எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 அக்டோபர், 2014

எக்ஸ்னோரா.. ExNoRaஎக்ஸ்னோரா.

எக்ஸ்னோரா சிதம்பரம் என்பவரை ஒரு முறை குமரன் கல்யாண மண்டபத்தில் லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நடைபெற்ற  நவராத்ரி விழாவின்போது சந்தித்தேன். சீஃப் கெஸ்ட் மேன்மைமிகு கவர்னர் பர்னாலாவின் பேத்தி ஆயிஷா ஸாந்து ., ஸ்பெஷல் கெஸ்ட் ஃபிலிம் டைரக்டர் மதுமிதா விஜய்., மற்றும் எக்ஸ்னோரா சுலோசனா ராமசேஷன்.. குத்துவிளக்கேற்றி முப்பெரும் தேவியரும் விழாவைத் தொடங்க.. நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.. எக்ஸ்னோராவைச் சேர்ந்த சுலோச்சனா அவர்களுக்கு லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நினைவுப் பரிசு வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.!

அந்த நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா மெம்பரான சிதம்பரம் என்பவரும் வந்திருந்தார். அவரிடம் அது பற்றிக் கேட்டபோது சிறிது விவரங்கள் அளித்தார்.இவர் 2 கவிதை நூல்களும், ஒரு ஜோக் நூலும் ஒரு நாவலும் ( தாய்மையே வெல்லும் ) வெளியிட்டிருக்கிறார்.


(இவருடைய கவிதைகளில் சில

நான் நீங்கள் வைத்த மரம்
அதற்காக உங்களை விட
உயரமாக வளரக்கூடாதா.

இரவில் தூங்கிய பால்
விழித்து எழுந்ததும் தயிர்

புடவைக் குடும்பத்தில் பிளவு
அடடே இரண்டு தாவணிகள்

குத்தும் முள்தானே
வேலியானால் உன்னையே பாதுகாக்கிறது.)


இனி எக்ஸ்னோரா பற்றி

இதன் ஃபவுண்டர் நிர்மல். இவர் ஐஓபி யில் வேலை பார்த்தவர். சமூக ஆர்வலர். தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவிலும் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களுள் ஒருவர். ( என் முகநூல் நண்பராக இருந்த இவரிடமும் இது குறித்துப் பேசி இருந்தேன். ஆனால் என்னவோ ஒரு காரணத்தால் இதைப் பற்றி எழுத தாமதப்பட்டு தடைப்பட்டு விட்டது. அதன் பின் இவரை ப்ரகாஷ் எம் ஸ்வாமிக்கு ரோட்டரி க்ளப் மூலம் ஹோட்டல் சவேராவில் நடந்த ஒரு பாராட்டு விழாவில் சந்தித்தேன். சொற்ப நேரம் என்பதால் அப்போதும் பேச வாய்க்கவில்லை.)

இவர் வீட்டுப் பகுதியில் குடிசைகள் இருந்தன. அவற்றைச் சுற்றிலும் இருந்த அழுக்கும் ஆரோக்கியமற்ற சூழலும் இவர் எக்ஸ்னோரா என்ற சேவை நிறுவனம் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தன. எனவே சென்னையில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. சுற்றுச் சூழலைப் பாதுகாத்துப் பராமரிப்பதே இதன் குறிக்கோள்.

முதலில் தண்ணீர், மின்சாரம், குப்பை ஆகியவற்றில் விழுப்புணர்வு ஏற்படுத்த சிவிக்ஸ் ஆரம்பித்தார்கள். இதுக்காக வாலண்டியர்களின் உதவிகளும் பெறப்பட்டது. அதோடு திடக்கழிவு மேலாண்மை செய்ய மக்கும் குப்பை மக்காத குப்பைன்னு பிரிச்சு கழிவுகளைப் போட அறிவுறுத்தினார்கள்.( SoSoWaM -  Source Solid Waste Management , IMBY - In My Back Yard  - அதாவது வீட்டின் பின் பக்கத்திலோ/ஏதோ ஒரு பகுதியில் நம்முடைய குப்பைகளை நாமே பிரித்து அதை மக்கவைக்கவோ அல்லது ரீசைக்ளிக்குக்கு அனுப்பவோ முடியும். -- SoSoWaC & SoSoWaR = Source Solid Waste Composting & Source Solid Waste Recycling. )

திடக் கழிவு மேலாண்மையில் இந்த மக்கும் குப்பைகளைப் பிரிச்சுத் தொட்டியில் போட்டு மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. சமையலறைக் காய்கறிக் கழிவுகள் பேப்பர்கள், ஆகியன மக்கும் குப்பையிலும் ப்ளாஸ்டிக் பைகள் ரப்பர், ப்ளாடிக் சாமான் கழிவுகளை இன்னொரு கூடையிலும் போட்டு வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. மேலும் கண்ணாடி போன்ற பொருட்களை ஒரு பகுதியிலும் , துணி பழைய பொருட்களை ஒரு பிரிவாகவும் இரசாயனக் கழிவுகளையும் மற்ற வேஸ்டேஜ் பொருள்களையும் ஒரு பிரிவாகவும் பிரித்து வகைப்படுத்தி அவற்றுக்கேற்றாற்போல மறு சுழற்சி செய்யப்படுது.


தீபாவளி சமயங்களில் வெடி வெடித்தபின் மிஞ்சும் பேப்பர்களும் மறு சுழற்சிக்கு அனுப்பப்படுது. மக்கும் குப்பைகள் உரமாகவும். மற்ற குப்பைகள் அதனதன் தேவை பொறுத்தும் ப்ளாஸ்டிக் குப்பைகள் ரோடு போடவும் பயன்படுத்தப் படுகின்றன. சில எரிபொருள் தயாரிக்கவும் அனுப்பப்படுகின்றன. 

அலுவலகங்களில் இருக்கும் ஈ வேஸ்ட் எனப்படுபவற்றை எப்படி மறு சுழற்சிக்கு உட்படுத்தலாம்னு சொல்றாங்க. 

இன்னும் உலகம் வெப்பமயமாதலைத் தடுக்கவும் இந்த அமைப்பு பாடுபடுது. ட்ராகேனா ப்ராவுனி என்ற மூங்கில் செடியை (புல்லினம் )வீட்டுல அதிகமா வளர்ப்பது அதிர்ஷ்டத்துக்கு மட்டுமில்ல இது ஆக்ஸிஜனையும் குளிர்பதனத்தையும் அதிகப்படுத்தும். அதுனால இதை வளர்க்க அறிவுறுத்துறதா சொன்னார். மேலும் இதுக்கு பராமரிப்பு கம்மி. இது தண்டிலதான் எல்லாம் இலை மிகச் சிறிது என்பதால அதிகம்  சூரிய ஒளி கூட தேவையில்லைன்னு சொன்னார். 

இந்தக் கருவைக் காடுகளுக்கும்  ஒரு வழி பண்ணனும் இந்த அமைப்பு.
ஏன்னா இந்தியா முழுக்கப் போய் வந்ததுல எல்லா மாநிலங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது இந்தக் கருவேல மரங்கள்தான். இவை நிலத்தடி நீரை உறிஞ்சி நிலத்தைப் பாலையாக்குவது மட்டுமல்ல. காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் உறிஞ்சிடறா சொல்றாங்க.

இந்த உலகம் இனி வரும் தலைமுறைகளுக்கும் உய்யணும்னா நாமும் ஃப்ரிட்ஜ் உபயோகம், பெட்ரோல் வாகன உபயோகம், குறைக்கணும். முடிந்த வரை கடைகளில் பாலிதீன் பைகளுக்குப் பதிலாக பேப்பர் பைகளில் பொருட்களை வாங்கணும் மளிகைப் பொருட்கள் வாங்கப் போகும்போது வீட்டிலிருந்தே பை பாத்திரங்கள் போன்றவை கொண்டு சென்றால் ( அதான் துணிக்கடை மஞ்சப் பைகளும் கட்டைப் பைகளும் வீட்டில் அதிகம் இருக்கே. சொல்லப் போனா பரம்பரை பரம்பரையா இருக்கு J ஆனா அவங்க ஹெல்த்தில பாதிதான் நமக்கு இருக்கு. நமக்கு அடுத்த ஜெனரேஷனுக்கு அதுல கால்வாசிதான் இருக்கு.

இதை எல்லாம் மாற்ற நம்மாலான முயற்சி எடுப்போம். இயற்கை வழியில் வாழ்வோம். சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வோம். வாழ்வாதாரங்களைப் பாதுகாப்போம்.


7 கருத்துகள்:

 1. நல்ல அருமையான தகவல்கள் சகோதரி!

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 3. //நான் நீங்கள் வைத்த மரம்
  அதற்காக உங்களை விட
  உயரமாக வளரக்கூடாதா.//
  மனசை தொட்ட வரிகள்க்கா !!


  எக்ஸ்னோரா அமைப்பின் செயல்பாடுகள் மிக அருமை ..பிளாஸ்டிக் முறையாக அப்புரப்படுதவேண்டிய ஒன்று ..நாங்க இங்கே வெளிநாட்டிலேயே துணிபைதான்க்கா பயன்படுத்தறோம் ....பொது மக்கள் ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கணும் .தூக்கி ரோட்டில் வீசும் சகலவித குப்பைங்களும் இறுதியில் சேருமிடம் கடல் அதன் பாதிப்புகள் நமக்குதான் நிறைய :( ஆகவே குப்பைகளை முறையே மீள்சுழற்சி செய்யவேண்டும் .நல்ல பகிர்வு அக்கா .

  பதிலளிநீக்கு
 4. ஒரு அருமையான மனிதரைப் பற்றி அழகான பகிர்வு அக்கா...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. அழகான கருத்துக்கு நன்றிடா ஏஞ்சல்.

  நன்றி மனசு குமார் சகோ :)

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...