எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 அக்டோபர், 2014

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள். பாகம் 1

சுஜாதாவின் ஒரு கதையில் யஷ் என்ற கதாபாத்திரம் சொல்வது போல ஒரு டயலாக். // யஷ் யஷ் என்று எத்தனை முறை எத்தனை ஆயிரம் காப்பிகளில் என் பெயர் ப்ரிண்ட் ஆகி இருக்கும்.// என்று . நம் பெயரும் பத்ரிக்கைகளில் ப்ரிண்ட் ஆனால் எப்படி இருக்கும் என்று படிக்கும்போதே எக்ஸைடட் ஆக வைத்த வரிகள்.

முதன் முதலில் ( கல்லூரிப்பருவ கல்கி,இன்னபிற இதழ்களுக்குப் பிறகு பல வருடம் கழித்து லேடீஸ் ஸ்பெஷலில் என் பெயர் வந்தது . அதன்பின் )  யங் லேடீஸ் கவிதைப் போட்டிக்காக லேடீஸ் ஸ்பெஷலில் முதன் முதலில் முகமற்றிருந்த எனக்கு முகம் காட்டும் விதமாக என்னுடைய புகைப்படம் வந்தது. நன்றி கிரிஜாம்மா.
அதன் பின் லேடீஸ் ஸ்பெஷலில் கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சுய உதவிக் குழுப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் ப்ரச்சனைகள் குறித்துப் பேசினேன். அதன் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.


மெரீனாவில் ஒரு மாலை என்ற நிகழ்வுக்காக எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம். அது லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நடத்தப்பட்ட சென்னைப் பெண் பதிவர்கள் கூட்டம்.
 
தேவதையில் வலையோடு விளையாடு என்ற கட்டுரைக்காக புகைப்படப் பகிர்வு. என்னுடைய அப்பா பற்றியும் , கண்ணதாசனும் பதிப்பகங்களும் & கவுனி அரிசியும் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸும் என்ற என்னுடைய  மூன்று  பதிவுகளும் இரு வலைப்பதிவுகளில் இருந்து எடுத்துப் போடப்படிருந்தன. ( சும்மா, தேனூஸ் ரெசிப்பீஸ்)

யுகமாயினியில் என் கவிதை ஒன்று வந்தது. எது என் எல்லை என்ற தலைப்பில் என் படத்தோடு. :)

பூவரசி காலாண்டிதழில் மாமியார் மருமகள் உறவுமுறை கட்டுரைக்கு நானும் தங்கை கயலும் ஸ்ரீ கான குஹா இசைப்பள்ளியின் ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் போடப்பட்டிருந்தது. !

நம் உரத்த சிந்தனையில் இணையதல ப்ளாகர் என்ற பெயரில் பத்மா மணி மேடம் அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.

புதிய தரிசனத்தில் கீரை வெரைட்டீஸ் குறிப்புகள் என் புகைப்படத்தோடு. !

வலைப்பூக்களில் கலக்கிவரும் புயல் பூக்கள் என்று இவள் புதியவளில் எங்கள் புகைப்படம்.

நன்றி நன்றி முகம் அறிவித்த பத்ரிகைகளுக்கு. !

3 கருத்துகள்:

  1. மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் பல பத்திரிகைகளில் உங்கள் படைப்புகள் வெளிவரட்டும்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...