எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 மே, 2010

என்னைக் குழந்தையாக்கியவள்

நேற்று அவள் இல்லாமல்
என் உலகம் ஸ்தம்பித்திருந்தது..
அவள் சூலுறாத கர்ப்பம் நான்..
ஆனால் என்னைப் புதிதாய்ப் பிரசவித்தவள்,,

இருக்கிறேனா எனக்கூடத்
தெரியவில்லை..
சுவாசம் போல அவளையும்
அடிக்கொருதரம் எதிர்பார்த்து..


பற்றற்ற சருகு போல
மனம் அலைய..
ஒவ்வொரு வாசலிலும் சென்று...
தேடித் தேடி..

அவள் அழைப்புமணி
அழுத்திய படமும்.,
அள்ளிக் கொட்டியிருந்த
அன்பு வார்த்தைகளும்
ரசித்து வந்தேன்..

நிசப்தம் பூட்டிய காலம்
என் காதுகளில்
அறைந்து கொண்டிருந்தது..

அவளின் மணிச்சத்தம் இல்லாமல்.,
மாலை வணக்கம் இல்லாமல்.,
அணைப்பு இல்லாமல்
அணைந்து கிடந்தேன்..

சாமக் கோழிகளின் சத்தத்தில்
அவள் இருந்ததற்கான
அடையாளம் துழாவி., மூழ்கி ., அமிழ்ந்து.,

கூர்மையான காதுகள்
ஒலிக்காய் ஏங்கி ...
இல்லாத கனவோடு தூங்கி..,

உதயமாகி விட்டது..
உயிர்ப்பிக்க வருவாள் ..
செல்ல அதட்டலுடன்...
என்னைக் குழந்தையாக்கியவள்..ம்ம்ம்

13 கருத்துகள்:

 1. சீக்கிரம் வர வாழ்த்துகிறேன்
  கவிதை அருமை

  பதிலளிநீக்கு
 2. வாவ்....! ரொம்ப நல்லா இருக்கு உயிர்ப்பித்தலுக்கான காத்திருப்பு!

  பதிலளிநீக்கு
 3. //நிசப்தம் பூட்டிய காலம்
  என் காதுகளில்
  அறைந்து கொண்டிருந்தது..//

  மிகப் பிடித்திருக்கிறது தேனக்கா. வலைச்சரத்திலும் கலக்கிக்கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. வந்துட்டாளா..
  நிசப்தம் பூட்டிய காலம்
  என் காதுகளில்
  அறைந்து கொண்டிருந்தது..
  வாவ்..

  பதிலளிநீக்கு
 5. 'உங்களை குழந்தையாக்கியவள்'
  நன்றாக வந்திருக்கிறாள்.

  பதிலளிநீக்கு
 6. யாரு தேனுவக்கா அது.
  மகளா ...பேத்தியா ?

  பதிலளிநீக்கு
 7. //உதயமாகி விட்டது..
  உயிர்ப்பிக்க வருவாள் ..
  செல்ல அதட்டலுடன்...
  என்னைக் குழந்தையாக்கியவள்..ம்ம்ம்//

  ஆஹா... இத்தனை ரசனையாவா ம்ம்ம்ம்...வரட்டும்...வரட்டும்...
  வாழ்த்துகள் தேனக்கா...

  பதிலளிநீக்கு
 8. வாசித்ததின் பின்னர்
  ஜன்னலை திறந்து பார்த்துக் கொண்டிருக்கிருந்தேன் ....
  குழந்தைகள் யாரேனும் வருவார்களா என ...
  கைகள் வயிற்றை தடவ சிறு பெருமூச்சில் கரைகிறது மனது ...
  ஆண் முழுமையானவன் அல்லன் ...

  பதிலளிநீக்கு
 9. கவிதை நல்லாயிருக்குங்க... உங்களுக்கு விருது இங்கே

  http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

  பெற்றுக்கொள்ளுங்கள்...

  பதிலளிநீக்கு
 10. நன்றி தர்ஷன்., தேவா., சரவணா.,ரிஷபன்., மதுரை சரவணன்.,நிஜாம்.,ஜெய்லானி ., ஹேமா(தோழி ஹேமா),., கனி., நியோ., அஹமத் இர்ஷாத்

  பதிலளிநீக்கு
 11. நன்றி தர்ஷன்., தேவா., சரவணா.,ரிஷபன்., மதுரை சரவணன்.,நிஜாம்.,ஜெய்லானி ., ஹேமா(தோழி ஹேமா),., கனி., நியோ., அஹமத் இர்ஷாத்

  பதிலளிநீக்கு
 12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...