தமிழ் நாட்டில் காந்தி சிலைகள் இல்லாத ஊரோ, காந்தி ரோடு என்று பெயரிடப்படாத சாலைகள் கொண்ட ஊரோ பார்க்க முடியாது. அந்த அளவுக்கு காந்தியின் மேல் பற்றுக்கொண்டவர்கள் நாம்.
சில நாட்களுக்கு முன் காந்தியடிகள் பிறந்திருந்த போர்பந்தருக்கு என் தம்பி குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். முன்பு சுதாமாபுரி என்று அழைக்கப்பட்ட ஊர் இது. இங்கேதான் சுதாமருக்கும் கோயில் உள்ளது.
நம் நாட்டின் விடுதலைக்கு அகிம்சா வழியில் பாடுபட்ட அண்ணல் அவர்களின் இல்லத்தை-- கீர்த்தி மந்திர் -- காணவே சென்றிருந்தோம்.தற்போது குஜராத் அரசால் நிர்வகிக்கப்படுகிறது. வாயில் கதவுகளின் இருபுறமும் சுதேசிச் சிந்தனையை வெளிப்படுத்தும் வண்ணம் இராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தி பிறந்த இடத்துக்கு அடியெடுத்து வைத்தபோது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட மகான். அவர் பிறந்த இடத்தைத் தரிசிப்பது என்பது எவ்வளவு கொடுப்பினை.