நல்ல சிந்தனையாளன், முன்னேறுகிற பையன் என்ற அறிமுகத்தோடு என் முகநூல் தோழி ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விமல் தியாகராஜன். உடனே அவர் வெப்சைட் சென்று பார்த்தேன் , பிரமித்தேன். கட் அவுட் கலாச்சாரத்திலும் சினிமா ரிலீஸிலும் தங்கள் இளமைப் பருவத்தை தற்கால இளைய சமுதாயம் வீணாக்கிக் கொண்டிருக்கும்போது தனது அபார உழைப்பு, பொதுநல சிந்தனையால் வியக்கவைக்கிறார் விமல் தியாகராஜன். கிட்டத்தட்ட நாலு லட்சம் பார்வைகள் கடந்த வலைப்பூவுக்குச் சொந்தக்காரர். பிரதமர் மோதியைச் சந்தித்து அளவளாவியர். !!! நம் வலைத்தளத்தில் வெளியிட மிகப் பொருத்தமான நபர் என்று உடன் நட்பில் இணைத்து நம்ம வலைத்தளத்துக்கான கேள்வியை முன்வைத்தேன். இன்று பதில் வந்துவிட்டது.
விமல்
தியாகராஜன் சென்னை L&T நிறுவனத்தில் (Asst. General Manager) துணைப் பொது மேலாளராக பணிப்புரிகிறார். தமிழ் பற்றும்,
சமுதாய நலனில் அக்கறை கொண்டுள்ளதாலும் “Be Positive Tamil” www.bepositivetamil.com என்ற இணைய இதழை 2014 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். இந்த இதழின் மூலம் மீடியாவின்
சமுதாய பங்கு 100% பாசிடிவாக இருக்க முடியும் என நிருபித்து வருகிறது
இவரது B+ குழு. மக்களிடம் நேர்மறை சிந்தனைகளை ஊக்குவிப்பதன் மூலம், சிறிய மாற்றமாவது சமூகத்தில்
நிகழும் என்பது இவரின் நோக்கமாக உள்ளது.
இந்தப் பத்திரிகை வாயிலாக தேசப்பற்று, சுயநலமின்மை, சுற்றுப்புறச்சூழல் நட்பு ஆகியவற்றை
கற்றுத்தரும் ஊக்குவிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். சமூகத்தில் நம்மை
சுற்றியுள்ள ஆனால் அதிகம் வெளியில் தெரியாத சாதனையாளர்களை நேர்காணல்கள் எடுத்து இவரது
இதழில் வெளியிடுவது மற்றுமொரு சிறப்பம்சமாக உள்ளது.
தமிழில்
பாசிடிவான பகிர்வுகளை மட்டுமே தரும் ஒரே ஊடகம் B+ என்பதால், தொடக்கத்திலிருந்து
இதுவரை இவரது இணையத்தை 75000 க்கும் அதிகமான பார்வையாளர்கள், 4 லட்சத்திற்கும் மேல் பார்வையிட்டு, தங்கள் ஆதரவைத் தந்துள்ளனர்.
/// சுற்றுசூழலில் அடுத்தகட்ட அபாயம் என்னவா இருக்கும் என்பது பற்றி எழுதிக் கொடுங்க விமல் . ///
////
2042
அன்று காலை வெகு சீக்கிரமே
எழுந்து புறப்பட வேண்டியிருந்தது. என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அதில் நேரம்
காலை 8:40 எனவும், நாள் 14/06/2042
எனவும்
காட்டிக்கொண்டிருந்தது. 10மணிக்கு, மருத்துவரிடம் எனக்கு
அப்பாயின்மெண்ட். அந்த க்ளீனிக்கிற்குப் பயணம் செய்ய 32வது மாடியிலிருந்த என்
வீட்டிலிருந்து லிஃப்டில் கீழே இறங்கி, சாலையை அடைந்தேன். “இந்த 2042 ஆம் ஆண்டு ஆரம்பித்த நாளிலிருந்தே, நமக்கு ஒரே அலைச்சல் தான், வெயில் வேறு கொல்லுகிறது” என்று புலம்பிக்கொண்டே பேருந்து
நிறுத்ததிற்கு வந்தேன்.