ஜூன் 1 அன்று முதன் முதலில் கிளிக்கோலம் போட்டு  ”மார்கழியில் மாக்கோலமாக விளைந்த மதி விருந்து” என்ற தலைப்பில் எழுதி என் வலைத்தளம் ”திருமதி பக்கங்கள்”  ஆரம்பித்தேன்.  

என் வலைத்தளத்தில் ’மார்கழிக் கோலங்கள்’ என்று நான் எழுதிய பதிவை நீங்கள் ”லேடீஸ் ஸ்பெஷல்” பெண்கள் மாத இதழில் (ஜனவரி 2011  புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பிதழில்)  கேட்டு வாங்கிப் போட்டீர்கள் .
அதைப் படித்து நிறைய பேர் பாராட்டினார்கள்.
என் வலைத்தளத்தில் ”மார்கழி கோலங்கள்” பதிவுக்கு  மறுமொழி கொடுத்தவர்கள் குறைவு என்றாலும் பார்வையாளர் வருகை 14851.

இன்னொருமுறை ”மார்கழியின் சிறப்பு” என்று நான் எழுதினேன். மார்கழி மாத இசை, பக்தி, கோலங்கள் பற்றி எழுதிய  அந்தப் பதிவுக்கு 700 பேர் வருகை தந்து படித்திருக்கிறார்கள்.


நன்றி தேனம்மை! வாழ்க வளமுடன்!

-- கோமதி மேம் .!!! அசத்தல் போங்க . இத்தனை கோலங்களா. கோலம் போடுவதன் விளக்கத்தையும் அதன் மூலம் பெறும் ஆரோக்கியத்தையும் பட்டியலிட்டது சிறப்பு. கிறிஸ்துமஸ் தாத்தாவும், சமாதானப் புறாக்களும், சமத்துவ வழிபாடும் மிகப் ப்ரம்மாதம்.

என்னது இலுப்பைப்பூ சர்க்கரையா. அப்படின்ன இங்கே இருக்க அடுத்த தலைமுறையினர் வெறும் சுகர் ஃப்ரீ பாக்கெட்டுகள். ஸ்டிக்கர் கோலத்தை ஆறு மாசத்துக்கொருதரம் வாங்கி ஒட்டுறவங்க. :) 

உங்கள் ரங்கோலி ஒவ்வொன்றும் இயல்பாகவும் அழகாகவும் இருக்கு.பூனைக்குட்டியும், முயல்குட்டியும் கரடியும் அணில்களும் பூக்களும் இயற்கைக்காட்சியுமா இருக்கு.

நல்லா சமைக்கிறவங்களுக்கு “ அருமையான சாப்பாடு.சமைக்கிற கைக்குத் தங்க வளையல் வாங்கிப்  போடணும்”.என்பார்கள். உங்கள் கோலங்களைப் பார்த்தாலும் அப்படிச் சொல்லத் தோணுது. :) லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த  உங்கள் ஆர்ட்டிகிள் மிகப் ப்ரமாதமாக இருந்ததாலேயே இத்தனை பார்வைகள். எல்லாப் புகழும் உங்களுக்கே :) மிக்க நன்றி மேம் உங்க கோலங்களை எங்களோடு பகிர்ந்துகிட்டமைக்கு.

டிஸ்கி 2 :- படங்கள் ஓபன் ஆகலைன்னு சொல்றாங்க. எனவே படங்கள் கோமதி மேம் வலைத்தளத்தில். பகிர்வு இங்கே இருக்கு.இதுக்கான படங்களை இங்கே போய் பாருங்க. 

டிஸ்கி 3 :- மிகுந்த ஸ்ரத்தை எடுத்து கோலங்களை ஐ எம் பி யிலிருந்து இங்கே போஸ்ட் செய்ய ஏற்ற அளவு மாற்றிக் கொடுத்து மெயிலில் அனுப்பிய தோழி ராமலெக்ஷ்மிராஜனுக்கு நன்றிகள். :)   

இப்போது பார்க்க முடியுதான்னு சொல்லுங்க மக்காஸ்..


44 கருத்துகள்:

  1. கோலத்தின் சிறப்புகளைச் சொன்னதற்கு நன்றி.

    சிறுவயதில் கோலத்தில் ரொம்ப இன்ட்ரஸ்ட் உண்டு! நானே கோலங்களை உருவாக்கவும் முயற்சி செய்திருக்கிறேன்! அவற்றை வாசலில் போட்டதும் உண்டு.

    அம்மா உடல்நிலை சரியில்லாதபோதேல்லாம் நான் வாசலில் கோலம் போட்டிருக்கிறேன் - தஞ்சையிலும், மதுரையிலும். முதலில் யாரும் பார்ப்பதற்குமுன் அதிகாலை 4 அல்லது நாலரைக்குள். அப்புறம் அப்புறம் போங்கடா (அல்லது 'போங்கடி' ) என்று ஐந்தரைக்கு மேல் கூட அருகாமை சக பெண் உறுப்பினர்களுடனும் போடுவேன்!

    கோமதி மேடம்... இங்கும் பல படங்கள் திறக்க நேரம் எடுக்கின்றன (எனக்கு..... எனக்கு)

    பதிலளிநீக்கு
  2. சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. அன்பு தேனம்மை, உங்கள் தளத்தில் என் பேட்டியை படிப்பதில் ஆனந்தம் அடைந்தேன்.
    அப்படியே என் கோலங்களையும் பார்க்கலாம் என்று ஆவலாக வந்தால் ஒரு படம்கூட திறக்கவில்லை.. ஸ்ரீராம் பல படங்கள் திறக்க வில்லை என்கிறார். ஒன்று இரண்டு ஸ்ரீராம் பார்த்து இருப்பார்கள் போலும் எனக்கு அது கூட இல்லை. என்னகாரணம் என்று தெரியவில்லை.

    //உங்கள் ரங்கோலி ஒவ்வொன்றும் இயல்பாகவும் அழகாகவும் இருக்கு.பூனைக்குட்டியும், முயல்குட்டியும் கரடியும் அணில்களும் பூக்களும் இயற்கைக்காட்சியுமா இருக்கு.

    கிறிஸ்துமஸ் தாத்தாவும், சமாதானப் புறாக்களும், சமத்துவ வழிபாடும் மிகப் ப்ரம்மாதம்.//
    என்று நீங்கள் சொல்லி இருப்பதால் உங்களுக்கு தெரிந்து இருக்கிறது என்று தெரிகிறது.


    நல்லா சமைக்கிறவங்களுக்கு “ அருமையான சாப்பாடு.சமைக்கிற கைக்குத் தங்க வளையல் வாங்கிப் போடணும்”.என்பார்கள். உங்கள் கோலங்களைப் பார்த்தாலும் அப்படிச் சொல்லத் தோணுது. :) //

    இந்த உங்களின் பாராட்டே தங்கவளையல் கிடைத்த சந்தோஷம் தந்தது.

    இந்த பாராட்டே என்னை மேலும் எழுத, வரைய தூண்டும் உற்சாக டானிக்.
    நன்றி தேனம்மை.
    /

    பதிலளிநீக்கு
  4. அழகுக்கோலமாய் மலர்ந்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  5. அஹா கோலமும் தெரியுமா ஸ்ரீராம். சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். பரவாயில்லையே . ஒரு பூர்வீகக் கலையைக் கத்து வச்சிக்கிட்டு இருக்கீங்க. ! பாராட்டுகள். படம் எல்லாம் குட்டி குட்டியாத்தானே போட்டிருக்கேன். கேபி கம்மியாதானே இருக்கும். ஏன் ஓபன் ஆகலை. ஹ்ம்ம்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஸ்ரீராம், முதலில் வந்து கருத்து சொன்னதற்கு மிகவும் நன்றி.
    நீங்கள் கோலமும் போடுவீர்களா? மகிழ்ச்சி.மார்கழி மாதம் என் அண்ணன், தம்பிகள் எல்லாம் கலர் செய்ய உதவி செய்வார்கள். சில படங்கள் பார்த்தீர்களா? எனக்கும் ஒன்றும் தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
  7. எனக்கு எல்லா படங்களும் திறக்கின்றன கோமதி மேம். ஒருத்தர் 2 ஜி இணைப்பில் திறக்கலை என்று சொன்னார். புகைப்படங்களை சின்னதாக போடட்டுமா..

    பதிலளிநீக்கு
  8. ஒ அப்படியா? சின்னதாக போட்டால் தெரியும் என்றால் போடுங்கள் தேனம்மை.
    எனக்கு நான் அனுப்பியதில் எதும் தவறோ என்று உங்களிடம் கேட்கலாம் என்று வந்தேன். ஆனால் உங்களுக்கு தெரிகிறது. என்றவுடன் ஸ்பீட் காரணமாக இருக்கும் என்று நினைத்தேன்.
    நன்றி தேனம்மை.

    பதிலளிநீக்கு
  9. இந்தப்பேட்டியே அழகுக்கோலமாய் அமைந்துள்ளது சிறப்போ சிறப்பாக உள்ளது. இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    //மார்கழி மாதம் கோலம் போடுவதால் கிடைக்கும் நன்மை:-
    அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்த நமக்கு கை,கால்களை அசைத்து, இடுப்பை வளைத்துப் பெருக்கித் தெளித்துக் கோலம் போடும்போது குளிர் போய், வெப்பம் கிடைக்கிறது.//

    குளிர் விட்டுப்போகச்செய்யும் [ஆனால் மனதுக்கு மிகவும் குளிர்ச்சியான] வரிகள். ஸ்பெஷல் பாராட்டுகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  10. இப்போது ஓபன் ஆகுதா கோமதி மேம். சிறிய அளவு என்று கொடுத்துள்ளேன். புகைப்படங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  11. ஒரு படம் கூட எனக்கும் தெரியவில்லை. திறக்கவில்லை. முதலிரண்டும் Gone. Error 410 என்கிறது. மற்ற படங்களும் திறக்கவில்லை.

    முதல் முறை கோலம் போடும்போது பெண்கள் கோலமிடும்போது விழுவது போல இழை அச்சாக விழவில்லை. இரண்டு முறை போடுவேன். தனித்தனி இழையாகத் தெரியும்! அப்புறம் பழகி விட்டேன்!அம்மாவின் மாதாந்திர விடுப்பு நாட்களில் போடா சில எளிய கோலங்கள் பழகி வைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  12. முதலில் பெரிய பெரிய கட்டங்களாகத் திறக்காமலிருந்த படங்கள் இப்போது சிறிய சிறிய கட்டங்களாகத் திறக்காமல் இருக்கிறது! :))))))))

    பதிலளிநீக்கு
  13. ஓ மை கடவுளே. என்ன செய்றது ஸ்ரீராம். புகைப்படங்கள் எப்போதுமே அப்லோட் ஆகுமே என் ப்லாகில் . சில சமயம் கொஞ்சம் லேட் ஆகும். திறக்கலை என்றால் என்ன பிழை இருக்கும். எப்படி சரி செய்யலாம்.

    அஹா நீங்க கோலத்தைப் பத்தி எழுத எழுத கோலம் போடுவது போன்ற பிம்பம் மனதில் படிந்துவிட்டது. ஹாஹா.. நல்லதுதான் அம்மாவுக்கு. ... சரி வீட்டம்மாவுக்கும் ஹெல்ப் உண்டா இல்லை கோல ஸ்டிக்கர் வாங்கி ஒட்ட சொல்றீங்களா.. :)

    பதிலளிநீக்கு
  14. பதிவு அருமை. வாழ்த்துக்கள் கோமதி அரசு அம்மா,

    பதிலளிநீக்கு
  15. ஆ !! கோலம்ஸ் !! பூனைக்குட்டி முயல் குட்டின்னு எதோ படம் சொல்றீங்க /..எனக்கு ஒரு படமும் தெரியலைக்கா ?????
    ப்ளாங்கா இருக்கு ..ஆனா கோமதிம்மா படம் முகபுத்தகத்தில் பார்த்தேன் இங்கே ஒன்றும் வரல .

    பதிலளிநீக்கு
  16. ஆ !! கோலம்ஸ் !! பூனைக்குட்டி முயல் குட்டின்னு எதோ படம் சொல்றீங்க /..எனக்கு ஒரு படமும் தெரியலைக்கா ?????
    ப்ளாங்கா இருக்கு ..ஆனா கோமதிம்மா படம் முகபுத்தகத்தில் பார்த்தேன் இங்கே ஒன்றும் வரல .

    பதிலளிநீக்கு
  17. அருமையான பேட்டி கோமதியம்மா ..இங்கே கேக் மேலே கோலம் டிசைன் அப்புறம் ரங்கோலி கோலம் போட தெரியுமா சொல்லி முடியுமான்னு ஒரு பிரிட்டிஷ் அம்மா கேட்டாங்க ..வெளிநாட்டினருக்கும் கோலம்லாம் ரொம்ப பிடிக்கும் ரசித்து பார்ப்பாங்க அதை ஸ்னோ FLAKES டிசைன் போல இருக்குன்னு சொன்னாங்க ஒருவர் :)
    மீண்டும் சிறிது நேரம் கழித்து வந்து கோலங்களை ரசிக்கிறேன் !
    மனது ஒருங்கிணைப்பு கான்சென்ட்ரேட் செய்ய கோலம் மிக சிறந்த ஹாபி

    பதிலளிநீக்கு
  18. தேனம்மை திரும்ப ஒருமுறை பதிவை அப் லோடு செய்தால் படம் வரலாம் என்கிறார்கள்.
    முடிந்தால் பாருங்கள் இல்லையென்றால் கஷ்டபடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. தமிழ்ப் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து!
    http://eluththugal.blogspot.com/2014/10/blog-post_97.html

    பதிலளிநீக்கு
  20. தேனம்மை , நானும் ஒரு பதிவு அனுப்பி பார்த்தேன் படம் இங்கே ! பதில் அங்கே ! என்று என் லேப் டாப்பில் காட்டுகிறது ஆனால் மகளுக்கு அனுப்பி பார்க்க சொன்னேன் தெரியவில்லை என்கிறாள் . திண்டுக்கல் தனபாலன் அவர்கள் இருந்தால் சரி செய்ய உதவி செய்வார். இப்போது அவர் பதிவர் திருவிழாவில் இருக்கிறார். http://mathysblog.blogspot.com/2014/10/blog-post_93.html நீங்களும் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  21. ஷ்....ஷப்பா... இப்பவும் படம் ஒன்றும் தெரியவில்லை! :))))

    பதிலளிநீக்கு
  22. கோமதிம்மா ப்ளாகில் ! இப்போ படங்கள் தெரிகிறது அக்கா ..

    ப்ளு கலர் dungarees போட்ட கரடியார் ,மாடிப்படி அருகே கோலம் போடும் gomathi madam ,ஓடையும் வீடும் படகும் ,சோடி மயில்கள் புறாக்கள் வெண்ணெய் உண்ணும் கண்ணன் சாண்டா தாத்தா ,சீனப்பெண் பாப்பா ,ரெட் ரைடிங் ஹூட் ,மும்மதங்கள் வழிபாட்டுத்தலங்கள் என அனைத்தும் அருமைம்மா..எனக்கு கரடியார் ரொம்ப பிடிச்சிருக்கு :))))

    பதிலளிநீக்கு
  23. அன்பு தேனம்மை, மன்னிக்கவும். படம் அனுப்பிய முறையில் ஏதோ தவறு போல இப்போது மறுபடியும் படங்களை வலை ஏற்றி பார்த்தேன் வருகிறது.
    இங்கு வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம்
    ஒரு படைப்பாளியை உச்சாகமூட்டும் செயற்பாடு இதைப் போன்று பலரது திறமைகள் வெளி வந்தால் நன்று தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் படங்கள் ஒன்றும் தெரியவில்லை... பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  25. எனக்கும் என் வலைத்தளம் ஓபன் ஆகும்போதெல்லாம் தெரிகிறது. மற்றவர்களுக்கு ஏன் தெரியவில்லைன்னு தெரியலை. ஒரு வேளை இவற்றை நீங்கள் முன்பே பகிர்ந்து இருக்கீங்களா. ஷேர்டு ப்ரைவேட்லி போட்டா மட்டும்தான் யாருக்கும் தெரியாது.. ஹ்ம்ம் பார்ப்போம் . நாளை தனபாலன் சகோ வந்தவுடன் கேட்போம் அதுவரை இதையே நானுமென் வலைத்தளத்தில் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. தேனம்மை ,ஷேர்டு ப்ரைவேட்லி போட்டா மட்டும்தான் என்பது பேஸ்புக்கில் மட்டும் தானே இங்குமா?
    நான் இப்போது தான் முதன் முதலில் ஆல்பத்தில் உள்ள படங்களை உங்கள் பேட்டிக்காய் முதன் முதலில் அளித்து இருக்கிறேன். மெயிலில் அனுப்பியதில் ஏதோ தவறு அது என்ன காரணம் என்று
    தெரியவில்லை. எனக்கும் ஓபன் செய்யும் போது எல்லாம் தெரிந்ததே!

    அனுபவங்கள் நிறைய கிடைக்கிறது. இரவு 12 வரை யோசித்து யோசித்து மறுபடியும் பழைய படங்களை நீக்கி விட்டு புதிதாக டவுன்லோடு செய்து போட்டேன். உங்களால் எனக்கு பழைய படங்களை போடும் வாய்ப்பு கிடைத்தது. உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அதிகாலையில் வந்து தேவதை போல் ஏஞ்சலின் படம் தெரிகிறது என்றவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஏஞ்சலின் மறுபடியும் உங்கள் தளத்திற்கு வந்து படங்களை பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.

    //ஒரு படைப்பாளியை உற்சாகமூட்டும் செயற்பாடு இதைப் போன்று பலரது திறமைகள் வெளி வந்தால் நன்று தங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்//

    ரூபன் சொன்னது அருமை. பதிவர்களை உற்சாகம்மூட்டும் உங்கள் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.
    நீங்கள் சொல்வது போல் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!

    பதிலளிநீக்கு
  27. இங்கே படங்கள் தெரியலை. பேட்டி அருமை.

    பதிலளிநீக்கு
  28. கோமதிம்மாவின் வலைப்பூவில் தான் படங்களைப் பார்க்க வேண்டும்! அவர்களின் ரசனையே ரசனை...

    கோலங்கள் பற்றிய சிறப்பான பதில்கள்....

    பதிலளிநீக்கு
  29. //மனது ஒருங்கிணைப்பு கான்சென்ட்ரேட் செய்ய கோலம் மிக சிறந்த ஹாபி//

    ஏஞ்சலின் , நீங்கள் சொல்வது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  30. இந்தப்பேட்டியே அழகுக்கோலமாய் அமைந்துள்ளது சிறப்போ சிறப்பாக உள்ளது. இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.//

    வை,கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன், உங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. தேனம்மை , மறுபடியும் சிரமத்தை பார்க்காமல் படங்களை வலையேற்றி விட்டீர்கள் நன்றி.
    மிகுந்த ஸ்ரத்தை எடுத்து கோலங்களை ஐ எம் பி யிலிருந்து போஸ்ட் செய்ய ஏற்ற அளவு மாற்றிக் கொடுத்த ராமலக்ஷ்மிக்கு மிகவும் நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  32. படங்களின் அளவைக் குறைத்ததோடு, அதன் ஃபைல் பெயர்களையும் மாற்றிப் பார்த்தேன். இப்போது தெரிகின்றன தேனம்மை. நல்லதொரு பேட்டியை வழங்கியுள்ளீர்கள். நன்றி.

    கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்த விளக்கங்களும், உங்கள் அனுபவம் குறித்த பகிர்வும் அருமை, கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  33. நல்ல கலைத்திறனும் கற்பனைத்திறனும் கைலாவகமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு விஞ்சும் அழகு. முதல் படம் தவிர்த்த மற்ற கோலங்கள் அனைத்தையும் என்னால் பார்க்கமுடிகிறது. கண்ணுக்கு விருந்து படைக்கும் கோலங்கள் ஈ எறும்புகளுக்கும் விருந்தாவது சிறப்பு. கோலமிடுவதன் அவசியத்தை அழகாக உரைத்துள்ளீர்கள் கோமதி மேடம். மனம் நிறைந்த பாராட்டுகள் உங்களுக்கு. இப்படியொரு அற்புதமான பதிவெழுதத் தூண்டி பல கோலங்களையும் வெளிக்கொணரச் செய்த தேனம்மைக்கும் இனிய பாராட்டுக்ள.

    பதிலளிநீக்கு
  34. கோலம் பற்றிய கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி கோமதி மேம் :) புகைப்படங்கள் இப்போது எல்லாருக்கும் தெரிகிறது. பார்க்க முடிகிறது சந்தோஷம் :)

    பதிலளிநீக்கு
  35. உங்கள் அன்பான கருத்துகளுக்கு நன்றி கோபால் சார்

    நன்றி டா புதுகைத் தென்றல்.

    தொடர்ந்து வந்து பார்த்துப் படித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றிடா ஏஞ்சல். சந்தோஷமா இருக்கு. :)

    ஊக்கமுட்டும் வார்த்தைகளுக்கு நன்றி ரூபன் சகோ.

    பதிலளிநீக்கு
  36. நன்றி கீதா மேம்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி ராமலெக்ஷ்மி புகைப்படங்களை ஏற்றும் அளவு மாற்றி அனுப்பித்தந்தமைக்கு நன்றி.

    அழகான கருத்துகளுக்கு நன்றி கீதா..

    அழகான இடுகையையும் கோலங்களையும் அனுப்பியமைக்கு நன்றி கோமதி மேம். :)

    பதிலளிநீக்கு
  37. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  38. ராமலக்ஷ்ம, உங்கள் முயற்சிக்கு நன்றி.
    உங்கள் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  39. கீதமஞ்சரி, நீங்கள் சொன்னது போல் தேனம்மைக்குதான் நான் சொல்ல வேண்டும்.
    இது போன்று கேள்விகள் கேட்டு பதில்களை வாங்கி அளித்தமைக்கு..

    முதல் படம் என் படம் அனுப்பி இருந்தேன், அதை மறுபடியும் ராமலக்ஷ்மிக்கு அனுப்ப மறந்து விட்டேன். அதுதான் அந்த முதல் படம் வரவில்லை.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. அனைத்தும் அருமை.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  41. நன்றி ஆதிரா மேம் :)

    நன்றி கோமதி மேம், கீதா :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...