எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 மே, 2010

கதவுகளும் ஜன்னல்களும்

வீட்டின் உள்செல்லவும்.,
வெளியேறவும்.,
இரண்டு கதவுகளும்,
ஏழெட்டு ஜன்னல்களும்....

எனக்கான சமையலறையில்
குருவியும்., காக்கையும்.,
கிளியும்., பட்டாம்பூச்சியும்.,
முருங்கை மரமும்.,
தென்னை கீறிய நிலாவும்..


உனக்கு வாசல் மட்டும்தான்
அதில் உன் அலுவலகப் படிக்கட்டு
தொடங்கி விடுகிறது..
தொடர் வண்டித்தடம் போல்..

எப்போதவது நீ திறக்கும்
ஜன்னல்கள் என்னை
ஆச்சர்யத்தில் ஆழ்த்தி..

குழந்தைகளுக்கு படிப்பறையில்
ஜன்னல்கள் அதிகம்
விரும்பப் படாமல்..
அவசரத் திறந்து மூடலில்..

படுக்கையறையில் கணினியில்
நிறைய ஜன்னல்கள்..
எங்குபோய் எங்கு வருகிறார்கள்
என்பது அறிய முடியாமல்..

இருந்த இடத்திலிருந்து
நான் அறியாமல்
உலகெல்லாம் பறந்து
நல்லதோ கெட்டதோ
விழுந்து எழுந்து...

எனக்குப் பிடித்ததைச்
செய்வதாய் ஒருபோதும்
நடிக்க முற்பட்டதில்லை நீ...

நான் உனக்கு பிடிப்பதை மட்டும்
செய்ய முயற்சித்து வேஷம் போட்டு
சிலசமயம் வேஷம் கலைந்து
விகாரமாய்..

நமக்கிடையே ஏகப்பட்ட
கண்ணுக்குத் தெரியாத
கதவுகளும் ஜன்னல்களும்..
திறக்கப்படாமல்...

இந்தக் கவிதை இளமை விகடனில் வந்துள்ளது ..

23 கருத்துகள்:

 1. எனக்குப் பிடித்ததைச்
  செய்வதாய் ஒருபோதும்
  நடிக்க முற்பட்டதில்லை நீ...

  நான் உனக்கு பிடிப்பதை மட்டும்
  செய்ய முயற்சித்து வேஷம் போட்டு
  சிலசமயம் வேஷம் கலைந்து
  விகாரமாய்..


  ....... அக்கா, ரொம்ப அருமையாக சொல்லி இருக்கீங்க.... பலர், இந்த நிலையை உணர்வதே இல்லை.

  பதிலளிநீக்கு
 2. தென்னை கீறிய நிலா...

  படுக்கையறையில் கணினியில்
  நிறைய ஜன்னல்கள்.

  அழகிய வார்த்தைப் பிரயோகங்கள்...

  பதிலளிநீக்கு
 3. //
  எனக்குப் பிடித்ததைச்
  செய்வதாய் ஒருபோதும்
  நடிக்க முற்பட்டதில்லை நீ...

  நான் உனக்கு பிடிப்பதை மட்டும்
  செய்ய முயற்சித்து வேஷம் போட்டு
  சிலசமயம் வேஷம் கலைந்து
  விகாரமாய்..//உண்மை அக்கா!! விகடனில் வந்ததற்க்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 4. இது நிஜம் அக்கா... எதிர்பார்ப்பு அற்ற வாழ்க்கையே சிறந்தது.வேஷம் என்றாவது ஒரு நாள் கலைந்து விடும். நிஜம் என்றும் கலயாது. அருமயான கவிதைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. உனக்கு வாசல் மட்டும்தான்
  அதில் உன் அலுவலகப் படிக்கட்டு
  தொடங்கி விடுகிறது..
  தொடர் வண்டித்தடம் போல்..

  செயற்கையாகி போன வாழ்க்கை முறையின் எதார்த்தங்கள்... அழகாய் கவிதை வரிகளில்.....நல்லா இருக்குங்க

  பதிலளிநீக்கு
 6. வாழ்வில் துய்த்து எழும் வார்த்தைகள் நன்று... keep rocking thennamai :)

  பதிலளிநீக்கு
 7. /நமக்கிடையே ஏகப்பட்ட
  கண்ணுக்குத் தெரியாத
  கதவுகளும் ஜன்னல்களும்..
  திறக்கப்படாமல்...//

  உண்மை. அருமை

  பதிலளிநீக்கு
 8. ///உனக்கு வாசல் மட்டும்தான்
  அதில் உன் அலுவலகப் படிக்கட்டு
  தொடங்கி விடுகிறது..
  தொடர் வண்டித்தடம் போல்..///

  அழகு.... போங்கள்

  பதிலளிநீக்கு
 9. \\எனக்குப் பிடித்ததைச்
  செய்வதாய் ஒருபோதும்
  நடிக்க முற்பட்டதில்லை நீ...

  நான் உனக்கு பிடிப்பதை மட்டும்
  செய்ய முயற்சித்து வேஷம் போட்டு
  சிலசமயம் வேஷம் கலைந்து
  விகாரமாய்..\\
  நிஜமான வரிகள்...!

  பதிலளிநீக்கு
 10. அழக அழகா எழுதி குவிக்கிறிங்க.

  பதிலளிநீக்கு
 11. எதிர் பார்ப்புக்கள் கூடுது .வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. /நமக்கிடையே ஏகப்பட்ட
  கண்ணுக்குத் தெரியாத
  கதவுகளும் ஜன்னல்களும்..
  திறக்கப்படாமல்...//

  உண்மைதான். ஆனாலும் ஆணின் அலுவலக வாழ்க்கை என்பது அவனை மிகவும் சோர்வுற செய்வதாகவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. க க க போங்கள்

  வாழ்த்துக்கள்

  விஜய்

  பதிலளிநீக்கு
 14. மனக்தவுகள் சில சமயங்களில்
  திறக்கவும்.. மூடவும்..
  தவிர்க்கவும் பழகிவிடுகின்றன ...

  பதிலளிநீக்கு
 15. //தென்னை கீறிய நிலாவும்..//

  //படுக்கையறையில் கணினியில்
  நிறைய ஜன்னல்கள்..
  எங்குபோய் எங்கு வருகிறார்கள்
  என்பது அறிய முடியாமல்..//

  அழகான வர்தைகையாடல் தேனக்கா எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு விகடனில் வந்ததிர்க்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 16. //எனக்குப் பிடித்ததைச்
  செய்வதாய் ஒருபோதும்
  நடிக்க முற்பட்டதில்லை நீ...//

  அருமை.. போலிகளை போற்றி நிஜங்களில் நிம்மதி இழக்கிறோம் நாம்..
  அருமையான கவிதை தொடருகள்..

  www.narumugai.com

  பதிலளிநீக்கு
 17. //
  நமக்கிடையே ஏகப்பட்ட
  கண்ணுக்குத் தெரியாத
  கதவுகளும் ஜன்னல்களும்..
  திறக்கப்படாமல்...
  //

  அழகான வார்த்தைகளில்..

  மிகவும் அருமை

  பதிலளிநீக்கு
 18. மீண்டும் ஒரு அருமையான கவிதை

  பதிலளிநீக்கு
 19. கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது தோழி...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 20. //நமக்கிடையே ஏகப்பட்ட
  கண்ணுக்குத் தெரியாத
  கதவுகளும் ஜன்னல்களும்..
  திறக்கப்படாமல்..//

  தேனு நாலே வரிகளில் வாழ்வின் நிதர்சனம் காட்டிவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 21. நன்றி சித்ரா.,ஸ்ரீராம்.,மேனகா., மயிலு., கட்டுசேவல்.,அஷோக்., LK., பாற்கடல் சக்தி.,அம்பிகா., ரமேஷ்., ஜெய்லானி.,ராமசாமி கண்ணன்., விஜய்.,நேசன், செந்தில்., கனி., நறுமுகை., வேலு.,கதிர்., கமலேஷ்., கண்மணி

  பதிலளிநீக்கு
 22. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...