திங்கள், 21 டிசம்பர், 2009

மணிமேகலையின் தாய்

உன் துணையைவிட்டு என்னிடம் வந்து
நீ கண்ணகியல்ல என்கிறாய் ..
ஆம்.. நான் கண்ணகியல்ல மாதவி ..

கோயில்களில் பொட்டுக்கட்டி
தேவர் அடியவராய் நடனமாடி
இறைமைக்கே வாக்கப்பட்டேன்
மனிதருக்கு அல்ல...

இறைவனுக்குள் இழைந்திருந்த என்னை
இரத்தின வியாபாரி நீ
இரையெடுத்தாய்..

புகலிடம் இல்லாத என்னை
உன் வடிகால்களுக்கு
வாய்க்காலாக்கினாய்...

நான் தனவணிகர் மகளுமல்ல
என் தண்டையைக்
கழட்டித்தர...

இச்சை துறக்காத உனக்குத்தான்
பெற்றேன் மணிமேகலையை...
துறவியானவளை...

மணிபல்லவத்தீவில்
ஒளிந்தது என் சொர்க்கம் ...

உனக்குத்தான் இணைவி
மனைவி துணைவி எல்லாம்..
எனக்கு நீ மட்டும்தான்...

என் ஒரு சொல்லேஉன்னைத் துரத்தியதே ..
என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது சொற்கள்???

39 கருத்துகள் :

tamiluthayam சொன்னது…

உனக்குத்தான் இணைவி
மனைவி துணைவி எல்லாம்..
எனக்கு நீ மட்டும்தான்... லட்சத்தில் ஒரு வாக்கியம்... நிதர்சனமான வாக்கியம்

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

சும்மா மாதிரி தெரியவில்லையே..,

கவிதை(கள்) சொன்னது…

அரசியல்வியாதிகள் இன்னும் மனைவி, துணைவியுடன் தான் இருக்கிறார்கள்

சட்டம் கையைக்கட்டிக்கொண்டு இருக்கிறது

நல்ல சாடல் கவிதை

வாழ்த்துக்கள்

விஜய்

Muniappan Pakkangal சொன்னது…

Intha kavithai yaarukku,nice thenammai.

வினோத்கெளதம் சொன்னது…

சூப்பர்..ரொம்ப நல்லா இருக்கு..

நேசமித்ரன் சொன்னது…

உட்பொருள் தானியக் கிடங்கில் துளிர் விட்ட நீர் சொட்டும் பிரதேசத்து ரகசியம் போல் ஒளி யாசிக்கிறது இன்னும் கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் என்னும் இந்த சொற்களை பின் தொடரும் கவிதையைப் போல

புலவன் புலிகேசி சொன்னது…

நல்லாத்தான் சாடியிருக்கீங்க...வாழ்த்துக்கள்

பிரியமுடன்...வசந்த் சொன்னது…

ரொம்ப உட்கருத்தாழமிக்க கவிதை...!

Sivaji Sankar சொன்னது…

(இச்சை துறக்காத) உனக்குத்தான்
பெற்றேன் மணிமேகலையை...
(துறவியானவளை)...

ஆக்கசிந்தனை..!

S.A. நவாஸுதீன் சொன்னது…

///இச்சை துறக்காத உனக்குத்தான்
பெற்றேன் மணிமேகலையை...
துறவியானவளை...///

///உனக்குத்தான் இணைவி
மனைவி துணைவி எல்லாம்..
எனக்கு நீ மட்டும்தான்...///

அருமை என்று சொல்வதை தவிர்த்து இன்னும் அருமையான சொல் தேடுகிறேன்.

balakavithaigal சொன்னது…

மாதவியின் மாண்பும் மணிமேகலையின் சிறப்பும்
இன்னும் தமிழ்மக்கள் மனங்களுக்கு விளங்கவில்லை.கவிஞர் தமிழொளி மாதவி காவியமே படைத்திருக்கிறார்.இன்னும் எத்தனையோ மாதவிகளும் மணிமேகலைகளும் இந்த மண்ணில்......
வாழ்த்துகள் தேனம்மை

thenammailakshmanan சொன்னது…

நன்றி தமிழுதயம் உங்க பாராட்டுக்கு

கவலை என்ற வாக்கியத்தை என் அகராதியில் இருந்து நீக்கிட்டேன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சுரேஷ் பழனியிலிருந்து

உங்க முகல் வருகைக்கு நன்றி

தெலுங்கானா பின் தொடர்பவர்கள் பட்டியலென அருமையாக இருக்கு உங்க பதிவு சுரேஷ்

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய் உங்க கருத்துக்கு ..
உண்மைதான் என் சொல்லி என்ன..
உங்க அகசூல் ரொம்ப அருமையா இருக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி முனியப்பன் சார்

இத்தனை வருடம் கழித்து உங்க நண்பரை நீங்க ஏன் சந்திச்சீங்கன்னு நானும் வருத்தப் படுறேன்

அவரை இழப்பதற்கா

thenammailakshmanan சொன்னது…

நன்றி தல
மன்னிசுக்குங்க வினோத்
உங்களப் பார்த்தா தன்னையறியாமல் தலை தான் ஞாபகம் வரார்

நன்றி உங்க பாராட்டுக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி நேசன் கவித்துவமான உங்க பின்னூட்டத்துக்கு

தொங்கும் கூடுடைய பறவைகள் போல நாமும் இருக்கிறோம் நம்முடைய கார்பன் டேட்டிங் செய்ய ஏதாகிலும் மிச்சம் இருக்குமோ என்னவோ

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலவரே
உங்க கருத்துக்கு உங்க நினைவில் நில்லாத முதல் முத்தம் அருமையா வந்து இருக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி வசந்த் உங்க வாழ்த்துக்கு

உங்க பதினெட்டு வயதில் பாட்டுக்கு பழனி முருகனையும் வினாயகரையும் வம்புக்கு இழுத்துவிட்டதோட மட்டுமில்ல ரோஜா கூடவா

பாவம் செல்வமணி

thenammailakshmanan சொன்னது…

நன்றி சிவாஜி சங்கர் உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் உங்க வனவாசமும் இறகும் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி நவாஸ் வழக்கம் போல உங்க பரிசுத்தமான காதலையும் பார்த்து படித்து வருகிறேன் தினமும்

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா உங்க வாழ்த்துக்கும் வரவிற்கும்

உங்க நடைவண்டியில் மழை பார்த்து

"அடடா இப்பவே மழையிலே நனைந்து குளித்து ஆடணும் போல இருக்கே பாலா"

பலா பட்டறை சொன்னது…

என் ஒரு சொல்லேஉன்னைத் துரத்தியதே ..
என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது சொற்கள்???//

தீயினாற் சுட்ட புண் ஆறிவிடும் ... சாகும் வரை குருதி வழிவது வார்த்தை புண்களில்தான்.. மிக அருமை.

அண்ணாமலையான் சொன்னது…

நல்லாருக்கு..

ரிஷபன் சொன்னது…

என் ஒரு சொல்லேஉன்னைத் துரத்தியதே ..
என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது சொற்கள்???
கவிதை சுள்ளென்று..

பாலா சொன்னது…

மாதவி !!!!!!!!!!!
மாதவி அதிசயம்
மாதவி ??/

அக்பர் சொன்னது…

ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம். இதுதான் உலகம்.

கவிதை உறைக்கிறது.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

என்ன பாவம் செய்தேன்

விதி வலியது

கோவலன் வழி மாற !!! .


ஓ நான் ! தாமதமான வருகையா

தேனம்மை அக்கா , அருமையான கவிதை

thenammailakshmanan சொன்னது…

உங்க முதல் வருகைக்கு நன்றி பலாபட்டறை

உயிர் சங்கிலி உண்மைதான் பலா பட்டறை அருமையாய் இருக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி அண்ணாமலையான் பாத்ரூம் பூதம் என்று ஏன் ஒரு டெரர் தலைப்பு விழிப்புணர்வுக் கட்டுரை அருமை

thenammailakshmanan சொன்னது…

ரிஷபன் உங்க வருகைக்கு கருத்துக்கும் நன்றி

உங்க காதல் ஒரு வழிப்பாதை அருமை

thenammailakshmanan சொன்னது…

மாதவியும் ஒரு பெண்தானே பாலா அவளுக்கும் உள்ளம் என்பது ஒன்றிருக்காதா என நினைத்து இந்தக் கவிதை

thenammailakshmanan சொன்னது…

உங்க முதல் வருகைக்கு நன்றி அக்பர் உங்க கருத்துக்கும்

எசப் பாட்டும் நல்லாதான் இருக்கு அக்பர்

thenammailakshmanan சொன்னது…

உங்க வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்

கனவிலே வந்தவங்க யாரு உங்க வருங்காலக்கவிதையா ஸ்டார்ஜன்

velkannan சொன்னது…

//என் ஒரு சொல்லேஉன்னைத் துரத்தியதே ..
என் வாழ்நாள் முழுமைக்கும்
உனது சொற்கள்//
கடைசி இந்த வரிகளில் கவிதை பிரமாண்டமாய்
கண் முன் விரிகிறது தோழி

thenammailakshmanan சொன்னது…

நன்றி வேல்கண்ணன்
உங்க முதல் வருகைக்கு

மிக அருமையான கவிதை உங்களோட மௌன புரிதல்

ஹேமா சொன்னது…

///இச்சை துறக்காத உனக்குத்தான்
பெற்றேன் மணிமேகலையை...
துறவியானவளை...///

///உனக்குத்தான் இணைவி
மனைவி துணைவி எல்லாம்..
எனக்கு நீ மட்டும்தான்...///

ஆழச்சிந்தித்த வரிகள்.அழகு தேனு.

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹேமா முடியாத இரவொன்றில் கவிதை அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...