திங்கள், 3 மே, 2010

நான் என்ற எல்லாம்

பருவம் தப்பிப் பெய்த மழை போல
என் மேல் நீ விழுந்தாய் ..

உன்னை தேக்கி வைத்திருக்கிறேன்...
அணையை மீறும் வெள்ளம் போல்
அலையடிக்கிறது மனசு ...

தளும்புவதெல்லாம் கவிதையாய்
உன்மேல் மனச்சூல் கழட்டித்
தேன் போல் வழிந்து..


என்ன செய்யப்போகிறாய்...
இன்னும் என்னவாகப் போகிறேன் ..

என்பது ஏதும் அறியாமல்...
உன் பின்னே...

பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...

66 கருத்துகள் :

LK சொன்னது…

good one

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

//பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...///

ஆனந்தத்தின் அடையாளம்.

சசிகுமார் சொன்னது…

கவிதை அருமையாக இருக்கிறது அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

’மனவிழி’சத்ரியன் சொன்னது…

//என்ன செய்யப்போகிறாய்...
இன்னும் என்னவாகப் போகிறேன் ..
என்பது ஏதும் அறியாமல்...
உன் பின்னே...
பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...//

தேனக்கா,

என்னச் சொல்லி பாராட்டுவதுன்னு தெரியில போங்க.

ரொம்பவும் ரசிச்சேன் நான்...1

நட்புடன் ஜமால் சொன்னது…

மனச்சூல்]]

அழகு.

padma சொன்னது…

இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே

இதுதானே தேனம்மை?
:))
நல்லா இருக்கு

D.R.Ashok சொன்னது…

:)

ஈரோடு கதிர் சொன்னது…

முதல் வரி கலக்கல்

இராகவன் நைஜிரியா சொன்னது…

// என்ன செய்யப்போகிறாய்...
இன்னும் என்னவாகப் போகிறேன் ..

என்பது ஏதும் அறியாமல்...
உன் பின்னே...

பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...//

சிறகடித்து பறக்கின்றது நினவலைகள்.

அகல்விளக்கு சொன்னது…

//பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...//

அருமை...

Jayaraj சொன்னது…

what to say? how to say?

WHY TO SAY?

ஹேமா சொன்னது…

தேனு அக்கா காலேலயே நல்லதொரு காதல் கவிதை.சந்தோஷமாயிருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

nice

தமிழ் உதயம் சொன்னது…

பருவம் தப்பிப் பெய்த மழை போல
என் மேல் நீ விழுந்தாய் ..நிறைய விஷயங்கள் இப்படி தான் அமைகிறது.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

தளும்புவதெல்லாம் கவிதையாய்...

அழகான அனுபவம் இது....

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நன்றாகவுள்ளது.

Mrs.Menagasathia சொன்னது…

நல்லாயிருக்குக்கா!!

நேசமித்ரன் சொன்னது…

:)

இங்க தேனம்மைன்னு ஒரு பூக்களின் வாசகி நல்லா எழுதுவாங்க

இப்பல்லாம் பார்க்கவே முடியல

கவிதை எழுதுறதை விட்டுட்டாங்களா ?
யாராவது பார்த்தா சொல்லுங்களேன்

//உன் ஒரு ரூபம் மட்டுமே
காண ஏங்கி கனலுடன் நீ....
சூரியன் மகளாய் நான்
இங்கேயே இருக்கிறேன் ...
எனக்கான மரணம் வரை
எந்த விஷேஷமும் அவசியமும்
இல்லாமல் ஒரு ஒப்பனை ஆர்வத்தில்
விழித்துப் பார்த்தேன் கிண்ணங்களில்
இரவுத் தூக்கமற்று
சோர்வுற்றுக் களைத்துக்கிடந்த

அவன் கண்களை
வெள்ளைக் கருவிற்குள்
சுருண்ட இறால்களாய்...

சரக்கம்பி அறுந்த மழையாய்
அவர்கள் அறிந்திருக்கவில்லை...
படைத்த ஒருவனை
சிலுவையிடுகிறோமென
ஒன்றான அலைவரிசையில்
யுகங்கள் கடந்த
நினைவுகள் அசரீரியாய்....

ஒரு புன்னகையும் சில அன்பான
வார்த்தைகளும் போதுமாயிருந்தது
அவருடனான தோழமைக்கு

உன் நன்னீர்ப்பார்வையால்
நீஞ்சவைக்கிறாய்
என்னை ..

மாலைச் சூரியனும்
பாய் மரப்படகுகளும்
முத்தமிட்டதுபோல
இலகுவாக அணைத்திருந்தாய்

நீ விளையாடி முடிந்தபின்னும்
கை நிறைய ஏப்ரல் பூக்களுடனும்
இதயத்துடிப்புடனும்
உனக்காக நான்

காண்போரே இல்லாமல்
பூப்பள்ளத்தாக்கு....
தனிமைக்குப் பயந்து
கூட்டமாய்ப் பூத்து....

வலிகளைப்
பற்களுக்குள் ஒளிப்பதை
புன்னகைப்பதாக எண்ணி
மகிழ்கிறேன்....

இன்னும் இன்னும் சொல்லித் தீராத
வரிகள் எழுதிய பேனாவை தொலைத்து விட்டீர்களா ?

ஒரு நல்ல வாசகனாக கேட்கத் தோன்றியது . பிழை இருப்பின் மன்னிக்க

:)

நேசமித்ரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
VAAL PAIYYAN சொன்னது…

VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com

SUFFIX சொன்னது…

ஆரம்பமே அசத்தலா இருக்கு!!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

மீண்டும் கவிதை அருவி!!!
குளுமை!!!

அன்புடன் அருணா சொன்னது…

கவிதை அழகு.

Chitra சொன்னது…

akkaa, very nice. :-)

செந்தில்குமார் சொன்னது…

பருவம் தப்பிப் பெய்த மழை போல
என் மேல் நீ விழுந்தாய் ..

நல்லாயிருக்கு தேனக்கா.........

மாதேவி சொன்னது…

நான் என்ற எல்லாமும்...சிறகடிக்கிறது.

வாணி சொன்னது…

அடடா...கவிதை கவிதை....:)

///பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...///

என் மனமும் சுற்றித்திரிகிறது இன்று
இக்கவிதையை...அருமை அக்கா...:)

seemangani சொன்னது…

மணசு பட்டாம்பூச்சியாய் பறக்குது கவிதையை சுற்றி...சூப்பர்...தேனக்கா..

அ.வெற்றிவேல் சொன்னது…

நேசமித்திரன் சொல்கிறார் என்பதற்காக பூக்களின் பக்கம் செல்ல வேண்டாம்..மனதோடு தொடர்புடையது கவிதை..அதை அறிவோடு பார்க்கத்தேவையில்லை.. தொடரட்டும் தங்கள் கவிதைப் பணி.. பூக்களை விட்டு வந்தபின்புதான், உண்மையான கவிதையுலகில் நீங்கள் உலவுகிறீர்கள்..வார்த்தைகளை முறுக்கு சுற்றுவது போல் சுற்றி, படிப்பவர்களை போட்டுக் குழப்பித் தாக்காமல்,எளிமையான வரிகளில் ஏராளமான அர்த்தங்கள் சொல்லும் தங்கள் பாணி, கண்ணதாசனுக்கு அப்புறம் தங்களிடம் காண்கிறேன்..தொடரட்டும் தங்களுக்கே என்ற தங்களது எளிமையான சொல்லாடல்..

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்கு தேனு மக்கா! :-)

சே.குமார் சொன்னது…

பட்டாம் பூச்சியாய்.... அருமை.

என்ன சொல்லி பாராட்டுவது.

முன்பெல்லாம் பின்னூட்டத்திற்கான பதிலும் இடுகைகளும் விரைவாக வரும். தற்போது அதில் ஒரு சுணக்கம் தெரிவது ஏனோ?

புலவன் புலிகேசி சொன்னது…

//பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...//

சபாஷ்...

கமலேஷ் சொன்னது…

///பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...///

பூரணம்...பரி பூரணம்...

செந்தில் நாதன் Senthil Nathan சொன்னது…

//பருவம் தப்பிப் பெய்த மழை போல
என் மேல் நீ விழுந்தாய் ..
//
அமர்க்கள ஆரம்பம்!!

//பட்டாம் பூச்சியாய் சுற்றித்திரிகிறது..
நான் என்ற எல்லாமும்...//

நாங்களும் பாடம் பூச்சிகளாய்!!

:-)

கனிமொழியாள் சொன்னது…

அருமையான கவிதை....

henry J சொன்னது…

unga blog romba nalla iruku friend....


Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips

ஹுஸைனம்மா சொன்னது…

மழலையின்பின் சுற்றும் தாய்க்கும் பொருந்தும் இல்லியாக்கா?

ஸ்வாமி ஓம்சைக்கிள் சொன்னது…

உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html

நேசமித்ரன் சொன்னது…

அன்பின் வெற்றி வேல்

உங்கள் விருப்பத்தை சொல்ல என்னை ஏன் இழுக்கிறீர்கள் ?

என் கவிதை மீது விமர்சனம் இருந்தால் என் தளத்தில் வைக்கலாமே ?!

விமர்சனம் செய்யக் கோருபவர்களின் தளத்தில் மட்டுமே என் விமர்சனம் இருக்கும் அல்லது விருப்பக் கோரிக்கைகளும்

நான் எடுத்து காட்டிய கவிதைகளை விட இந்தக் கவிதைகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கலாம் எனக்கு இல்லை என்பதை சொன்னேன்

முறுக்கி திருகி தேவையா இது போன்ற வார்த்தைகள் ?

தங்கம் நிறுத்துப் பார்க்க ஒரு தராசு
கரி நிறுக்க ஒன்று
தசை நிறுக்க வேறு
ஓனிக்ஸ் குப்பை நிறுவனமும் குப்பைகளுக்கு டன் கணக்கில்தான் விலை கொடுத்தது

ஆனால் எல்லாத் தராசும் ஒன்றுதான்
தராசுதான் என்பது போல் இருக்கிறது

கண்ணதாசன் ...! தேனம்மை ?

ஆமாவா தேனம்மை ?

வாசிப்பனுபவம் உள்ள உங்களைப் போன்றவர்களிடம் இருந்து இப்படியான அளவீடுகள் ஒப்பீடுகள் வருவதால்தான் இந்த மறு பின்னூட்டமே

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) சொன்னது…

இப்படியே.. சுத்திகிட்டிருங்க..அவ பின்னால. என்ன சொல்லி நான் எழுத??

thenammailakshmanan சொன்னது…

நன்றி LK.,

நன்றி ஸ்டார்ஜன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சசி.,

நன்றி சத்ரியன்

thenammailakshmanan சொன்னது…

நன்றீ ஜமால்.,

நன்றி பத்மா

thenammailakshmanan சொன்னது…

நன்றி அஷோக்

நன்றி கதிர்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ராகவன்

நன்றீ அகல்விளக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி ராஜ்

நன்றி ஹேமா

thenammailakshmanan சொன்னது…

நன்றி டி வி ஆர்

நன்றி ரமேஷ்

மழைதான் பருவம் தப்பிப் பெய்தது... நான் இல்லை...

அதாவது மழைக்குத்தான் பருவம் தப்பியது எனக்கு இல்லை

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாசமலர்

நன்றி குணசீலன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மேனகா.,

நன்றி நேசன் உங்க அன்புக்கும் அக்கறைக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி வால் பையன்

நன்றி ஷஃபி

thenammailakshmanan சொன்னது…

நன்றி சை கொ ப

நன்றி அருணா

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்ரா.,

நன்றி செந்தில்குமார்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மாதேவி

நன்றி வாணி

thenammailakshmanan சொன்னது…

நன்றி கனி

நன்றி வெற்றி உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி மக்கா.,

நன்றி குமார்

வேறொன்றுமில்லை குமார் விடுமுறை நாட்கள்., குழந்தைகள் உறவினர்கள்., வெளிநாட்டுப் பயணம்...எனவே நேரம் பத்தவில்லை எதையும் படிக்க..பின்னூட்டமிட

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலவரே.,

நன்றி கமலேஷ்

thenammailakshmanan சொன்னது…

நன்றி செந்தில்நாதன்

நன்றி கனிமொழியாள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹென்றி

ஆமாம் ஹுசைனம்மா

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஓம் சைக்கிள் ஆனந்தா.. எனக்கு நாலாவது இடம் கொடுத்த உங்களுக்கு நன்றி

thenammailakshmanan சொன்னது…

ரொம்ப நன்றி நேசன்... நான் கண்ணதாசன் அல்ல.. ஆனால் நன்கு எழுத முயற்சிக்கிறேன் எனக் கூறியதற்கு நன்றி

thenammailakshmanan சொன்னது…

ஆமாண்டா மயிலு .. அம்மு எப்ப வருவா...???

thenammailakshmanan சொன்னது…

வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

அ.வெற்றிவேல் சொன்னது…

அன்பின் நேசமித்ரன்..

வாசிப்பனுவம் அதிகமாக இருப்பதால் தான் இக்கவிதை ஒரு அழகான கவிதையாக எனக்குப் பட்டது..

இந்தக் கவிதையைப் படித்துவிட்டு, தேனம்மை கவிதை எழுதுவதைவிட்டுவிடார்களா? என்ற கேள்விதான் அப்படி எழுதத் தோன்றியது..மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

கண்ணதாச்னுக்கு தேனம்மை இணை என்று சொல்லவில்லை. கண்ணதாசன் பாணியில் எளிய வார்ததைகளில் கவி சொல்லும் திறமை கவிஞர்.தேனம்மைக்கு இயல்பாகவே உள்ளது..அந்தப் பாணியில் இருந்து மாற வேண்டிய தேவை இல்லை என்று தான் குறிப்பிட்டு இருந்தேன்.

thenammailakshmanan சொன்னது…

நன்றி நேசன்

நன்றி வெற்றி

arrawinth சொன்னது…

நன்றி

thenammailakshmanan சொன்னது…

நன்றி அரவிந்த்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...