பாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார் என்ற தலைப்பில் திரு. கனவுதாசன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது வித்யாகிரி பள்ளியில். அதில் நானும் பங்குபெற்றுக் கவிதை வாசித்தேன். அதன் புகைப்படங்கள் இங்கே.
காரைக்குடி ராமனாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்வில் எனது விடுதலை வேந்தர்கள் நூல் வெளியானது. அதற்கும் நன்றிகள்.அதன் புகைப்படங்கள் இங்கே.
காரைக்குடி பேர்ல் ரோட்டரி சங்கத்தினர் எனது நூல்களை எனது கணவர் வெளியிடப் பெற்றுக் கொண்டார்கள். 25 நூல்களை தங்கள் சார்பாக எங்களிடம் வாங்கிப் பள்ளி நூலகத்துக்குப் பரிசளித்தார்கள். அதற்கும் நன்றிகள்.
அ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)