எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
TOURISM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TOURISM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 அக்டோபர், 2015

பழம்பொரியும், சிக்கன் கறியும்.

சென்ற வருடம் திருவனந்தபுரமும், பாலோடும்  பொன்முடியும் சென்றிருந்த போது விதம் விதமான கேரள உணவுகளை ருசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

அவற்றுள் கப்பக்கிழங்கு மசியல், கேரள சிவப்பரிசி ( கொட்டையரிசி ) சாதம், தேங்காய் எண்ணெயில் சிவப்பு மிளகாய் கிள்ளிப் போட்டு வறுத்த கோழிக்கறி, சிக்கன் க்ரேவி, மத்திமீன் ஃப்ரை , பழம் பொரி ( ஏத்தக்காயப்பம் ), உன்னியப்பம், இலைக் கொழுக்கட்டை,  நேந்திரன் சிப்ஸ், எளக்கி வாழைப்பழம், சீரக வெள்ளம் ( அட சீரகம் போட்டுக் காய்ச்சிய தண்ணிதாங்க ! ) , அப்புறம் ஏதோ மரப்பட்டையைப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரும் கிடைச்சுது.

நம்ம தமிழ்நாட்டு நாக்குக்கு அதெல்லாம் வித்யாசமா இருந்துச்சு. நாம முன்னே கடலை எண்ணெய் அப்புறம் நல்ல எண்ணெய் அது கசந்ததால பின்ன ரிஃபைண்ட் ஆயில்னு மாறிட்டோம். ஆனா மலையாளீஸ் இன்னும் சமையல் தேங்காய் எண்ணெயிலதான்.

நாங்கள் சென்னையில் இருந்தபோது கேரளாவில் ஒரு முறை வெள்ளம் வந்ததை டிவியில்   கீழ்வீட்டுத் தோழி ரஜிதாவுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த வெள்ளத்திலும் ஒரு பெண் தேங்காய் உடைத்துத் திருகி ( மெய்யாலுமே ஒரு பாறையின் மேல் அமர்ந்து சுற்றி நீர் ஓடிக் கொண்டிருக்க ) அருகாமணையில் தேங்காய் திருகிக் கொண்டிருந்தது. அப்போது அவர் “ பாரு எவ்ளோ வெள்ளம் வந்து என்ன . தேங்காய் திருவிகிட்டு இருக்கு மலையாளீஸுக்குத் தேங்காய் இல்லாம சமைக்கத் தெரியாது என்றார் !”

அதென்னவோ தேங்காயிலும் தேங்காய் எண்ணெயிலும் விதம் விதமாகப் பொரித்தும் வறுத்தும் வதக்கியும் அரைத்தும் அவர்கள் சமைக்கும் உணவுகளின் ருசிக்கு ஈடு இணை இல்லைதான்.

மத்தி மீனைக் கீறி மிளகாய்ப் பொடி போட்டு உரசி தேங்காய் எண்ணெயில் வறுத்திருந்தார்கள். பயங்கரக்காரம். அது மறுநாள்தான் தெரியும் :) :) :)

திங்கள், 2 பிப்ரவரி, 2015

உணவுப் பயணங்கள் . நியூ தில்லி.



உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி

தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால் நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம்.

தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம். தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு கலந்தது போல் ஒரு ருசி. நாக்கின் சுவைமொட்டுக்கள் சொட்டாங்கி போட்டு குடிக்கலாம். தாகமும் அடங்கும்.

அதே மதியத்தில் ஐஸ்வண்டி வரும். அதில் விதம் விதமான சிரப்புகள் இருக்கும். நாம் ஐஸ் கேட்டால் நன்கு சீய்த்த வழுவழுவென்ற மரக்குச்சிகளை எடுத்து  ஒரு டம்ளரின் நடுவில் வைப்பார்.  ஐஸ்பாக்ஸ் உள்ளேயிருந்து ஒரு ஐஸ் பாரை எடுத்து காய் சீவுவது போன்ற ஒரு சீவியில் சீய்த்து அந்தக் குச்சி வைத்த டம்ளரில் போடுவார். ஐஸ்காரர். அதில் திராக்ஷை, மாங்கோ, பைனாப்பிள்  இன்னபிற கலர் சேர்த்த எசன்சுகளை லேயர் லேயராக ஊற்றி உருட்டிச் சேர்த்துக் கொடுப்பார். மேல்வீட்டு, கீழ்வீட்டு எங்கவீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து டம்ளர் சைஸ் குச்சி ஐஸ் தின்றது விநோதமான அனுபவம்.

வியாழன், 2 அக்டோபர், 2014

மோகன்தாஸிலிருந்து மகாத்மா வரை. ( MY LIFE IS MY MESSAGE)

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்த குஜராத்திலிருக்கும் போர்பந்தருக்குச் சென்று வந்தோம். அங்கே அவர் 7 வயதுச் சிறுவனாக இருப்பதிலிருந்து மகாத்மாவின் மரணபரியந்தம் வரை உள்ள நிகழ்வுகள் புகைப்படங்களாக இருந்தன.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.
காந்தியடிகளின் தாத்தா ஹர்ஜீவன் காந்தி & பாட்டி லெக்ஷ்மிம்மா

கீர்த்தி மந்திரில் (காந்திமகான் பிறந்த இடத்தில்) ஒரு கையெழுத்து.

தமிழ் நாட்டில் காந்தி சிலைகள் இல்லாத ஊரோ, காந்தி ரோடு என்று பெயரிடப்படாத சாலைகள் கொண்ட ஊரோ பார்க்க முடியாது. அந்த அளவுக்கு காந்தியின் மேல் பற்றுக்கொண்டவர்கள் நாம்.

சில நாட்களுக்கு முன் காந்தியடிகள் பிறந்திருந்த போர்பந்தருக்கு என் தம்பி குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். முன்பு சுதாமாபுரி என்று அழைக்கப்பட்ட ஊர் இது. இங்கேதான் சுதாமருக்கும் கோயில் உள்ளது.

நம் நாட்டின் விடுதலைக்கு அகிம்சா வழியில் பாடுபட்ட அண்ணல் அவர்களின் இல்லத்தை-- கீர்த்தி மந்திர் --  காணவே சென்றிருந்தோம்.தற்போது குஜராத் அரசால் நிர்வகிக்கப்படுகிறது. வாயில் கதவுகளின் இருபுறமும் சுதேசிச் சிந்தனையை வெளிப்படுத்தும் வண்ணம் இராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

மகாத்மா காந்தி பிறந்த இடத்துக்கு அடியெடுத்து வைத்தபோது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட மகான். அவர் பிறந்த இடத்தைத் தரிசிப்பது என்பது எவ்வளவு கொடுப்பினை.
Related Posts Plugin for WordPress, Blogger...