சனி, 20 பிப்ரவரி, 2010

ஒற்றைப்பூ

கூடி வாழ்கிறோம் ..
கூடத்தான் வாழ்கிறோமா ..?
கேட்டுகொண்டிருக்கிறாய் என் பேச்சை..
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாயா..?
கையைப்பிடித்துக் கொண்டே திரிகிறேன் கனவில்,
நிஜத்தில் கோர்த்து இருக்கிறோமா..?

கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?
அந்தியும் நிலவும் இருளும் குளிரும் சூழ
காத்துக் கொண்டே இருக்கிறேன் உனக்காய்..?
தலையில் சூடிய மல்லிகை போல
காய்ந்து கிடக்கிறது மனசு....
எல் மகினோட்ரோமோவில்
நான் மட்டும் எங்கேயெனத்
தெரியாமல் தனிமையில் ..................................

67 கருத்துகள் :

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

//கூடத்தான் வாழ்கிறோமா ..?//

தமிழக அரசியல் கட்சிகள் பத்தி எழுதியிருக்கிறீர் போல இருக்கே..,

நாய்க்குட்டி மனசு சொன்னது…

கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?//

கற்பனை நிஜத்தை விட சுகமானது.
கவிதை அழகா இருக்கு.

வெள்ளிநிலா ஷர்புதீன் சொன்னது…

pls read this - http://vellinila.blogspot.com/2009/12/blog-post.html if u like it, pls send your postal address

ராமலக்ஷ்மி சொன்னது…

ஒற்றைப்பூவின் ஒவ்வொரு கேள்வியும் வாடிய இதழாக..

கவிதை அருமை தேனம்மை.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

படித்தேன்
படித்து கொண்டுதான் இருக்கிறேன்.... :))

balakavithaigal சொன்னது…

ஒற்றைப்பூ ஒவ்வொருவரும் அனுபவிக்கும் தனிமையின் வலியை உணர்த்தும் கவிதை.நன்றி
தேனம்மை

Mrs.Menagasathia சொன்னது…

தனிமையின் வலியை அழகா சொல்லிருக்கிங்க.நல்லாயிருக்கு தேனக்கா!!

பிரபு . எம் சொன்னது…

//கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?//

அழகு அழகு அழகு!! :)

Chitra சொன்னது…

கவிதை அழகா இருக்கு.

dhinesh babu சொன்னது…

nice!!!!!!!!!!!

தமிழ் உதயம் சொன்னது…

ரெம்ப ரெம்ப நல்லாருக்குங்க கவிதை.

ரிஷபன் சொன்னது…

கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?

கவிதைக் கண் திறந்திருக்கிறது..

அண்ணாமலையான் சொன்னது…

gud one..

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான கவிதை தேனம்மை அக்கா.

மைதிலி கிருஷ்ணன் சொன்னது…

இப்படிதான் மிக்க கணவன் மனைவிகள் வாழ்கிறார்கள். நல்ல கேள்வி.

புலவன் புலிகேசி சொன்னது…

ஒற்றைப்பூ சிர்ப்"பூ"

கமலேஷ் சொன்னது…

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது தோழி...வாழ்த்துக்கள்...

கமலேஷ் சொன்னது…

என் தளத்தில் என்னை (பின்னூட்டத்தில்) congrats பண்ணி இருக்கீங்க. ஆனால் எனக்கு என்னனுதான் சரியாய் புரிஞ்சிக்க முடியல.கொஞ்சம் புரியும் படி சொல்லுங்களேன் அக்கா.

தியாவின் பேனா சொன்னது…

சூப்பர் கவிதை

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

எல் மகினோட்ரோமோ அப்பிடின்னா என்னது?

நதியானவள் சொன்னது…

அருமை.........

Madurai Saravanan சொன்னது…

thalaiyil soodiya mallikai pol manathu vaadi kidak kirathu/

kavithai arumai. ungal kavithai eppothu varum ena kaththirukkirathu manasu.

அன்புடன்-மணிகண்டன் சொன்னது…

சிம்பிள் ஆனால் பியூட்டிஃபுல்..
எல் மகினோட்ரோமோ????

ஹுஸைனம்மா சொன்னது…

என்னமோ மாதிரியிருக்கு வாசிச்சதும்.

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

அருமை.....

அக்பர் சொன்னது…

மிக எளிமையாக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா.

உறவுகளில் சந்தோசங்களும் சந்தேகங்களும் இயல்பே.

SUFFIX சொன்னது…

ஹ்ம்ம்..என்னத்த சொல்ல!!

ஸ்ரீராம். சொன்னது…

படிக்கிறோம் கவிதைகளை...
படித்துக் கொண்டுதான் இருக்கிறோமா வாழ்வில்...?

வசந்த்தின் கேள்வி நானும் கேட்கிறேன்..என்ன அது?

thenammailakshmanan சொன்னது…

நன்றி டாக்டர் சுரேஷ்

கண்டு பிடித்ததற்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி நாய்க்குட்டி மனசு


ஆம் கற்பனை சுகமானதுதான்

திவ்யாஹரி சொன்னது…

எல் மகினோட்ரோமோவில்?...
தனிமையின் வலி உணர்த்தும் வரிகள் அக்கா..

கோபிநாத் சொன்னது…

Superb

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஷர்புதீன் நன்றாக இருக்கிறது வெள்ளி நிலா... விரைவில் அனுப்புகிறேன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி இலை போலத்தான் உதிருகிறது வாழ்வும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சைவக்கொத்துப்பரோட்டா

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா கவிதைகள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மேனகா

thenammailakshmanan சொன்னது…

நன்றி பிரபு

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்ரா

thenammailakshmanan சொன்னது…

நன்றி தினேஷ் பாபு

thenammailakshmanan சொன்னது…

நன்றி தமிழ் உதயம்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரிஷபன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி அண்ணாமலையான்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்டார்ஜன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மைதிலி கிருஷ்ணன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலவன் புலிகேசி

thenammailakshmanan சொன்னது…

நன்றி கமலேஷ்

thenammailakshmanan சொன்னது…

கமலேஷ் வலைச்சரத்தில் ஜெரி ஈசானந்தா அஷோக் பாலகுமார் ஸ்டார்ஜன் கமலேஷ் மற்றும் கருணகரசு வை சிறந்த வலைப்பதிவர்கள் என்றும் சிங்கங்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார் அதற்காக வாழ்த்தினேன் இன்றைய இடுகையை பாருங்கள் சீனா சாருக்கும் ஜெரிக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி தியா

thenammailakshmanan சொன்னது…

வசந்த வித்யாவோட இந்தப்பதிவைப்பாருங்க புரியும்

http://vidhoosh.blogspot.com/2010/02/blog-post_02.html

thenammailakshmanan சொன்னது…

நன்றி நதியானவள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மதுரை சரவணன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மணிகண்டன் வசந்துக்கு சொன்ன லிங்கை பாருங்க

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹுசைனம்மா

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாத்திமா ஜொஹ்ரா

thenammailakshmanan சொன்னது…

நன்றி அக்பர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஷஃபி

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்.

thenammailakshmanan சொன்னது…

நன்றி திவ்யா ஹரி

thenammailakshmanan சொன்னது…

நன்றி கோபிநாத்

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்...!!
நம்முள் வலிமை பெருகட்டும் ...!!!

ஹேமா சொன்னது…

காய்ந்த மல்லிப்பூவும் ஒரு தனி வாசம்தான் தேனு !

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹேமா ஆமாம் வாழ்வின் வாசம் சிலசமயம்

அறிவு GV சொன்னது…

துணையிருந்தும் தனிமையாய் உணரும் உள்ளத்தின் கவிதை வெளிப்பாடு. அருமை...!

thenammailakshmanan சொன்னது…

நன்றி அறிவு ஜீவி ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க வாழ்த்துக்கு நன்றி

Jayaraj சொன்னது…

living without living
loving without loving
or
living without loving
loving without living

it is. but it is not.

right?

thenammailakshmanan சொன்னது…

@ Raaja. May be or may not be TRUE

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...