எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 அக்டோபர், 2014

கீர்த்தி மந்திரில் (காந்திமகான் பிறந்த இடத்தில்) ஒரு கையெழுத்து.

தமிழ் நாட்டில் காந்தி சிலைகள் இல்லாத ஊரோ, காந்தி ரோடு என்று பெயரிடப்படாத சாலைகள் கொண்ட ஊரோ பார்க்க முடியாது. அந்த அளவுக்கு காந்தியின் மேல் பற்றுக்கொண்டவர்கள் நாம்.

சில நாட்களுக்கு முன் காந்தியடிகள் பிறந்திருந்த போர்பந்தருக்கு என் தம்பி குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். முன்பு சுதாமாபுரி என்று அழைக்கப்பட்ட ஊர் இது. இங்கேதான் சுதாமருக்கும் கோயில் உள்ளது.

நம் நாட்டின் விடுதலைக்கு அகிம்சா வழியில் பாடுபட்ட அண்ணல் அவர்களின் இல்லத்தை-- கீர்த்தி மந்திர் --  காணவே சென்றிருந்தோம்.தற்போது குஜராத் அரசால் நிர்வகிக்கப்படுகிறது. வாயில் கதவுகளின் இருபுறமும் சுதேசிச் சிந்தனையை வெளிப்படுத்தும் வண்ணம் இராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

மகாத்மா காந்தி பிறந்த இடத்துக்கு அடியெடுத்து வைத்தபோது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட மகான். அவர் பிறந்த இடத்தைத் தரிசிப்பது என்பது எவ்வளவு கொடுப்பினை.


 சத்தியமும் அகிம்சையும் இருபடிகளாக அமைக்கப்பட்டு அதன் மேல் காந்தியடிகள், கஸ்தூரிபாய் அம்மையார் இருவரின் புகைப்படங்களும் வைக்கப்பட்டு ராட்டை மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

காந்தியடிகள் இந்த ஸ்வஸ்திக் சின்னமிடப்பட்ட இடத்தில்தான் பிறந்திருக்கிறார். அதை அங்கே மார்க் செய்து அறிவுப்புப் பலகைகளில் இது பற்றிய விவரத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

 அவரது தாத்தா ஹர்ஜீவன் காந்தி ஒரு உள்ளூர்ப் பெண்மணியிடம் இந்த இல்லத்தை வாங்கி அதை மூன்று தளங்கள் கொண்ட கட்டிடமாக கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பே புதுப்பித்து இருக்கிறார்.


காந்திஜி பற்றிய அரிய தகவல்களும் புகைப்படங்களும் நிறைந்துள்ளன. அவை இன்னொரு இடுகையில் தருவேன். :)


இயற்கைச் சாளர முறையில் அமைந்த ஜன்னல்கள். மாடியில் நீண்ட அறைகள்.

காந்தியடிகள் வீட்டின் பின்புறத்திலேயே கஸ்தூர்பா அம்மையார் பிறந்த இல்லமும் இருக்கிறது. அதுவும் மூன்றுதளக் கட்டிடம்தான்.
காந்திஜியைப் பற்றி குழந்தைகள் மட்டுமல்ல நாங்களும் இன்னும் அதிகம் அறிந்து கொண்டோம். ஃபீலிங் ப்ளஸ்டு என்று சொல்வார்கள் இல்லையா அந்த மனோ நிலையில் இருந்தோம்.

அங்கே சென்றதற்கு அத்தாட்சியாக விசிட்டர்ஸ் புக்கில் என் கையொப்பத்தைப் பதியச் சொல்லி என் சகோதரன் சொன்னான். அதையும் பதிந்து ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்ல. எங்கேயும் எப்போதும் நாம வலைப்பதிவர்கள் ஆச்சே .வரலாற்று நாயகனில் இல்லத்துக்கு போன வரலாறு முக்கியமாச்சே. ரொம்ப பெருமையும் சந்தோஷமுமா இருந்தது. நன்றி இப்படி ஒரு பேரனுபவம் கிடைக்க என்னை அழைத்துக் கொண்டு போன என் தம்பிக்கும் அவனது மனைவிக்கும். :)

டிஸ்கி:- இதையும் பாருங்கள். நாட்டின் சுதந்திரமும் நமது சுதந்திரமும். 

8 கருத்துகள்:


 1. இங்கே நானும் ஒரு கையெழுத்து
  போட்டு அந்த இடத்திலே கையெழுத்து போட்ட
  ஒரு திருப்தி பட்டுக்கொள்கிறேன்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 2. காந்தி பிறந்த நாளன்று காந்தி பிறந்த இல்லத்தைத் தரிசனம் செய்யக் கொடுத்தீர்கள் தேனம்மா. மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அஹா மிக அருமையாகச் சொன்னீர்கள் சூர்யா சார். உங்க கையெழுத்தும் அங்கே சேர்ந்துடுச்சு. :)

  நன்றி வல்லிம்மா :)

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 5. ஸ்வஸ்திக் சின்னமிடப்பட்ட இடத்தில்தான் பிறந்திருக்கிறார். //
  மகான் பிறந்த அந்த புனித இடத்தை வணங்கி மகிழ்ந்தேன்.
  அருமையான பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

  பதிலளிநீக்கு
 6. அருமை தேனே!

  காந்தி பொறந்த வூட்டுக்குள்ளே படம் எடுக்க அனுமதி எனக்குக் கிடைக்கலைப்பா:( அந்த வகையில் நீங்கள் பெரும் பேறு அடைந்துள்ளீர்கள்..

  நம்ம கீர்த்தி மந்திரி விஸிட் இங்கே: நேரம் கிடைக்கும்போது பாருங்கள்.

  http://thulasidhalam.blogspot.com/2010/02/18.html

  பதிலளிநீக்கு
 7. நன்றி கோமதி மேம்

  நன்றி துளசி பார்த்தேன் அருமை !

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...