ஜெர்மனியிலும் சரி, யூரோப் முழுவதும் சரி. ரயில் நிலையங்களில் ப்ரஸ் & புக்ஸ் என்னும் புத்தகக் கடைகளும், ரெவே, கொடி, அல்டி, லிடில், ரியல், நெட்டோ, போகோ போன்ற ஷாப்பிங் மால்களிலும் பயணப் பாதையில் மோட்டல்களிலுமே புத்தகக் கடைகளைப் பார்க்கலாம். பாதிக்குப் பாதி ஆஃபரிலும் கூட புத்தகங்கள் கிடைக்கின்றன ! முக்காலே மூணு சதம் அந்தந்த தேசத்தின் மொழிகளில்தான் கிடைக்கின்றன. ஆங்கிலப் புத்தகங்கள் ரொம்பக் கம்மி. ( ஆங்கிலம் மாதிரியே இருக்கும். ஆனால் அது ஜெர்மன், ஃப்ரெஞ்ச், இத்தாலி :) . கட்டுரைகள், த்ரில்லர்கள், ரொமாண்டிக் நாவல்களோடு இங்கே சமையல் புத்தகங்களும் , குழந்தைகளுக்கான நூல்களும் கூட கொட்டிக் கிடக்கின்றன.
ரயிலில் நின்று கொண்டோ உட்காந்து கொண்டோ வாசிப்பவர்களை இந்நாடுகளில் அதிகமும் பார்க்கலாம். இவர்கள் என்னைக் கவர்ந்ததால் அங்கே எடுத்த புத்தகசாலைப் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறேன். வாசிப்பவர்களை எடுக்க என் கூட வரும் என் மகன் தடா போட்டுவிடுவார்.
இவை அனைத்தும் ஸ்விஸ், இத்தாலி, வெனிஸ், ரோம், போன்ற நகரங்களைக் கடந்து செல்லும்போது இருக்கும் மோட்டல்களில் எடுத்தவை.
இது டிட்லிஸ்ஸிலிருந்து வெனிஸ் செல்லும் வழியில் எடுத்தது.
50 முதல் 70 சதம் வரை ஆஃபர் ! ஆண்ட்ரியா கேமில்லரி கலெக்ஷன்ஸ் அதிகம்.