வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் ..ஒரு அழகுத் தொகுப்பு

பரிசல் கிருஷ்ணா பாராட்டுக்கள்...!! நெகிழ வைத்து
விட்டீர்கள்.. ஆச்சர்யம்..! அருமை..!! அற்புதம்..!!!

இது நாகரத்னா புத்தக வெளியீடு.. கவிஞர் சுரேகா
முன்னுரை எழுதி இருக்கிறார் ..மனித நேயம் .,
நட்பு .,காதல்., க்ரைம் என அனைத்திலும் சிறப்பான
இத்தொகுப்பு கிருஷ்ணாவின் கிரீடத்தில் மயில் இறகு!!

தன்னைவிட என்னை நேசிப்பதால் என்னை விட
என்னை நேசிக்கும் உமா கௌரிக்கு என அர்ப்பணித்
திருக்கிறார்.. ( மனைவியா கிருஷ்ணா...). இதுவே
இக்கதைகளின் அடிப்படை.. ..

மொத்தம் பதினேழு கதைகள்..
தனிமை- கொலை- தற்கொலை -நட்பின் வலி ..
காதலை விட உயர்வானது நட்பு என்பது இதில்
தெளிவு ..இமை தொட்ட மணி விழி
இரண்டுக்கும் நடுவினில் தூரம் அதிகமில்லை .
இருவரும் நண்பர்கள் அதுதான் அன்பின் எல்லை
உண்மைகாதல் அழிவதில்லை --திருமணத்துக்குப்
பின்பும்..
காதலிக்கும் ஆசையில்லை --அழகாக இருந்
தாலும் சிலரிடம் வருவதில்லை...
BUTTERFLY EFFECT -- கடமை சார்ந்த நம் உலகின்
நெருக்கடிகளில் இருந்து குழந்தைகளின்
உலகத்தின் பட்டாம் பூச்சி கூட கிருஷ்ணாவின்
பார்வையில் அருமை ...இக்கதை..
இருளின் நிறம் --வானவில்லில் இல்லாதது.. தன்
பேரக் குழந்தைகளுடன் இருக்க விரும்பும்
முதியவர்களின் ஆசை நிறம் இது..
நான் அவன் இல்லை-- சுஜாதா பாணி க்ரைம் கதை.
மாற்றம் -- உழைப்பால் உயர்ந்தவர் பற்றி.
மனிதாபிமானம் -- யதார்த்தம் .. ஆனாலும் ரொம்பப்
பொறுமை கிருஷ்ணா உங்களுக்கு..
நட்பில் ஏனிந்த பொய்கள் -- மிக அருமையான
கதை.. நண்பனின் பொய்களை விடுத்து
நண்பனை நண்பனாகவே ஏற்றுக்கொள்வது..
கைதி--ட்விஸ்டட் க்ரைம்..
ஜெனிஃபர்--மிக ரசித்த கதை..ப்ரகாஷ் ராஜும்
லலித குமாரியும் ஒரே வீட்டில் நண்பர்களாக
வாழ முடிவெடுத்தது இந்தக் கதையைப் படித்த
போது ஞாபகம் வந்தது.. அவர்வர் வாழ்கையைப்
பற்றிய முடிவு அவரவர் தான் எடுக்க வேண்டும்
அடுத்தவர் தலையீடோ விருப்பமோ அனாவசியம்.
கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன் -கதையின்
தலைப்பே கதை..
டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் --முன் பின்
சொல்லும் உத்தியால் சொல்லப்பட்டு இருக்கும்
இக்கதையும் நேர்த்தி..
மனசுக்குள் மரணம்--ஈ.எஸ்.பி..கதை..
ஸ்டார் நம்பர் ஒன் --கோடம் பாக்கக் கதைதான்
மற்றொரு மனித நேயக் கோணம்...
நட்சத்திரம் -- சுஜாதாவின் பூக்குட்டியை ஞாபகப்
படுத்தியது.. அருந்ததி ராயின்," காட் ஆஃப் ஸ்மால்
திங்க்ஸ் ",கூட (முழுக்க அல்ல ஒரு பகுதி )
சமூகக் கடமை-- அடுத்தவருக்கு அறிவுறுத்தும்
சிலரின் அராஜகப் போக்கு தெளிவாய் இதில்..

இவரின் கதைகள் எளிமை., மனித நேயம்., அன்பு
இவற்றால் கட்டப்பட்ட சுகந்தமான பூமாலை..
சுஜாதாவின் பாணி மற்றும் சில பல நாம் அறிந்த
எழுத்தாளர்களின் தாக்கமிருந்தாலும் எல்லாப்
பாணியிலும் சுவாரசியமாய் சிறந்த வாசிப்பு
அனுபவத்தைத் தருகிறது.. மனித நேயத்தோடு
உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் நட்புக்கும்
முதல் மரியாதை கொடுத்து எழுதப்பட்ட
கதைகள்... நம் அனைத்து வலைப்பதிவர்கள்
மட்டுமல்ல ..அவரது குடும்பதில் உள்ள அனைத்து
பதின்ம வயதுக் குழந்தைகளும் படிக்கக்கூடிய
சிறந்த கதைகள் என பரிந்துரைக்கிறேன்....!!!

38 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

அடுத்த விமர்சனமும் போட்டாச்சா.. நன்று..

வானம்பாடிகள் சொன்னது…

நான் இன்னும் படிக்கலை. படிச்சிட்டு மெயில் பண்ணனும்.:)

விக்னேஷ்வரி சொன்னது…

என்னடா இன்னும் யாரும் விமர்சனம் எழுதலையேன்னு நினைச்சேன். எழுதிட்டீங்க. நன்றி. நல்ல விமர்சனம் தேனம்மை.

செ.சரவணக்குமார் சொன்னது…

நல்ல விமர்சனம் தேனக்கா. நண்பர் பரிசல் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி, வாசித்து, விமர்சித்து சக பதிவர்களை உற்சாகப்படுத்தும் உங்கள் அன்பிற்கு அனைத்துப் பதிவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் அக்கா.

விஜய் சொன்னது…

நான் இன்னும் வாங்கவில்லை. உங்கள் விமர்சனம் கண்டிப்பாக வாங்க தூண்டுகிறது.

வாழ்த்துக்கள்

விஜய்

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

குட் ரிவியூ தேனம்மா...!

Venkatesan சொன்னது…

Yes Mam.. I too like all the stories except the font size..

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

கலக்கல் விமர்சனம், வாழ்த்துக்கள்.

ஹேமா சொன்னது…

நிறைவாய் வர்ணித்து அலசி விமர்சனம் செய்கிறீர்கள் தேனு.

சே.குமார் சொன்னது…

//அனைத்து பதின்ம வயதுக் குழந்தைகளும் படிக்கக்கூடிய சிறந்த கதைகள்//

நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்.

திவ்யாஹரி சொன்னது…

ம்ம்.. அடுத்த புத்தக விமர்சனமா அக்கா? நல்ல விமர்சனம் அக்கா..

பரிசல்காரன் சொன்னது…

அன்பாலும் நட்பாலும் உடனிழுத்துச் செல்ல உங்களைப் போன்றவர்கள் இருக்க... நாங்கள் இன்னும் சாதிக்க முடியாதா என்ன...?

Mrs.Menagasathia சொன்னது…

நல்ல விமர்சனம் தேனக்கா!!

சி. கருணாகரசு சொன்னது…

தங்களின் படிக்கும் ஆர்வத்தையும்..... மற்றவர் படைப்பை ஊக்கபடுத்தும் மனதையும் கண்டு வியக்கிறேன்.நன்றிங்க.

கோபிநாத் சொன்னது…

தேனம்மை..விமர்சனத்தை short and Sweet ஆக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

பா.ராஜாராம் சொன்னது…

ஆகா!

வாழ்த்துக்கள் பரிசல்!

உற்சாகம் தேனு நீங்கள்!

தியாவின் பேனா சொன்னது…

நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான விமர்சனம் தேனம்மை அக்கா ..

கலக்கிட்டீங்க , கேபிள் சங்க‌ரின் புத்தக விமர்சனமும் மிக அருமை .

படிக்கணும் போலத் தோணுது .. ஆனா நான் இங்கே ..

தமிழ் உதயம் சொன்னது…

புத்தகத்தை படிக்காமல் நாங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது.நல்ல விமர்சனம்...... வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

மனித நேயம் .,
நட்பு .,காதல்., க்ரைம் என அனைத்திலும் சிறப்பான
இத்தொகுப்பு கிருஷ்ணாவின் கிரீடத்தில் மயில் இறகு!!
..........அருமையாக விமர்சித்து எழுதி இருக்கிறீர்கள்.

டம்பி மேவீ சொன்னது…

semaiya irukku boss ...nalla review. innum detailaa eluthi irukkalam

புலவன் புலிகேசி சொன்னது…

படிச்சிக்கிட்டே இருக்கேன். நாளைக்கு நான் எழுதுறென்...

அக்பர் சொன்னது…

s

அக்பர் சொன்னது…

அருமையான விமர்சனம் அக்கா.

படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

(முதல் பின்னு சரியாக பதியவில்லை)

ஹுஸைனம்மா சொன்னது…

//குடும்பதில் உள்ள அனைத்து
பதின்ம வயதுக் குழந்தைகளும் படிக்கக்கூடிய
சிறந்த கதைகள் என பரிந்துரைக்கிறேன்....!!! //

மன நிறைந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணா!!

நிறைவான விமரிசனம் எழுதிய அக்காவுக்கும் பாராட்டுக்கள்.

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்.

நன்றி பாலா சார்

thenammailakshmanan சொன்னது…

நன்றி விக்னேஷ்வரி

நன்றி சரவணகுமார்

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய்

நன்றி வசந்த்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சைவக்கொத்துப்பரொட்டா

நன்றி ஹேமா

thenammailakshmanan சொன்னது…

நன்றி குமார்

நன்றி திவ்யாஹரி

thenammailakshmanan சொன்னது…

நன்றி பரிசல் கிருஷ்ணா

நன்றி மேனகா

thenammailakshmanan சொன்னது…

நன்றி கருணாகரசு

நன்றி கோபிநாத்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மக்கா

நன்றி தியாவின் பேனா

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி தமிழுதயம்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்ரா

நன்றி டம்பிமேவி

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலிகேசி

நன்றி அக்பர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹுசைனம்மா

thenammailakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!
நம்முள் வலிமை பெருகட்டும்...!!!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...