திங்கள், 11 ஜூலை, 2011

நம்பிக்கை.. பூவரசியில்

நம்பிக்கை..
**********************

விளைந்த புற்றுக்கள்
முளைவிட்ட நாகங்களோடு..

எங்கேயோ உரமடித்தால்
எங்கேயோ விளையுமென்று


எதுவும் கைவரப் பெறாதபோது
யாரோ உருவாக்கிய நம்பிக்கையில்

காலசர்ப்ப தோஷத்தில்
நீரூற்றி பாலூற்றி முட்டையிட்டு..

டிஸ்கி:- 28 மே., 2011 பூவரசியில் தேனுகவிதைகள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நன்றி பூவரசி.:)

12 கருத்துகள் :

தமிழ் உதயம் சொன்னது…

குருட்டு நம்பிக்கையானாலும், நம்பிக்கை மீது நம்பிக்கை வைக்கிறோம்.

ஸ்ரீராம். சொன்னது…

மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்'ங்கற நம்பிக்கை.

அமைதிச்சாரல் சொன்னது…

ஏதாவதொரு நம்பிக்கைதானே நம்மை வழிநடத்துது :-)))

ஹேமா சொன்னது…

நம்பிக்கை வைப்பதால்தான் அடுத்த செயலுக்கு இறங்கத் துணிவும் வருகிறது !

ஸாதிகா சொன்னது…

நம்பிக்கை பற்ரிய நம்பிக்கையான கவிதை

ராமலக்ஷ்மி சொன்னது…

நம்பிக்கை மனோதைரியம்:)!

சே.குமார் சொன்னது…

நம்பிக்கையான கவிதை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட்

மாய உலகம் சொன்னது…

நம்பிக்கையா... இல்லை மூட நம்பிக்கையா..இல்லை மூடா நம்பிக்கையா...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

யாரோ உருவாக்கிய நம்பிக்கையில்
ஆங்காங்கே புற்றுகளும், பாம்புகளும்.

அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ரமேஷ்., ஸ்ரீராம்., சாந்தி, ஹேமா., ஸாதிகா., ராமலெக்ஷ்மி., குமார்., சிபி., மாய உலகம்., கோபால் சார்.:)

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...