எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 3 பிப்ரவரி, 2010

ராமனின் மனைவி

முகமற்றவள் ..மண்ணில் பிறந்தவள்..
மண்ணால் விழுங்கப்பட...
சிவதனுசை நீ எடுத்த நொடி..
உன் கைவசம் முடிவு.. என் வாழ்வு..
அம்புறாத்துணியோடுதான் பார்த்தேன்..
நானே எய்யப்படுவது அறியாமல்...

வனவாசத்திலும் மரவுரியுடன்
உன் பின்னே சுற்றித்திரிய விழைவில்..
உன் மனவாசத்தில் இருந்தாலும்
என்னைத் தவிர்த்துச் செல்லும் விழைவில் நீ..

நம் அன்பெனும் நேசச் சரங்கள்
இழையோடு இழையாய் என்னை
உன்னோடு இழுத்துச் செல்கிறது...
சில்வண்டுகளும் சிற்றோடைகளும்
சிறு நிலவும் பர்ணசாலை சுற்றி ...

எதுவுமே கேட்காமல்
உன் அருகாமை மட்டுமே வேண்டி நின்ற
என்னை முன்னிருத்தி ..
மாரீசனை.. பொன்மானை நான் கேட்டதாகக் கூறி
வேட்டையாடச் செல்கிறாய்..

இரக்கம் தூண்டும் போர்வை போர்த்தி
இரந்து செல்ல வந்த ஒரு பாவி
என்னைக் கவர்ந்து சென்றான்..

"நான் உனக்கு மட்டுமேயானவள் "
என்ற எண்ணத்தையும்
நீ தந்த கணையாழியையும்
என்னுடன் எடுத்துச் செல்கிறேன்...
என்னைத் தேடி வருவாயோ
என்ற எண்ணத்தில் மற்ற அணிகலன்களை
எல்லாம் ஒவ்வொன்றாய் வீசி
ஒரு தடத்தை உருவாக்குகிறேன்...

பூமியின் மகளான என்னை காப்பாற்ற
பறவைகளின் அரசன் போரிட்டு இறகு கிழிந்து
உன்னிடம் சேதி சொல்ல உயிர் துடித்தபடி...

நீ எனக்காக உன் தூதனைக் காற்றிலும்
கடல் கடந்தும் அனுப்பும் வரை..
உன் நினைவு நெருப்பு பற்றியெரிய...
சோக மரத்தின் கீழ்
உன் கணையாழியுடன் நான்...

42 கருத்துகள்:

 1. சீதையைப் பற்றி எவ்வளவு அழகா கவிநயத்துடன் சொல்லிருக்கிங்க.அருமை தேனக்கா...

  பதிலளிநீக்கு
 2. "நானே எய்யப்படுவது அறியாமல்.."

  "இரந்து செல்ல வந்த ஒரு பாவி
  என்னைக் கவர்ந்து சென்றான்."

  "உன் நினைவு நெருப்பு பற்றியெரிய...
  சோக மரத்தின் கீழ்.."

  கவர்ந்த வரிகள்.
  சீதை சோகம் நீக்க வேண்டும் என்றுதான் அ'சோக' வனத்தில் சிறை வைத்தான் போலும் ராவணன்...

  பதிலளிநீக்கு
 3. "கவிதை என்று நினைத்து வந்தேன்"
  அப்டின்னா .....???

  பதிலளிநீக்கு
 4. உங்கள் பெயருக்கும், இந்த கவிதைக்குமான ஒற்றுமையை கவனித்தீரா. பெண்ணின் மனதை பெண்களால் அறிய முடியும். அப்படி அறிய பட்டதே கவிதையாக மலர்ந்துள்ளது. மலர்ந்த கவிதை அழகு.

  பதிலளிநீக்கு
 5. //"கவிதை என்று நினைத்து வந்தேன்"
  அப்டின்னா .....???//

  கொஞ்சம் உரைநடையாக இருக்குன்னு நேசமித்ரன் சார் நினைக்கிறார் போல..

  "வாக்கிய" நடை கொஞ்சம் மிகுதியானாலும் கவித்துவ அழகு குறையவில்லை என நினைக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 6. /// "நான் உனக்கு மட்டுமேயானவள் "
  என்ற எண்ணத்தையும்
  நீ தந்த கணையாழியையும்
  என்னுடன் எடுத்துச் செல்கிறேன்... ///

  சீதையின் மாசில்லா உள்ளக்காதலின் வெளிப்பாடு என்று சொல்லலாமா அக்கா .

  ராமனின் எண்ணம் எதுவோ ...

  பதிலளிநீக்கு
 7. சீதையின் மன நிலையை தெளிவாக உணர்ந்து எழுதி இருக்கீங்க. நல்லா இருக்கு, அக்கா.

  பதிலளிநீக்கு
 8. இது ஒருவகை கதை சொல்லும் கவிதை வகையை சேர்ந்ததா தேனம்மா...!

  பதிலளிநீக்கு
 9. படிக்கும்போதே கண் முன்னே காட்சிகள் விரிகிறது. அருமை.

  பதிலளிநீக்கு
 10. //////படிக்கும்போதே கண் முன்னே காட்சிகள் விரிகிறது. அருமை.///////

  சரியாச் சொன்னார். ரொம்ப நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 11. நல்ல சிந்தனை.., அழகிய எழுத்தாக்கம்...! அருமையா இருக்குங்க...!

  பதிலளிநீக்கு
 12. எனக்கு பின்நவீனத்துவம், முன்நவீனத்துவம் என்று சொல்லி ஒரு எழவும் புரியாத கவிதைகளை படிக்க கூட நான் விரும்புவதே இல்லை. இதுபோன்ற கவிதைகள் படிக்கவும் புரிந்து கொள்ளவும் எளிமையாக உள்ளது. கவிதை வடிவில் உரைநடையோ, உரைநடை வடிவில் கவிதையோ இதுபோல் புரியும் படி இருந்தாலே போதும். உங்களின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கிறது அக்கா

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 13. சுத்தமான அக்மார்க் இலக்கியத் தரம். மேம்பட்ட சிந்தனைகள். கரம் சிரம் புறம் நீட்டாமல் தொடருங்கள். எளிமை இல்லாவிட்டாலும் கூட இது போன்ற வடிவமைப்பு தேவையும் கூட.

  பதிலளிநீக்கு
 14. //சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

  படிக்கும்போதே கண் முன்னே காட்சிகள் விரிகிறது. அருமை.//

  அதே உணர்வு தான் அக்கா எனக்கும்.. அருமையான க(வி)தை..

  பதிலளிநீக்கு
 15. சீதையின் மனநிலையில் தேனு இருந்து
  அப்பிடியே உணர்ந்து எழுதின வரிகள்.விளக்கத்தோட அருமையா இருக்கு.

  ஒரு ஆளுக்கு மட்டும் புரியலயாம் !
  சொல்லாதீங்க தேனு நேசன்கிட்ட!

  பதிலளிநீக்கு
 16. நன்றி மேனகா

  நன்றி ருத்ரன் சார் தொடர்ந்த ஊக்குவிப்புக்கு

  பதிலளிநீக்கு
 17. நன்றி பாலா

  நன்றி நேசன் கவிதையோ உரைநடையோ என் கருத்துப் பகிர்வு நேசன் இது

  பதிலளிநீக்கு
 18. நன்றி ராம்

  நன்றி அண்ணாமலையான் கட்டுரைன்னு அர்த்தம் பா

  பதிலளிநீக்கு
 19. நன்றி தமிழ் உதயம்

  நன்றி பட்டியன்

  பதிலளிநீக்கு
 20. நன்றி அக்பர்

  நன்றி ஸ்டார்ஜன்

  பதிலளிநீக்கு
 21. நன்றி சைவக்கொத்துப்பரோட்டா உங்க ஆழ்ந்த வாசிப்புக்கு

  நன்றி நவாஸ் உங்களுக்கும்

  பதிலளிநீக்கு
 22. நன்றி அனு

  நன்றி சிவாஜி சங்கர்

  பதிலளிநீக்கு
 23. நன்றி அறிவு

  நன்றி விஜய் உங்க ஊக்குவிப்புக்கு என் அன்பு சகோதரரே

  பதிலளிநீக்கு
 24. நன்றி ஜோதிஜி

  நன்றி மதுரை சரவணன்

  பதிலளிநீக்கு
 25. நன்றி சுஸ்ரி

  நன்றி திவ்யாஹரி

  பதிலளிநீக்கு
 26. நன்றி ஹேமா எத்தனை நாள் நாம புரியாம வந்து இருப்போம் இல்ல நேசன் கவிதைகளில் இருந்து திரும்பத் திரும்பப் படிச்சு

  ஆனா இங்கெ அப்படி எல்லாம் எதுவுமில்லாம சப்பென்று இருக்குங்குறார் ஹேமா அதுதான் அவர் கருத்து

  பதிலளிநீக்கு
 27. நன்றி செந்தில்நாதன்

  நன்றி சாந்தி லெஷ்மணன்

  பதிலளிநீக்கு
 28. //நன்றி ஹேமா எத்தனை நாள் நாம புரியாம வந்து இருப்போம் இல்ல நேசன் கவிதைகளில் இருந்து திரும்பத் திரும்பப் படிச்சு//

  அட! உஙகளுக்கும் அப்பிடித்தானா? ஊவ்! நம்ம இன்னும் சின்னப்புள்ளையோன்னு மறுகி...
  நன்றிங்க!

  பதிலளிநீக்கு
 29. நன்றி சாந்தி ..அட உங்களுக்கும் அந்த ஏக்கம் உண்டா.. அப்ப சரி ஒரே படகிலதான் இருகோம் பா

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...