சென்ற வருடம் திருவனந்தபுரமும், பாலோடும் பொன்முடியும் சென்றிருந்த போது விதம் விதமான கேரள உணவுகளை ருசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அவற்றுள் கப்பக்கிழங்கு மசியல், கேரள சிவப்பரிசி ( கொட்டையரிசி ) சாதம், தேங்காய் எண்ணெயில் சிவப்பு மிளகாய் கிள்ளிப் போட்டு வறுத்த கோழிக்கறி, சிக்கன் க்ரேவி, மத்திமீன் ஃப்ரை , பழம் பொரி ( ஏத்தக்காயப்பம் ), உன்னியப்பம், இலைக் கொழுக்கட்டை, நேந்திரன் சிப்ஸ், எளக்கி வாழைப்பழம், சீரக வெள்ளம் ( அட சீரகம் போட்டுக் காய்ச்சிய தண்ணிதாங்க ! ) , அப்புறம் ஏதோ மரப்பட்டையைப் போட்டுக் காய்ச்சிய தண்ணீரும் கிடைச்சுது.
நம்ம தமிழ்நாட்டு நாக்குக்கு அதெல்லாம் வித்யாசமா இருந்துச்சு. நாம முன்னே கடலை எண்ணெய் அப்புறம் நல்ல எண்ணெய் அது கசந்ததால பின்ன ரிஃபைண்ட் ஆயில்னு மாறிட்டோம். ஆனா மலையாளீஸ் இன்னும் சமையல் தேங்காய் எண்ணெயிலதான்.
நாங்கள் சென்னையில் இருந்தபோது கேரளாவில் ஒரு முறை வெள்ளம் வந்ததை டிவியில் கீழ்வீட்டுத் தோழி ரஜிதாவுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த வெள்ளத்திலும் ஒரு பெண் தேங்காய் உடைத்துத் திருகி ( மெய்யாலுமே ஒரு பாறையின் மேல் அமர்ந்து சுற்றி நீர் ஓடிக் கொண்டிருக்க ) அருகாமணையில் தேங்காய் திருகிக் கொண்டிருந்தது. அப்போது அவர் “ பாரு எவ்ளோ வெள்ளம் வந்து என்ன . தேங்காய் திருவிகிட்டு இருக்கு மலையாளீஸுக்குத் தேங்காய் இல்லாம சமைக்கத் தெரியாது என்றார் !”
அதென்னவோ தேங்காயிலும் தேங்காய் எண்ணெயிலும் விதம் விதமாகப் பொரித்தும் வறுத்தும் வதக்கியும் அரைத்தும் அவர்கள் சமைக்கும் உணவுகளின் ருசிக்கு ஈடு இணை இல்லைதான்.
மத்தி மீனைக் கீறி மிளகாய்ப் பொடி போட்டு உரசி தேங்காய் எண்ணெயில் வறுத்திருந்தார்கள். பயங்கரக்காரம். அது மறுநாள்தான் தெரியும் :) :) :)