எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 மே, 2010

முகச்சிடுக்கு

ஒரு புகைப்படமோ பேரோ
தெரிந்தது போல் இருக்கிறது
நூல் பிடித்து வர...

கொட்டிக்கிடக்கும்
அடையாள அட்டைகளில்
புன்னகை புதிதாய்...

தனிப்பட்ட தகவல்களும்
நெருக்கம் தருவதாய்...


வயது மறைந்தபின்
குடும்பம் குழந்தை குட்டி
உத்யோகம் வியாபாரம்
பொழுதுபோக்கு இன்னபிற...

எழுத்தின் சேட்டைகளும்
தேடுதல்களும் இன்னும் நெருக்கி...

சுவாசிக்க மறக்கலாம்
கணினி கைவசமாகும் நேரமெல்லாம்
தட்டச்ச மறப்பதில்லை
உன் பெயரையும் என் பெயரையும்
குறுக்கெழுத்தில்...

அதனுள்ளே வாழ்கிறோமோ என
பீதியைக் கிளப்புமளவு...

விருப்பங்களும் ஆசைகளும் பகிரப்பகிர
வேறொரு உலகில் அடியெடுத்து
எப்போதும் எல்லாமும் கூட
இருக்கவேண்டும் என்ற வேட்கையில்...

காலை மாலை நண்பகல் நள்ளிரவு
எல்லா வாழ்த்தும் சொல்லி

நூலிழையில் ஏதோ ஒரு பேச்சிடுக்கால்
தையல்கள் நின்றுவிட
புத்தகங்கள் மூடப்பட
வாசிப்பனுபவம் அறுந்து
முகங்கள் வருத்தத்தில்...

தேடுதலின் சமரசத்தில்
பின்னும் தொடர்கிறது
தையல்கள் என்றாலும்
எப்போதும் சிடுக்காகலாம் என்ற
முதல் முடிச்சின் குழப்பத்தோடு...
முகச்சிடுக்கு ...
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem030510.asp
http://youthful.vikatan.com
இந்தக் கவிதை யூத்ஃபுல்லில் வந்துள்ளது.

41 கருத்துகள்:

  1. //நூலிழையில் ஏதோ ஒரு பேச்சிடுக்கால்
    தையல்கள் நின்றுவிட
    புத்தகங்கள் மூடப்பட
    வாசிப்பனுபவம் அறுந்து
    முகங்கள் வருத்தத்தில்...//

    ரசனை மிகுந்த வரிகள் தேனக்கா...விகடனில் வந்ததிற்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. தேனுவக்கா முகச்சிடுக்கு ரொம்ப அழகு.சிடுக்கு எடுக்கவேணாம்.
    அப்பிடியே இருக்கட்டும்.
    இருக்கிறதுதான் அழகு.விடுங்க.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் தேனு
    அருமை அருமை - கவிதை அருமை - சிறு சிடுக்கு படுத்தும் பாடு இருக்கிறதே - அப்பப்பா
    நட்பு துவங்கும் விதமும், வளரும் விதமும், காலை,மாலை,நண்பகல்,இரவு வாழ்த்துகள் சொல்லும் விதமும், சடாரென ஒரு நூலிழையில் ஒரு சிறு வருத்தத்தினால் - நட்பு தடைப்படுவதும், பின் தொடர்ந்தாலும் ஒரு இறுக்கம் இருப்பதும் விவரிக்கப்பட்டிருக்கும் விதம் அருமை
    நல்ல சிந்தனை - நல்ல நடை - நல்வாழ்த்துகள் தேனு
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  4. //எப்போதும் சிடுக்காகலாம் என்ற
    முதல் முடிச்சின் குழப்பத்தோடு...
    முகச்சிடுக்கு///

    அருமை

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப சரியாய் சொல்லிருகீங்க தேனம்மை .

    எப்போதும் சிடுக்காகலாம் என்ற
    முதல் முடிச்சின் குழப்பத்தோடு...
    முகச்சிடுக்கு

    அப்பிடியே அறையுது உண்மை
    சபாஷ்

    பதிலளிநீக்கு
  7. அதனுள்ளே வாழ்கிறோமோ என
    பீதியைக் கிளப்புமளவு...//
    இது தான் உண்மை. ஆசைப்பட்ட வாழ்வு கானலாகவே போய் விட்டதே என்னும் ஆதங்கம் மனதின் ஒரு மூலையில்.

    பதிலளிநீக்கு
  8. என்னக்கா இப்படி பின்னி பெடலேடுக்குறீங்க, சூப்பரா இருக்கு அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. தேடுதலின் சமரசத்தில்
    பின்னும் தொடர்கிறது
    தையல்கள் என்றாலும்
    எப்போதும் சிடுக்காகலாம் என்ற
    முதல் முடிச்சின் குழப்பத்தோடு...
    முகச்சிடுக்கு

    ..... உணர்வுகளை கொட்டி எழுதி இருப்பது தெரிகிறது.
    யூத்புல் விகடனில் கவிதை வெளிவந்ததற்கு -
    Congratulations!

    பதிலளிநீக்கு
  10. கணினியால் வாசித்தல் குறைந்தே போய்விட்டது.

    விகட கவிக்கு வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  11. //கணினி கைவசமாகும் நேரமெல்லாம்
    தட்டச்ச மறப்பதில்லை
    உன் பெயரையும் என் பெயரையும்
    குறுக்கெழுத்தில்..//

    நல்ல வரிகள் :-)))

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்துக்கள்.

    நல்லாயிருக்கு வரிகள்.

    பதிலளிநீக்கு
  13. நீங்க எழுதற கவிதை எல்லாமே நல்லா இருக்கு. ஒவ்வொரு முறையும் உங்களுக்கு பாராட்டு உரித்தாகுது. வித்தியாசமான கரு.

    பதிலளிநீக்கு
  14. முகச்சிடுக்கு வித்தியாசமான கவிதையும்,வார்த்தையும்.

    பதிலளிநீக்கு
  15. நல்லாயிருக்கு

    :)

    தன்னோடு பேசுகையில் தனி மினுப்பு
    கொள்கிறது மொழி

    பதிலளிநீக்கு
  16. நல்லாயிருக்கு

    இளமை விகடனில் வாசித்தேன்

    பதிலளிநீக்கு
  17. கவிதை அருமை தேனம்மை. நிரம்ப ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. தேடுதலின் சமரசத்தில்
    பின்னும் தொடர்கிறது
    தையல்கள் என்றாலும்
    எப்போதும் சிடுக்காகலாம் என்ற
    முதல் முடிச்சின் குழப்பத்தோடு

    அட.. அருமை.. சபாஷ்..

    பதிலளிநீக்கு
  19. அருமை,அருமை,அருமை!! வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  20. \\தையல்கள் என்றாலும்
    எப்போதும் சிடுக்காகலாம் என்ற
    முதல் முடிச்சின் குழப்பத்தோடு\\
    ஆஹா...!

    பதிலளிநீக்கு
  21. உங்கள் படைப்புக்களை அடிக்கடி இளமை விகடனில் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. //சுவாசிக்க மறக்கலாம்
    கணினி கைவசமாகும் நேரமெல்லாம்
    தட்டச்ச மறப்பதில்லை
    உன் பெயரையும் என் பெயரையும்
    குறுக்கெழுத்தில்...//

    இந்த வரிகள்..
    சூப்பரா இருக்கு.. :D
    வாழ்த்துக்கள் அக்கா..
    (லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்.. )

    பதிலளிநீக்கு
  24. நன்றி கனி

    நன்றி ஹேமா

    நன்றி சீனா சார்

    பதிலளிநீக்கு
  25. நன்றி LK

    நன்றி மயில்

    நன்றி புலிகேசி

    பதிலளிநீக்கு
  26. நன்றி பத்மா

    நன்றி ராஜ்

    நன்றி சசி

    பதிலளிநீக்கு
  27. நன்றி சித்து

    நன்றி விஜய்

    நன்றி ஜெய்லானி

    பதிலளிநீக்கு
  28. நன்றி குமார்

    நன்றி ரமேஷ்

    நன்றி டி வி ஆர்

    பதிலளிநீக்கு
  29. நன்றி குமார்

    நன்றி ரமேஷ்

    நன்றி டி வி ஆர்

    பதிலளிநீக்கு
  30. நன்றி நேசன்

    நன்றி வி ராதாகிருஷ்ணன்

    நன்றி கதிர்

    பதிலளிநீக்கு
  31. நன்றி பட்டியன்

    நன்றி ரிஷபன்

    நன்றி மேனகா

    பதிலளிநீக்கு
  32. நன்றி அம்பிகா

    ந்ன்றி அஹமத் இர்ஷாத்

    நன்றி முனியப்பன் சார்

    பதிலளிநீக்கு
  33. நன்றி ஸ்ரீராம்

    நன்றி மாதேவி

    நன்றி வேலு

    பதிலளிநீக்கு
  34. நன்றி ursula

    நன்றி ஆனந்தி

    நன்றி ஃபாத்திமா ஜொஹ்ரா

    பதிலளிநீக்கு
  35. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...