பதினொன்றாம் அத்யாயம் பதினெட்டாவது ஸ்லோகம்
தேயம் போஜ்யதனம் தனம் ஸுக்ருதிபி:
நோ ஸஞ்சய:
தஸ்ய வை
ஸ்ரீகர்ணஸ்ய பலேச்ச விக்ரமபதே:
அத்ய
அபி கீர்த்தி: ஸ்திதா l
அஸ்மாகம் மதுதானபோகரஹிதம்
நாதம்
சிராத் ஸஞ்சிதம்
நிர்வாணாத் இதி நைஜபாதயுகலம்
தர்ஷயன்தி அஹோ மக்ஷிகா: ll
பொருள்:-
தேயம் = திருப்பி அளிக்க வேண்டும்
போஜ்யதனம் = உணவுக்காகத் தானம் அளித்தல்
தனம் ஸுக்ருதிபி: = நற்காரியங்களுக்கும் சுபகாரியங்களுக்கும்
தானதர்மத்துக்கும் பணத்தை வாரி வழங்க வேண்டும்.
நோ ஸஞ்சய: = நல்ல இதயம் படைத்த மனிதர்கள் இருக்கவேமுடியாது.
தஸ்ய வை = இவர்களைப்போல
ஸ்ரீகர்ணஸ்ய = ஸ்ரீ கர்ணனையும்
பலேச்ச = பலி மஹாராஜாவையும் போல
விக்ரமபதே: = புகழுடம்பு அடைந்தார்கள். புகழுலகு எய்தினார்கள்.
அத்ய = உடனடியாக
அபி கீர்த்தி: = இன்னும் பெருமை
ஸ்திதா = நீடிக்கிறது.
அஸ்மாகம் = தம்முடைய , தான் சேகரித்த
மதுதானபோகரஹிதம் = தன்னுடைய சொத்தான தேனை வழங்கி இன்பமுறச் செய்யவேண்டும்.
நாதம் சிராத் = நதி நீண்ட தூரத்துக்கு
ஸஞ்சிதம் = மறைவாகவே ஓடுவதில்லை.
நிர்வாணாத் இதி = வெளிப்படையாகவே செல்கிறது.
நைஜபாதயுகலம் = புற்களைத் தழுவி ஓடுகிறது
தர்ஷயன்தி = தரிசிக்கலாம்.
அஹோ மக்ஷிகா: = அதைப்போலவே தேனீயும்.
விளக்கம்:- ஒரு அரசனும், ஒரு நல்ல மனிதனும் தாங்கள் சேகரித்த
செல்வத்தை மறைத்துக் குவிக்காமல் மக்களுக்குத் திருப்பித் தானமாக அளிக்க வேண்டும்.
உணவுக்காகத் தானமளித்தல், நற்காரியங்களுக்கும் சுபகாரியங்களுக்கும் தானதர்மமாகப் பணத்தை
வாரி வழங்க வேண்டும். ஸ்ரீ கர்ணனையும் மகாபலி மஹாராஜாவையும் போல நல்ல இதயம் படைத்த மனிதர்கள்
இருக்கவே முடியாது. நினைத்தவுடனே அனைத்தையும் பிறர்க்குக் கொடுத்ததனால் இவர்கள் மறைந்தாலும்
புகழுடம்பு எய்தினார்கள். அதனாலேயே அவர்கள் பெருமை இன்னும் நீடிக்கிறது. நதி நீண்ட
தூரத்துக்கு மறைவாகவே ஓடுவதில்லை. மழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தோடு இரு கரைகளையும்
நாணல் போன்ற புல்வகைகளையும் தழுவி வெளிப்படையாகவே செல்கிறது. அதைப் போலவே தேனீயும்
தான் பல்வேறு பூக்களில் சேகரித்த சொத்தான தேனை மனிதகுலத்துக்குப் பயன்படுமாறு வழங்குகிறது.
இதையே ராஜாவும் நல்ல மனிதர்களும் பின்பற்ற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)