எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2011

பெண் ஆட்டோ ஓட்டுநர் இன்று சிஐடியூவின் மாநிலக்குழு உறுப்பினர். போராடி ஜெயித்த பெண்கள். (10)

ஒரு சாதாரண குடும்பத்தலைவியாய் ப்ளஸ்டூ படித்துவிட்டுப் பின் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண் இன்று CITU வின் மாநிலக்குழு உறுப்பினர். வேறு பெண் ஆட்டோ ஓட்டுனர்களும் உள்ள சங்கத்தில் எப்படி அடைய முடிந்தது இந்த உயரம்.? அவரையே கேட்டோம்.. சென்னை கே கே நகரில் ஐயப்பன் கோயிலருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் சாந்தி. 46 வயதான இவர் எம் ஜி ஆர் நகரைச் சேர்ந்தவர்.


தந்தை பெயர் ஆறுமுகம்., தாய் பெயர் சியாமளா.. ஒரு தம்பி மற்றும் தங்கை உண்டு.. பூர்வீகம் சிதம்பரம் என்றாலும் இவர்கள் மூவரும் பிறந்தது சென்னை எக்மோர் மெடர்னிடி ஹாஸ்பிட்டல். அப்பாவுக்கு நூல் வியாபாரம். வியாபாரம் நன்கு செழித்த வரை கான்வென்டில் (சித்ரா நர்சரி ஸ்கூல்) படித்த இவர் மூன்றாம் வகுப்பில் ஃபீஸ் கட்ட வசதி இல்லாமல் நெசப்பாக்கம் கவர்ன்மெண்ட் ஸ்கூலில் 5 வது வரையும்., விருகம்பாக்கம் அரசுப்பள்ளியில் பத்தாவது வரையும்., பில்லர் பெண்கள் ஹைஸ்கூலில் ப்ளஸ் டூ வரையும் படித்திருக்கிறார்.

டைப்ரைட்டிங் இங்கிலீஷ்., தமிழ் இரண்டிலும் லோயர் ., ஹையர் இரண்டிலும் பாஸ் செய்திருக்கிறார். ஷார்ட் ஹேண்டில் லோயர் படித்து பாதியில் நிறுத்தியதால் எக்ஸாம் எழுத முடியவில்லை.

பேப்பர் விளம்பரம் பார்த்து ஸ்லம் கிளியரன்ஸ் போர்டு( குடிசை மாற்று வாரியம்) மூலம் டேட்டா எண்ட்ரி ஆபரேஷன் கோர்ஸ் பயிற்சி பெற்றார். 1985 இல் ஸ்டைஃபண்ட் கொடுத்து இரண்டு மாதம் பயிற்சியும் கிடைத்தது .

தி நகர் விவேக் அண்ட் கோவில் இண்டர்வியூவில் தேர்ச்சி பெற்று வேலைக்கு சேர்ந்தார் . 600 ரூபாய் சம்பளம். மெயின் கவுண்டரில் அரை செகண்டுக்கு ஒரு முறை காஷ் பில்லிங் செக்‌ஷனில் பரபரப்பாய் வேலை இருக்கும். 6 மாதத்துக்கு பிறகு வெளியே வந்து இன்னொரு கம்பெனியில் சேல்ஸ் ரெப்பாக வேலை. ஹால்மார்க் காப்பர் பாட்டம் பாத்திரங்களுக்கு கம்பெனியின் டெமான்ஸ்டரேட்டராக பணி., வி ஜி பி., திருநின்றவூர் என பல ஷோரூம்களில் பொருளை டெமான்ஸ்ட்ரேட் செய்ய வேண்டும்.

அப்போது தயாளனை பார்த்து காதல் மலர திருமணம் செய்து கொண்டனர் பெற்றோர் ஆசீர்வாதத்தோடு. அவர் டர்னராக இருக்கிறார். ITA வில் முதல் வகுப்பில் தேறியவர். ஈக்காடுதாங்கலில் ப்ரைவேட் கம்பெனியில் வேலை செய்கிறார். ஒரு பெண் ஒரு பையன் . பெண் பிளஸ்டூ படிக்கிறாள்

MEPZ ( MADRAS EXPORTS PROCESSING ZONE) இல் சூபர்வைசராக வேலை பார்த்தபோது யூனியன் ஸ்ட்ரைக்கினால் கம்பெனி இழுத்து மூடப்பட்டது.அடுத்து பல்லாவரம் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்த போது ரெண்டாவது குழந்தை ( பையன் ) பிறந்தான்.

ஒருவர் வருமானம் போதாத சூழலில் 98 இல் ஒரு வேலைக்குச் செல்லும் பெண் தன் பிள்ளைகளை தன்னுடைய (டூவீலர்) வண்டியில் அப்புசாலி தெருவில் இருந்து ஜிஆர்டி பள்ளியில் விடுமாறும் பெட்ரோல் போட்டு சம்பளம் தந்து விடுவதாக கூறியதும் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது..

இதேபோல் நிறைய பேர் பெண்கள் ஆட்டோ ஓட்டுகிறார்களே.. நீயும் ஓட்டலாம் என அனைவரும் கூற தன் தம்பியின் நண்பன் முருகனின் உதவியுடன் ஆட்டோ ஓட்ட லைசன்ஸுக்கு அப்ளை செய்தார். பப்ளிக் சர்வீஸ் வெஹிக்கிள் என்பதால் பாட்ஜ் வேண்டும். எனவே ட்ரைவிங்க் ஸ்கூலில் சேர்ந்து கார் ஓட்டப் பயிற்சி எடுத்துக் கொண்டார். 2003 இல் ஆட்டோ பாட்ஜ் வாங்கினார்.

ஆட்டோ வாங்க TIC., THATCO., PMRY. (PRIME MINISTER ROZKAR YOJANA ) ., போன்ற அரசு நிறுவனங்கள் லோன் வழங்குகின்றன. இதில் TIC ஸ்டேட் கவர்ன்மெண்ட் நிறுவனம்., THATCO எஸ்சி எஸ்டிக்கு மட்டுமே லோன் வழங்கும் நிறுவனம்., PMRY பிரதம மந்திரியின் வேலைவாய்ப்புத்திட்ட நிறுவனம்.

ஆட்டோவுக்கான ப்ரொஸீடிங் ஆர்டர் வந்தால்தான் ஆட்டோவுக்கு லோன் சாங்ஷன் செய்ய முடியும் என TIC சொல்லிவிட., தாட்கோ எஸ்சி எஸ்டிக்கு மட்டும்தான் லோன் கொடுப்போம் என சொல்ல பின்பு ப்ரைமினிஸ்டர் ரோஜ்கார் யோஜனா மூலம் ஃபார்ம் பில்லப் செய்து நோட்டரி பப்ளிக் மூலம் அஃபிடவிட் வாங்கி., ஆட்டோ கொட்டேஷன் எல்லாம் வைத்து அனுப்பினார்.

200 ஆட்டோவுக்குத்தான் PMRY இல் அனுமதி உண்டு எனவே பர்மிட் இல்லாத வண்டி லோட் ஆட்டோ கொட்டேஷனுக்கு பாங்க் மேனேஜர் மூலம் அனுமதி வாங்கி ப்ரோசீடிங் ஆர்டர் இல்லாமல் ஃபார்வேர்டு செய்து டிடி ரெடி ஆகிவிட்டது.

ஜாயிண்ட் ட்ரான்ஸ்போர்ட் கமிஷனர் அவர்களுக்கு தனி விங் ஆர்டி ஓ ஆஃபீசில் இயங்கி வந்தது .அதில் ரீஜனல் ஜாயிண்ட் டைரக்டரைப் பார்க்க லெட்டர் கொடுத்து விட்டார்.. சாந்தியிடம் ஒரு பழக்கம் .. வேலை செய்யும் அலுவலர்களைப் பார்ப்பதில்லை.. மேலதிகாரிகளை நேரடியாக சந்தித்து தன் கோரிக்கைகளை எப்போதும் முன் வைப்பார்.. அது எளிதில் கிடைத்துவிடும். பத்துப் பைசா லஞ்சம் கொடுக்காமல் இந்த ஆட்டோவிற்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளார்.. அப்போது ஆட்டோவிற்கான ஓட்டுனர் உரிமம் பெறவே வெளி மார்க்கெட்டில் 70,000., 80,000 கட்ட வேண்டிய நிலை. 2004 ஆம் ஆண்டு இறுதி ஓட்டுனர் உரிமம் எல்லாம் எண்ட் பர்மிட் க்ளோஸ் பண்ண நிலைமை. இதுக்காக எக்ஸ்ட்ரா பெர்மிட்., ஸ்பெஷல் பர்மிட் இஷ்யூ ஆச்சு.

2005 ஜனவரி 10ஆம் தேதி லக்ஷ்மிஆட்டோ மொபைல்ஸில் வங்கி செக் கொடுத்து ( 87,550 ரூபாய்) வங்கி 75,000 ரூபாயும் நம் முன் பணம் 15 ஆயிரமும் சேர்த்து செக்காகத்தான் கொடுக்கும் .அதைக் கொடுத்து புது வண்டி வாங்கியாயிற்று..

புது வண்டி என்றால் எலும்புக் கூடுமாதிரிதான் இருக்கும். எல்லா பகுதிகளையும் வாங்கி நாம்தான் அசம்பிள் செய்து கொள்ள வேண்டும். மிச்சம் எல்லாம் சேர்த்து 1 லட்ச ரூபாய் செலவு செய்து தனித்தனி மெக்கானிக் ஷெட்டுகளில் சேர்த்து., டாப் அடித்து., டிங்கரிங் செய்து ., பெயிண்ட் அடித்து தனித்தனி லேபர் செலவு. பின்பு நம்பருக்கு தனியாய் ஆர்டிசி ஆஃபீஸ் சென்று லெட்டர் ஆர்ட்ஸ் செய்து கொண்டார்.

தம்பியின் நண்பர் முருகன்தான் தன் சொந்த சகோதரிபோல் எல்லா இடத்துக்கும் துணை வந்து எல்லாம் செய்து கொடுத்தது, இன்றும் மதிப்பும் மரியாதையும் கொண்டு பழகும் சகோதரர்களில் அவர் முக்கியமானவர். 4 மாதம் வெளி ஆட்களிடம் வாடகைக்கு ஓட்டக் கொடுத்து (உரிமையாளருக்கு தினம் 100 ரூபாய் கொடுத்து விடவேண்டும் ) வண்டி சரியில்லாமல் போனதால் இவரே தொடர்ந்து ஓட்ட ஆரம்பித்து விட்டார்.

இரண்டு நாள் கணவர் துணையுடன் இரவில் 11 மணிக்கு மேல் ஓட்டிப் பார்த்தது பின் இப்போது தி நகர்., ராமாவரம்., அஷோக் நகர்., சாஸ்திரி பவன்., என எல்லா இடமும் ஓட்டுகிறார். அப்போது யூனியனில் இருந்தவர்கள் நண்பர்களானார்கள்.. அதனால் இன்சூரன்ஸ்., ஊழியர் நல வாரியம்., எல்லாவற்றிலும் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் கார்டு வாங்கினார். ஆட்டோ சங்கத்தில் அடிப்படை உறுப்பினரானார்.

இப்போது தென்சென்னை ஆட்டோ சம்மேளனத்தின் தமிழ்நாடு ஆட்டோ சம்மேளனக் குழு உறுப்பினர். தென்சென்னையில் மட்டும் 10000 பேர் உறுப்பினர் இருக்கிறார்கள்.

முதலில் 2006 இல் திருவன்மியூரில் நடந்த மாவட்ட மாநாட்டில் துணைச் செயலாளர் ஆனார். அப்போதுதான் முதன் முதலில் மாவட்ட நிர்வாகி ஆகிறார். 2008., 2011 இல் மாவட்ட துணைத்தலைவர். 2008 இல் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டோ சங்க மாநில மாநாட்டில் சம்மேளனக் குழு உறுப்பினராக சேர்ந்து செயல்பட்டார். 2010 ஜனவரியில் CITU மாநில மாநாட்டில் கடலூரில் இவர் மாநிலக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சி ஐ டி யு ( இந்திய தொழிற்சங்கம்) என்பது கிட்டத்தட்ட 70 ., 80 சங்கங்களை உள்ளடக்கியது., ஆட்டோ., கட்டுமானம்., சலவை., துறைமுகம் ., போக்குவரத்து என. சி ஐ டி யூ என்பது இடதுசாரிகள் வழிகாட்டுதலில் நடக்கும் சங்கம். தோழர் ., காமரேட் என ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் பண்பு இந்த தொழிற்சங்கத்தில் முக்கியம்.

சி ஐ டி யூ மாநிலக் குழு உறுப்பினர் என்பதால் பொது இடங்களில் ஏதும் இடையூறு ஏற்பட்டால் மொத்தப் பேரும் திரண்டு விடுவார்கள். 4 மாதத்துக்கு ஒரு முறை சி ஐ டி யூ கூடும் போது அதில் இவர் கலந்து கொள்வார்.

8 மணி நேர வேலை., 8 மணி நேர ஓய்வு., 8 மணி நேர உறக்கம் .. இதுவே சி ஐ டி யூ வலியுறுத்தும் தாரக மந்திரம். இப்படி ஒரு சாதாரண குடும்பத்தலைவியாக இருந்து அனைத்து விஷயங்களிலும் பொறுப்பெடுத்து செயல்பட்டதால் பெண் ஆட்டோ ஓட்டுநர்களிலேயே இவர் இவ்வளவு உயரத்தை எட்ட முடிந்தது. போராட்டம் என்பது வெற்றிக்கனியை அடையத்தானே.. வாழ்த்துவோம் சாந்தியை அவர் தன்னம்பிக்கைக்கும் அவர் பெற்றுள்ள பதவிகளுக்கும்.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 2011 மே மாத லேடீஸ் ஸ்பெஷலில் போராடி ஜெயித்த பெண்கள் என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

15 கருத்துகள்:

 1. அருமை. வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான கட்டுரை. சாந்திக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. விடா முயற்சியும் - தன்னம்பிக்கையும் சேர்ந்து, திறமையுடன் கை குலுக்கி - இன்று இவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருக்கிறார். நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. சாந்தியை வாழ்த்துவோம். பகிர்வுக்கு நன்றி தேனம்மை.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பெண்மணியை அறிமுகம் செய்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 6. வெற்றிக்கனியை எட்டிப்பிடித்த சாந்திக்கு வாழ்த்துக்கள். அவரைப்பற்றி எடுத்துரைத்த இந்தப்பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

  கூட்டான்சோறு...

  பதிலளிநீக்கு
 8. அருமை அருமை அருமை ...

  தன்னம்பிக்கைக்கு இவர் ஒருவரே போதும்..
  சும்மா கலக்கி எடுத்து இருக்கீங்க... உங்க கைக்கு தங்க காப்பு போடலாம்
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 9. நன்றி சௌந்தர்., சாந்தி., குணா., ரத்னவேல் ஐயா., ரமேஷ்., சிபி.,சீனா சார்., ராமலெக்ஷ்மி., ராஜா., கோபால் சார்.,கவி அழகன்., கலாநிதி.

  பதிலளிநீக்கு
 10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருக்ட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...