எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 25 மே, 2010

நீரெழுத்து

புன்னகை புரிந்த
கண்களுக்கு புதைந்திருக்கும்
கத்திகள் புரிவதில்லை
கண்ணி வெடிகளாய்..

வாழ்த்த வருவதாய்
நினைக்க வீழ்த்தவா..?
கேடயம் சுமந்ததில்லை
எப்போதும்..எதற்கும்..


வந்ததெல்லாம் வரவேற்க
படிந்து படிந்து பாசம்..
வழிந்து வழிந்து
வீடெல்லாம் வழுக்கலாய்..

எப்போது வந்தது ரத்தம்..
பாசத்தில் வழுக்கி
பற்றிக்கொள்வதற்காய்
பற்றினேனே அப்போதா..?

சுற்றிக் கொண்ட இருகரத்தில்
மயக்கமாய் வந்ததே இதுதானா..?
முறுவலித்துக் கொண்டே
இருந்தாயே எப்போது குத்தினாய்

முடிவில்லாத சந்தோஷத்தோடு
சாய்கிறேன்...சுயமிழந்து...
சிரிக்கிறாயே..அழகாய்...!!
உன் சிரிப்பைப் பற்றியபடி...!!

28 கருத்துகள்:

 1. அற்புதம்.. பாராட்ட வார்த்தைகளே கிடைக்கல்லை.

  பதிலளிநீக்கு
 2. நல்லா இருக்கு அக்கா :-).

  பதிலளிநீக்கு
 3. //அமைதிச்சாரல் சொன்னது…
  அற்புதம்.. பாராட்ட வார்த்தைகளே கிடைக்கல்லை//

  தெலுங்கிலே யோசித்துப் பாருங்க

  பதிலளிநீக்கு
 4. புன்னகை புரிந்த உதடுகளால் யோசிக்கிறேன்...ஏன் இந்த கத்தியும் கண்ணி வெடிகளும்...வன்ஜ புகழ்ச்சி அணி தேவையோ, இந்த வங்சி உங்கள் நென்ஜத்தில்...

  பதிலளிநீக்கு
 5. அருமை... நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் கவிதை ஆக்கும் எங்கள் அக்கா வாழ்க !!!

  பதிலளிநீக்கு
 6. //நசரேயன் சொன்னது…
  //அமைதிச்சாரல் சொன்னது…
  அற்புதம்.. பாராட்ட வார்த்தைகளே கிடைக்கல்லை//

  தெலுங்கிலே யோசித்துப் பாருங்க//

  எந்த மொழிகளிலும் கிடைக்கலை :-))))

  பதிலளிநீக்கு
 7. /////முடிவில்லாத சந்தோஷத்தோடு
  சாய்கிறேன்...சுயமிழந்து...
  சிரிக்கிறாயே..அழகாய்...!!
  உன் சிரிப்பைப் பற்றியபடி...!!///  ...... அருமையாக, மனதில் உள்ளதை கவிதையில் வடிக்க உங்களுக்கு தெரிகிறது.... பாராட்டுக்கள், அக்கா!

  பதிலளிநீக்கு
 8. கவிதைக்குள்ள கதையிருக்கு.
  ரொம்ப நல்லாயிருக்கு தேனுவக்கா.

  பதிலளிநீக்கு
 9. என்ன சொல்ல அக்கா

  வார்த்தைக்கோர்வை
  வலியை தாங்கி
  கொண்டு ஏற்றிய ஊசியை போல
  மருந்துகளாய்.....

  பதிலளிநீக்கு
 10. ஏன் தேனம்மை ? மனது வலிக்குது ...நாம் தான் கொஞ்சம் சமர்த்தாய் இருக்கணும் ..
  என்னவோ போங்க

  பதிலளிநீக்கு
 11. //முறுவலித்துக் கொண்டே
  இருந்தாயே எப்போது குத்தினாய்..//

  தேனக்கா,

  வெகுளியாய் ஒரு கேள்வி.

  பதிலளிநீக்கு
 12. //வழிந்து வழிந்து
  வீடெல்லாம் வழுக்கலாய்..//

  அருமையான வரிகள்
  நல்லாயிருக்கு

  பதிலளிநீக்கு
 13. வலி வார்த்தைகளில் தெரிகிறது. இது கவிதை மட்டும்தானே அக்கா.

  பதிலளிநீக்கு
 14. ////////எப்போது வந்தது ரத்தம்..
  பாசத்தில் வழுக்கி
  பற்றிக்கொள்வதற்காய்
  பற்றினேனே அப்போதா..?///////

  வார்த்தைகளில் சிறப்பு !

  பதிலளிநீக்கு
 15. ம்ம்.. சிலரை இப்படித்தான் முழுசும் நம்பிடுறோம்!!

  பதிலளிநீக்கு
 16. அடடா...இந்த சிறு கவிதை வாழ்வின் பல தத்துவங்களை உணர்துவது போல இருக்கு அக்கா...

  ஆயிரம் அன்பான கரங்கள் இருந்தும், ஒரு சிலர் ஆயுதங்களுடன்
  அலைவதை போலதான்...


  ///சுற்றிக் கொண்ட இருகரத்தில்
  மயக்கமாய் வந்ததே இதுதானா..?
  முறுவலித்துக் கொண்டே
  இருந்தாயே எப்போது குத்தினாய்///

  மேலும் இந்த வரிகள் Julius Caesar-ai நெருங்கிய நண்பனா ப்ருடுஸ் கத்தியதால் குத்தியதும், Caesar "You too, Brutae" என்று கேட்டும் வரலாற்றில் புகழ் பெற்ற இந்த வாக்கியம் நினைவுக்கு வருது....

  பதிலளிநீக்கு
 17. நீங்க நீங்க தான். பின்னிட்டீங்க...

  பதிலளிநீக்கு
 18. நன்றி அமைதிசாரல்., ராமசாமி கண்ணன்., நசரேயன்.,Arise., மயிலு.,சுரேகா., சித்ரா., ஹேமா.,செந்தில்குமார்., நேசன்., LK., பத்மா.,சத்ரியன். , ஜில்தண்ணி., ஜெய்லானி.,ராமலெக்ஷ்மி., அக்பர். சௌந்தர்.,பனித்துளி சங்கர்.,.ஹுஸைனம்மா., வாணி.,கதிர்.,ோதிஜி., ஆனந்தி., புலிகேசி..

  பதிலளிநீக்கு
 19. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...