எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 அக்டோபர், 2014

வைப்பரில் மரிக்கும் ஈசல்.:-

கண்ணுக்குள் ஒளிந்து
கசிகிறது ஏக்கம்
புகைப்படங்களில்
பதிந்துவிடாதபடி.

ஒளிவிடும் ஆவலை
அடக்கமுடியாமல்
அலைகிறது விழி

உன் உருவச்
சாயலொற்றவைகளை
அளைந்து களைக்கிறது மூளை.

மனதுக்குப் புரிவதில்லை
அமாவாசையெலாம்.நட்சத்திரச் சிறகெடுத்து
பறந்து வரும் நிலவுகாண
பெருவெடிப்பாய் விரிகிறது இதயம்.

உலா வரும் பூச்சுப் பெண்ணாய்
இதழும் கன்னமும் விரிந்து
பற்களில் ஆவலை இறுக்கியபடி.

எலுமிச்சை வெளிச்சம்
ஷெனாய் வாத்தியம்
உறைபோட்ட நாற்காலி
ஒளிய இடமளிக்காமல்
வானத்தில் வீசுகின்றன.

ஆசையோடு பறந்து
வைப்பரில் இறகொடிந்து
மரிக்கும் ஈசலாய்
திப்பியாகிறது இருப்பு.

அதன் ரத்தமாய்க்
கண்வழி வழிந்து
இருளை நனைக்கிறது ஈரம்.

இருளோடு இருள் கூட
என்றைக்கும் போலவே
இன்றைக்கும் வரவில்லை நீ.

டிஸ்கி :- இந்தக் கவிதை 2014 ஏப்ரல் 1 - 15 அதீதத்தில் வெளியாகி உள்ளது.

11 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரி!

  இருளோடு தேடி எழில்காட்டக் கண்டேன்!
  பெருவருளே தானுன் பெயர்!

  அருமையான கவிதை! பொருளும் மிகச் சிறப்பு!
  வாழ்த்துக்கள் சகோதரி!

  நேரமிருந்தால் வாருங்களேன் என் பக்கமும்!..:)
  மிக்க நன்றி!

  http://ilayanila16.blogspot.de/2014/10/blog-post.html

  பதிலளிநீக்கு
 2. சகோதரி!..

  என்னில்லம் வந்துடனே இட்டனை நல்வாழ்த்து!
  நன்றிபல சொன்னதென் நா!

  மிக்க நன்றி உங்கள் உடன் வருகைக்கும் வாழ்த்திற்கும் சகோதரி!

  பதிலளிநீக்கு
 3. அருமை.

  //இன்றைக்கும் வரவில்லை நீ. //

  'இந்தப் பக்கமிருக்கும் மணலை எடுத்து' என்று தொடங்கும் பாலகுமாரன் கவிதை நினைவுக்கு வந்து விட்டது, இந்த வரியைப் படித்ததும்! :))))

  பதிலளிநீக்கு
 4. //ஆசையோடு பறந்து வைப்பரில் இறகொடிந்து மரிக்கும் ஈசலாய்//

  அழகான கற்பனை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  //என்றைக்கும் போலவே இன்றைக்கும் வரவில்லை நீ. //

  In fact பதிவிட்டு தங்கள் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்
  நாங்கள் சொல்லவேண்டிய வரிகள் அல்லவா ......... இவை ! :)

  http://gopu1949.blogspot.in/2014/10/5.html

  ’சும்மா’ ......... 'சும்மா’ விளையாட்டுக்குச்சொன்னேனாக்கும். :)

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு
 5. நன்றி இளமதி சகோதரி. உங்கள் மரபுக்கவிதைகள் அருமை

  நன்றி ஸ்ரீராம். ஆம் உனக்கென்ன கோயில் குளம் என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதை. :)

  ஹாஹாஹா கோபு சார். கட்டாயம் வர்றேன். என்னை குபுக் கென்று சிரிக்க வைத்துவிட்டீர்கள். இதோ வந்துட்டேன்.. :)

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் கோபு சார் & கீதா

  முழுமையான அலசல்

  கோபு சார் முதலில் ஒரு விஷயம். இப்போதெல்லாம் 4 வரிக்குமேல் போட்டால் யாரும் படிக்காமல் ஓடிப்போய் விடுகிறார்கள் . நம்மைப்போல விதிவிலக்குகளும் உண்டு.

  ஆனால் விமர்சனம் & பின்னூட்டம் எழுத சோம்பல். அல்லது அவரச எண்ட்ரி. 5 ப்லாகிலும் போஸ்ட் போடவேண்டுமே நான். ஹிஹி மன்னிக்க. (நன்றாகக் கொட்டி விட்டீர்கள். நடு மண்டையில் வலிக்கிறது. :))

  கீதா ராஜி அனைவரும் மிகச் சிறப்பான விமர்சகர்கள். ஒவ்வொரு பாயிண்டாக கீதா சொல்லியதில் எனக்கு அந்த எடிட்டிங் கைவசப்பட்டதில்லை. நானும் உங்க கேஸ்தான். பலரும் சொல்லிட்டாங்க. எடிட் பண்ணா சொல்ல வந்தது புரியாம போயிடுமோன்னு எலாங்கேட்டா ஆயிடும். யாராவது நமக்காக எடிட் பண்ணாலும் ஐயோ வெட்டிட்டாங்களேன்னு இருக்கும்.

  முதலில் தாங்கள் கூறியபடி போட்டிகள் அறிவிக்கும் முன்னர். இது பற்றிய விவரங்கள் அனுப்பி இருந்தீர்கள். அதில் முடிந்தவரை தொடர்ந்து பதிவேற்றுதலும் போட்டி நடத்துதலும் பரிசு வழங்கலும் உண்டு என்று கூறி இருந்தீர்கள். அதன் படி 100 சதவிகிதம் செயல்பட்டு வருகிறீர்கள். அதற்கு பாராட்டுகள். ஷொட்டுகள். சபாஷ் , பலே பலே எல்லாம். :)

  அடிக்கடி வர இயலாத என்னைப் போன்றவர்களை மன்னிக்கவும்.

  எங்களுக்கெல்லாம் கீதா சொன்னது போல் நீங்கள் ஒரு ஊக்கமூட்டி. எந்த வயதிலும் சுறுசுறுப்பாக எப்படி செயல்படுவது என்பது பற்றிய ஒரு வாழும் எடுத்துக்காட்டு.

  உங்களைப் பற்றி இன்னும் புகழ்ந்து கொண்டே போகலாம். வாசிப்பையும் விமர்சனத் திறமையையும் பலரிடம் அதிகரித்து இருக்கின்றீர்கள். கண்கூடாகத் தெரிகிறது.

  மேலும் அந்தப் பரிசுத் தொகைகள் எல்லாம் என் சோம்பேறித்தனத்தால் எனக்குக் கிடைக்காமல் போகிறது.. ஹ்ம்ம் வடை போச்சே.. இருக்கட்டும். பார்ப்போம் இன்னும் 3 இருக்காமே.

  வேறு ஏதோ வேலைகளில் வந்து போஸ்ட் போட்டு ஃபேஸ்புக் ரெண்டு ஐடி, ஒரு பேஜ், கூகுள் ப்ளஸ், ட்விட்டர், இண்டிப்லாகர் எல்லாவற்றிலும் 5 ப்லாக் போஸ்டையும் ஓடவே சரியா இருக்கு. நான் என் இடுகைகளைக் கூட இவ்ளோ பெரிசா எழுதினது இல்ல. :)

  சொக்கா அடுத்த ஆயிரம் பொன்னையும் எனக்கே கொடுப்பா. (முதல்ல என்ன அந்தச் சிறுகதையைப் படிச்சி விமர்சனம் எழுதும் எண்ணத்தைக்கொடு. ) பரிசு கிடைக்காம போயிட்டா எல் கே ஜி புள்ள மாதிரி வெக்கமா இருக்குமே.. எதுக்கும் ட்ரை பண்ணிப் பார்ப்பமா வேண்டாமா..

  ஹிஹி சாரி கோபு சார் நான் மனசுக்குள்ள பேசிக்கிட்டேன். அது வெளியே விழுந்துடுச்சு போல இருக்கு. பார்க்கலாம் சார். வாழ்த்துகள் உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும். தெய்வம் துணை இருக்கும்.

  பதிலளிநீக்கு
 7. கண்ணுக்குள் ஒளிந்து
  கசிகிறது ஏக்கம்
  புகைப்படங்களில்
  பதிந்துவிடாதபடி.//

  ஆஹா! என்ன ஒரு முன்னெச்சரிக்கை! வெளியில் தெரியக்கூடாதாம்!! அகத்தில் உள்ளது தானே கண்களில் தெரியும்! அந்த ஏக்கத்தை மறைக்க என்ன ஒரு பிரயத்தனம்! அதைச் சொல்லும் வரிகள் அருமை!

  அடுத்த வரிகளோ இன்னும் அழகு...அலை பாய்கிறதாம் விழிகள்! அடுத்து, பின்னே இத்தனை ஏக்கங்களும் இருந்தால் மூளைக்கு வேலையில்லாமலா!!! மனதிற்கு எப்படிப் புரியும் அமாவாசை!!!!

  ஆசையோடு பறந்து
  வைப்பரில் இறகொடிந்து
  மரிக்கும் ஈசலாய்
  திப்பியாகிறது இருப்பு.//

  என்ன ஒரு அற்புதமான கற்பனைச் சிறகு!

  இருளோடு இருள் கூட
  என்றைக்கும் போலவே
  இன்றைக்கும் வரவில்லை நீ. //

  அருமை அருமை!!!! அசாத்தியமான கவிதை! தங்களுடைய மொழி விளையாட்டு!

  பதிலளிநீக்கு
 8. அருமையான விமர்சனத்துக்கு நன்றி துளசிதரன் சகோ. :)

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...