எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ENVIRONMENTAL PROTECTION லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ENVIRONMENTAL PROTECTION லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இந்திய நதிநீர் இணைப்பு.

எத்தனை நதிகள் எத்தனை நதிகள்
அத்தனை நதியும் பெண்ணின் பெயர்கள்.
தாய்மைப் பண்பில் பெருகிடும் அன்பில்
வாய்மை தவறா மனிதர்கள் போலே
பொங்கிப் பெருகிய புதுப்புனல் ஆறுகள்
மங்கிப் போனதே மண்ணாய் ஆனதே
தவஞ்செய்து பெற்ற தவத்திரு நதிகள்
அவஞ்செய்த காரணம் காணாமல் போனதே
இடிப்பார் இல்லாமல் உரைப்பார் கேளாமல்
இந்திய நதிநீர் இழிந்தே கழிந்ததே.

விவசாயம் காப்போம்.

வேரில் கொஞ்சம் வெப்பம் பிண்ணாக்கு
தூரில் கொஞ்சம் தோட்டச் சருகுகுகள்.
மாட்டுச் சாணம் மண்புழுக் கழிவுகள்.
மக்கிய தழைகள் மகசூல் பெருக்கும்.

வயலைக் கொல்லும் பூச்சிக் கொல்லிகள்
காயம் ஆக்கும் சாயத்தண்ணீர்

ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

ஊருக்கு அணி செய்யும்
பயிருக்கு உயிர் செய்யும்
உயிருக்கு நீர் வார்க்கும்
ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

பாரெல்லாம் பயன் பெறவே
தூரெடுத்துத் தூர் வார்த்து
கரைகொண்டு கரை சேர்த்து
ஊரணிக்கு உயிர் கொடுப்போம்.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 3.

லலித் கலா அகாடமியின் வாயிற்புறம் நிறைய சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கேதான் ஓவியர் வீரசந்தானத்தை முதன் முறையாகப் பார்த்தேன். தாடி மீசையுடன் ஜிப்பா போட்டிருந்தவர் புகைத்துக் கொண்டிருந்தார். உள்ளே ஊர்ப்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பாதி விற்பனையும் ஆகி இருந்தன.  

அங்கே நான் பார்த்த மிச்ச ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே.
உள்ளே சென்றதும் விகடன் ஆசிரியர் ரா கண்ணன், சந்திரா, கவின்மலர்  ஆகியோர் இருந்தார்கள்.  நாணயம் விகடனில் என் மாமா நாகப்பன் எழுதுவது பற்றி கண்ணன் குறிப்பிட்டுப் பேசினார். சந்திரா, கவினோடு கைகுலுக்க ஆசைப்பட்டேன் . அணுக்கமான சூழ்நிலை தென்படாததால்  நகர்ந்து சென்று ஓவியங்களை பார்வையிடத் துவங்கினேன். அதன்பின் ஓவியர் கோபுலுவை நடுநாயகமாக அமரவைத்து புகைப்படக்காரர்கள் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
விதம் விதமான மனித முகங்கள் சிற்பங்களில் .

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 2

தானே துயர் தீர்க்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள் என்ற தலைப்பில் முன்னேயே ஒரு போஸ்ட் போட்டிருக்கிறேன். அதில் தப்பிப் பிழைத்த இன்னும் சில ஓவியங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. நண்பர்கள் ஜீவாநந்தன் பி ஆர் ராஜன் ஆகியோரின் ஓவியங்களை அதிலேயே பகிர்ந்துள்ளேன்.
ராம் அடைக்கலசாமியின் ஓவியம் மரங்களையும் இயற்கையையும்  பாதுகாக்கச் சொல்கிறது.
பாஸ்கரனின் ஓவியம். மீன்கள் இலைகள் என்று கலவையான படிநிலை ஓவியம்

சனி, 25 மார்ச், 2017

சாட்டர்டே போஸ்ட். – டயர்களிலிருந்து ரப்பர் டைல்ஸ் தயாரிப்புப் பற்றி இளங்கோவன் பி பாசிட்டிவ்.

சாட்டர்டே போஸ்ட். – வீணாகும் டயர்களிலிருந்து ரப்பர் டைல்ஸ் பற்றி இளங்கோவன் பி பாசிட்டிவ். 

என் முகநூல் நண்பர் இளங்கோ பி பாசிட்டிவ் . இளங்கோ ரப்பர் பூக்கள் என்ற பெயரில் இருந்தபோதிலிருந்தே தெரியும். இரண்டு தேவதைகளின் தந்தை. பி.எஸ்.சி, பி.டெக், எம்.பி.ஏ முடித்தவர்.  25 ஆண்டுகாலப் பணி அனுபவம். கதை, கவிதை, படிப்பதிலும் எழுதுவதில் ஆர்வமுள்ளவர். 25 தொலைக்காட்சி சீரியல்களில் மட்டுமல்ல விரைவில் ( மார்ச் 31 )  வெளியாகப் போகும் கவண் என்ற படத்திலும் வில்லனின் லீகல் அட்வைஸராக நடித்திருக்கிறார். 

அவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது வித்யாசமான ஒரு விஷயத்தைச் சொன்னார். வேஸ்ட் ப்ளாஸ்டிக் பைகள் சேமிக்கப்பட்டு ரோடு போடுவதில் உபயோகப்படுகின்றன என்று முன்பு கேள்வியுற்றிருக்கிறேன். ஆனால் பழைய டயர்களை என்ன செய்வார்கள் என்று தோன்றியதில்லை. 

சனி, 18 ஜூன், 2016

சாட்டர்டே போஸ்ட். 2014 ம் 2042 ம் பற்றி Be Positive விமல் தியாகராஜன்.


நல்ல சிந்தனையாளன், முன்னேறுகிற பையன் என்ற அறிமுகத்தோடு என் முகூல் ோழி ஒருவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விமல் தியாகராஜன். உடனே அவர் வெப்சைட் சென்று பார்த்தேன் , பிரமித்தேன். கட் அவுட் கலாச்சாரத்திலும் சினிமா ரிலீஸிலும் தங்கள் இளமைப் பருவத்தை ற்கால இளையாயம் வீணாக்கிக் கொண்டிருக்கும்போது தனது  அபார உழைப்பு, பொதுநல சிந்தனையால் வியக்கவைக்கிறார் விமல் தியாகராஜன். ிட்டத்ட்டட்சம் ார்வைகள் கந்தைப்பூவுக்குச் சந்தக்காரர். பிரர் மியைச் சந்தித்ு அாவியர். !!! நம் வலைத்தளத்தில் வெளியிட மிகப் பொருத்தமான நபர் என்று உடன் நட்பில் இணைத்து நம்ம வலைத்தளத்துக்கான கேள்வியை முன்வைத்தேன். இன்று பதில் வந்துவிட்டது.  

விமல் தியாகராஜன் சென்னை L&T நிறுவனத்தில் (Asst. General Manager) துணைப் பொது மேலாளராக பணிப்புரிகிறார். தமிழ் பற்றும், சமுதாய நலனில் அக்கறை கொண்டுள்ளதாலும் Be Positive Tamil” www.bepositivetamil.com என்ற இணைய இதழை 2014 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். இந்த இதழின் மூலம் மீடியாவின் சமுதாய பங்கு 100% பாசிடிவாக இருக்க முடியும் என நிருபித்து வருகிறது இவரது B+ குழு. மக்களிடம் நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம், சிறிய மாற்றமாவது சமூகத்தில் நிகழும் என்பது இவரின் நோக்கமாக உள்ளது.

இந்தப் பத்திரிகை வாயிலாக தேசப்பற்று, சுயநலமின்மை, சுற்றுப்புறச்சூழல் நட்பு ஆகியவற்றை கற்றுத்தரும் ஊக்குவிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். சமூகத்தில் நம்மை சுற்றியுள்ள ஆனால் அதிகம் வெளியில் தெரியாத சாதனையாளர்களை நேர்காணல்கள் எடுத்து இவரது இதழில் வெளியிடுவது மற்றுமொரு சிறப்பம்சமாக உள்ளது.

தமிழில் பாசிடிவான பகிர்வுகளை மட்டுமே தரும் ஒரே ஊடகம் B+ என்பதால், தொடக்கத்திலிருந்து இதுவரை இவரது இணையத்தை 75000 க்கும் அதிகமான பார்வையாளர்கள், 4 லட்சத்திற்கும் மேல் பார்வையிட்டு, தங்கள் ஆதரவைத் தந்துள்ளனர்.

இவரது முகநூல் பக்கம் www.facebook.com/bpositivenews
இவரது இணையம் www.bepositivetamil.com
சமீபத்திய பகிர்வு - http://bepositivetamil.com/?p=1496

/// சுற்றுசூழலில் அடுத்தகட்ட அபாயம் என்னவா இருக்கும் என்பது பற்றி எழுதிக் கொடுங்க விமல் . ///

////
2042

அன்று காலை வெகு சீக்கிரமே எழுந்து புறப்பட வேண்டியிருந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் நேரம் காலை 8:40 எனவும், நாள் 14/06/2042 எனவும் காட்டிக்கொண்டிருந்தது. 10மணிக்கு, மருத்துவரிடம் எனக்கு அப்பாயின்மெண்ட். அந்த க்ளீனிக்கிற்குப் பயணம் செய்ய 32வது மாடியிலிருந்த என் வீட்டிலிருந்து லிஃப்டில் கீழே இறங்கி, சாலையை அடைந்தேன். இந்த 2042 ஆம் ஆண்டு ஆரம்பித்த நாளிலிருந்தே, நமக்கு ஒரே அலைச்சல் தான், வெயில் வேறு கொல்லுகிறதுஎன்று புலம்பிக்கொண்டே பேருந்து நிறுத்ததிற்கு வந்தேன்.

செவ்வாய், 26 மே, 2015

நமாமி கங்கே !!!. NAMAMI GANGE !!!

நைரோபியில் வசித்துவரும் என் அன்புத் தோழி காஞ்சனா மோகன் அவ்வப்போது முகநூலில் தமிழ் இலக்கியங்களில் இருந்து தான் வாசித்து மகிழ்ந்த பகுதிகளைப் பகிர்வார். இது மட்டுமல்ல தனக்குப் பிடித்த மேற்கோள்கள், சாதனைகள், பாடல்கள் ஆகியவற்றையும் பகிர்வார். மிக உன்னதமான ரசனைகளின் தொகுப்பு அவர்.

இன்று நமாமி கங்கே பற்றி அவருடைய மொழியில் மிக அருமையாகப் பகிர்ந்து இருந்தார். கங்கை நம்மோடும் நம் இதிகாசத்தோடும் வாழ்வியலோடும் ஒன்றிக் கலந்து விட்டவளல்லவா. இந்தியாவில் எத்தனை நதிகள் இருந்தாலும் கங்கைக் கரையில் இறப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. கங்கா மாதாவை மட்டுமல்ல எந்த நதிக்கரைக்குப் போனாலும் பூஜா கரோ என்று பண்டிட்ஜிகள் கேட்பார்கள்.

கங்கே ச யமுனே என்றுதான் ஸ்நானம் செய்யும்போது சொல்லும் ஸ்லோகமும் ஆரம்பிக்கிறது. பூஜையின்போதும் இப்படித்தான். நதிக்கரை நாகரீகங்களில் தழைத்து வாழ்ந்த நாம் இப்போது வாட்டர் கேன் தண்ணீரில் உயிர்வாழ்கிறோம்.

கொட்டிய கழிவை எல்லாம் சுமந்து நம்மைப் புனிதப்படுத்திய கங்கையை நாம் இனியாவது மாசுபடாமல் காப்போம். திருச்சூர் சகோதரர்கள் பாடிய இந்த அறிமுகப் பாடல் மனதுக்கு மிக இன்பமாக இருந்தது எனவே பகிர்கிறேன். நன்றி காஞ்சனா ( எனக்கு இதைச் சொல்ல நைரோபியிலிருந்து இந்தியாவையும் கங்கையையும் நேசிக்கும் & சுவாசிக்கும் தோழி தேவைப்பட்டிருக்கிறார் :) :) :)

இனி காஞ்சனா மோகனின் எழுத்தில் நமாமி கங்கே !

/////நமாமி கங்கே... நமாமி கங்கே!

திருச்சூர் பிரதர்ஸ்!

நைரோபியில் ஐயப்பா கோவில் ஆண்டு நிறைவு உற்சவத்தை முன்னிட்டு,
” ஐய்யப்ப சேவா சாமாஜ் “ன் அழைப்பை ஏற்று நைரோபிக்கு விஜயம் செய்து கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வந்திருக்கிறார்கள்,
” திருச்சூர் ப்ரதர்ஸ் ’’ ___
திரு ஸ்ரீ கிருஷ்ண மோகன் & திரு. ராம் குமார் மோகன் !

புதன், 29 அக்டோபர், 2014

எக்ஸ்னோரா.. ExNoRa



எக்ஸ்னோரா.

எக்ஸ்னோரா சிதம்பரம் என்பவரை ஒரு முறை குமரன் கல்யாண மண்டபத்தில் லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நடைபெற்ற  நவராத்ரி விழாவின்போது சந்தித்தேன். சீஃப் கெஸ்ட் மேன்மைமிகு கவர்னர் பர்னாலாவின் பேத்தி ஆயிஷா ஸாந்து ., ஸ்பெஷல் கெஸ்ட் ஃபிலிம் டைரக்டர் மதுமிதா விஜய்., மற்றும் எக்ஸ்னோரா சுலோசனா ராமசேஷன்.. குத்துவிளக்கேற்றி முப்பெரும் தேவியரும் விழாவைத் தொடங்க.. நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.. எக்ஸ்னோராவைச் சேர்ந்த சுலோச்சனா அவர்களுக்கு லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நினைவுப் பரிசு வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.!

அந்த நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா மெம்பரான சிதம்பரம் என்பவரும் வந்திருந்தார். அவரிடம் அது பற்றிக் கேட்டபோது சிறிது விவரங்கள் அளித்தார்.இவர் 2 கவிதை நூல்களும், ஒரு ஜோக் நூலும் ஒரு நாவலும் ( தாய்மையே வெல்லும் ) வெளியிட்டிருக்கிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...