எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விகடன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 ஜூலை, 2022

வெண்கலம் ( விகடன்)

 வெண்கலம்

”கொழந்த வேலா பொளந்த வாயான்னு பகல்முழுக்கத் தூங்குவான் என் பேரப்பய. ராத்திரி எந்திரிச்சான்னாத்தான் வெங்கலத்தொண்டை. அழுதழுது ஆல்வீட்டுல இருக்குற எலி பெருச்சாளியெல்லாம் வெரட்டிப்பிடுவான்.” என்று பிள்ளையைப் பார்க்கவந்த பக்கத்துவீட்டு சாரதாச்சியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் உண்ணாமலை ஆச்சி.

“பய ராத்திரில பொறந்தானா, பகல்ல பொறந்தானா “ என்று கேட்டார்கள் சாரதாச்சி.

“ராத்திரிலதான் ஆச்சி “ என்றாள் உண்ணாமலை.

“அடி ராத்திரில பொறந்தபய ராத்திரிலதாண்டி முழிப்பான். ஆமா பாண்டியக்கா குளியாட்ட வர்றாளாமே” என்று கேட்ட சாரதாச்சியிடம் “ஆமா ஆயா. அக்கா ஒவ்வொரு நாளும் குளியாட்டினவோடனே பயலுக்குக் கோமயம், பேர்சொல்லாதது, ஆடுதோடா இலை, துளசி, மாசிக்காய், சங்கு, அப்பிடின்னு ஏதாவது கொண்டாந்து ஒரசி வடிகட்டிக் கொடுக்கும்.” என்றாள் நாகு.

“அடி சங்கு குடிச்சிருக்காண்டி ஒன் பேரன். அதுதான் வெங்கலத் தொண்டையாயிருச்சு. நல்லா இருக்கட்டும்போ “ என்று கிளம்பினாக எண்பது வயது சாரதாச்சி.

“ஆச்சி நாளன்னைக்கு மிட்டாய்த்தட்டு வைக்கிறோம். ரொட்டி மிட்டாய் எடுத்துக்க வாங்க “ என்றாள் உண்ணாமலை.

வெள்ளி, 5 மார்ச், 2021

விகடனில் எனது கவிதை !

 விகடனில் எனது கவிதை. !


”நீங்கள் வாசித்ததில் உங்கள் நினைவில் நிற்கும் கவிதை நான்கு வரி சொல்லுங்களேன்” எனக் கேள்வி கேட்டிருக்கிறார்கள் விகடனில்..



அதற்கு சரவண்கவி என்பவர் எனது கவிதை ஒன்றைக் குறிப்பிட்டு இருக்கிறார். ஞாயிறு அன்று காலையில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ் உயராய்வு மையத்தின் தலைவர் திருமிகு. செந்தமிழ்ப் பாவை அம்மா அவர்கள் இதை விகடனில் படித்துவிட்டு உடனே கைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். வாட்ஸப்பிலும் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்திருந்தார்கள். சந்தோஷத்தில் ஒன்றுமே புரியவில்லை. மனுஷ்யபுத்திரன், கனிமொழி,புவியரசு, அப்துல் ரஹ்மான் ஆகியோரின் கவிதைகளோடு என் கவிதையும் !!! மிக்க நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் அம்மா. 


இதுதான் அக்கவிதை. 

”எல்லாருக்குமான வீடு

துண்டாடப்பட்ட பின்

எஞ்சின சாவிகள்..

டிஸ்கி:- இந்தக் கவிதை 22.6.2011 ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. நன்றி விகடன்.:)

முன்பே சொல்வனத்தில் வெளியானதுதான். 

விகடனில் கவிதை... மிச்சம்

நன்றியும் அன்பும் விகடனுக்கும் திரு சரவணகவி அவர்களுக்கும்.  

செவ்வாய், 19 ஜூன், 2018

துணையெழுத்து - ஒரு பார்வை.

துணையெழுத்து.

துணையெழுத்து

ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தில் என் மகனுக்கு மிகவும் பிடித்த சொல்லாடல் ‘வேலையற்றவனின் பகல்பொழுது’ இத்தனைக்கும் இதைப்படிக்கும்போது அவனுக்கு 11, 12 வயதுதான் இருக்கும். ஆனால் இத்தொடரில் இல்லாத சைக்கிள் பற்றிய பார்வை ராமகிருஷ்ணனின் எண்ணப்போக்கில் இருந்து வேறாக இருந்தது.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 3.

லலித் கலா அகாடமியின் வாயிற்புறம் நிறைய சிற்பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கேதான் ஓவியர் வீரசந்தானத்தை முதன் முறையாகப் பார்த்தேன். தாடி மீசையுடன் ஜிப்பா போட்டிருந்தவர் புகைத்துக் கொண்டிருந்தார். உள்ளே ஊர்ப்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பாதி விற்பனையும் ஆகி இருந்தன.  

அங்கே நான் பார்த்த மிச்ச ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே.
உள்ளே சென்றதும் விகடன் ஆசிரியர் ரா கண்ணன், சந்திரா, கவின்மலர்  ஆகியோர் இருந்தார்கள்.  நாணயம் விகடனில் என் மாமா நாகப்பன் எழுதுவது பற்றி கண்ணன் குறிப்பிட்டுப் பேசினார். சந்திரா, கவினோடு கைகுலுக்க ஆசைப்பட்டேன் . அணுக்கமான சூழ்நிலை தென்படாததால்  நகர்ந்து சென்று ஓவியங்களை பார்வையிடத் துவங்கினேன். அதன்பின் ஓவியர் கோபுலுவை நடுநாயகமாக அமரவைத்து புகைப்படக்காரர்கள் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
விதம் விதமான மனித முகங்கள் சிற்பங்களில் .

லலித் கலா அகாடமியில் விகடனின் ஓவியங்கள். - 2

தானே துயர் தீர்க்க நீண்ட விகடனின் ஓவியக் கரங்கள் என்ற தலைப்பில் முன்னேயே ஒரு போஸ்ட் போட்டிருக்கிறேன். அதில் தப்பிப் பிழைத்த இன்னும் சில ஓவியங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு. நண்பர்கள் ஜீவாநந்தன் பி ஆர் ராஜன் ஆகியோரின் ஓவியங்களை அதிலேயே பகிர்ந்துள்ளேன்.
ராம் அடைக்கலசாமியின் ஓவியம் மரங்களையும் இயற்கையையும்  பாதுகாக்கச் சொல்கிறது.
பாஸ்கரனின் ஓவியம். மீன்கள் இலைகள் என்று கலவையான படிநிலை ஓவியம்

வெள்ளி, 31 ஜூலை, 2015

அவங்கதான் இவங்களா..

81 - 84 வரையிலான குமுதம் விகடன் அட்டைப்படங்கள். என்னுடைய சேமிப்பில் இருந்து கண்டெடுத்தேன். அட அட அட கொள்ளை அழகுக் குழந்தைகள். ஆமா இப்ப எல்லாம் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்து அட்டைப்படம் போட்டா யாரும் பார்க்கிறதில்லையா. இல்லாட்டி  பெத்தவங்க ஒப்புக்கிறதில்லையா. என்னவோ போங்க.. இவங்க எல்லாம் இப்ப வளர்ந்துருப்பாங்க.,

ஒரு வேளை அவங்கதான் இவங்களா :) :) :)


அப்பக் கூட குமுதம் குறும்பைப் பாருங்க. :)