புதன், 16 டிசம்பர், 2009

கவிதைகளின் கடவுள்

சொர்க்கத்தின் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்து
சாதாரணனாய்...

கவிதைகளின் கடவுள்
கதைக்க விரும்பினார்
என்னுடன்...

பூமாலைகளுடன் அவரை
வரவேற்க நான் காத்திருந்த
நாளெல்லாம் போக...

முயல்களுடன் நான்
தொடரோட்டத்தில் இருந்தபோது
சங்குசக்ரதாரியாக எதிரில்...

தனிமையில் அரவுப்படுக்கையில்
தண்ணீருக்குள்
தண்ணீர் தாண்டி...

தொலைத்தொடர்பற்ற தொலைவில்
அவரிடமும் இருந்தது
தனிமை பற்றிய துயரம்....

ஒன்றான அலைவரிசையில்
யுகங்கள் கடந்த
நினைவுகள் அசரீரியாய்....

தொலைவு ஒரு
பொருட்டாக இல்லை ...
எண்களின் வழிப்பயணத்தில்...

நிறையப் புன்னைகையும்
சில கண்ணீர்த்துளிகளும்
அவரிடமும் ...

என்னுடன் பேசும்போது
மனிதராய் மாறி இருந்தார்
செங்கோல் கிரீடம் இல்லாமல்...

ஒரு புன்னகையும் சில அன்பான
வார்த்தைகளும் போதுமாயிருந்தது
அவருடனான தோழமைக்கு...

நிலவு வெளிப்பட்ட போது
எடுத்துத்தலையில் சூடி
உவகையோடு...

உலகை பரிபாலனம் செய்ய
ஒளிப்புன்னகையோடு
கிளம்பினார் கடவுள்....

36 கருத்துகள் :

அண்ணாமலையான் சொன்னது…

"ஒரு புன்னகையும் சில அன்பான
வார்த்தைகளும் போதுமாயிருந்தது
அவருடனான தோழமைக்கு..." இது கடவுளுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் பொருந்தும். என்ன யார் முதலில் என்பதில்தான் சிக்கல்.. வாழ்த்துக்கள்

PPattian : புபட்டியன் சொன்னது…

//அவரிடமும் இருந்தது
தனிமை பற்றிய துயரம்....
//

//நிறையப் புன்னைகையும்
சில கண்ணீர்த்துளிகளும்
அவரிடமும் ...//

வேறு யாரிடம்?

balakavithaigal சொன்னது…

ஒரு புன்னகையும் சில அன்பான வார்த்தைகளும்....
அன்பினால் இந்த அகிலத்தையே வெல்லலாம்
வாழ்த்துகள்

வெற்றிவேல் சொன்னது…

25 வருடங்கள் கவிதைகளுடன் வாழ்ந்து வரும் மனத்திற்கு தான் கடவுளின் தரிசனம் இப்படிக்
கிடைக்கும்.அதையும் கவிதையாக்ககூடிய ரசாயன வித்தை தங்களுக்கு கைகூடி வந்துள்ளது.அற்புதமான கவிதை.ஒரு நாளில் பல அடிகள் முன்னெடுத்து வைத்தது போல் தெரிகிறது.
தொடர்ந்து இப்படி தரமான கவிதை தரவும். அன்புடன் வெற்றிவேல்

கவிதை(கள்) சொன்னது…

கடவுளின் விருப்பக்கவிதையல்லவா நீங்கள்

வாழ்த்துக்கள்

(கடவுளை பற்றி மற்றுமொரு கவிதை போட்டியில் 71 வது கவிதையை பாருங்கள், என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. அப்படி ஒரு அபத்தக்கற்பனை)

விஜய்

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான கவிதை தேனம்மை அக்கா

கடவுள் என்ன வரம் கொடுத்தார் .

வினோத்கெளதம் சொன்னது…

எப்படி வார்த்திகள் தொடர்ந்து உங்களுக்கு சரளமா வருது..
சொன்ன மாதிரி..Blessed by god.

thenammailakshmanan சொன்னது…

நன்றி அண்ணாமலையானே
இனிமே சினிமானு வாயத்திறப்பேன் நானு

அய்யோடா சாமி

டிவிடி சிடி டிவில கூட படம் பார்க்க மாட்டேனே அண்ணாமலையானே

thenammailakshmanan சொன்னது…

நன்றி பட்டியன்

வேறு யார் என்னிடமும்

மீ ஸ்பீக்ஸில் என்ன ஒரே நர்ஸ்ரி ரைம்ஸா இருக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி பாலா அன்பினால் அகிலத்தையே அடையலாம்
நடைவண்டியில் சுத்தம் பற்றிய கவிதை அருமை பாலா அருமை

thenammailakshmanan சொன்னது…

உங்களின் புது வலைத்தளம்
மிக அருமையாக இருக்கிறது வெற்றிவேல் ஸார்

நறும்புனல் என்ற பெயருக்கு ஏற்றாற் போல் உண்மையின் வடிவாக இருக்கிறது

thenammailakshmanan சொன்னது…

நன்றி விஜய் உங்க பாராட்டுக்கு

பயிர் வளர்ச்சி ஊக்கியாக நிறைய கரைசல்கள்

நல்ல பகிர்வு விஜய்

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஸ்டார்ஜன் உங்க பாராட்டுக்கு

உங்க நாளைய ராஜாவில்
பாரதி பற்றிய நல்ல பகிர்வு ஸ்டார்ஜன்

thenammailakshmanan சொன்னது…

நன்றி வினோத் க்ளோனிங் கூட ரொம்ப நல்லா வந்து இருக்கே
நான் இப்பத்தான் பார்க்குறேன்

ஆனா கமெண்ட்தான் போட முடியல வினோத்

Susri சொன்னது…

வாழ்த்துக்கள்!!!

புலவன் புலிகேசி சொன்னது…

//ஒரு புன்னகையும் சில அன்பான
வார்த்தைகளும் போதுமாயிருந்தது
அவருடனான தோழமைக்கு...

நிலவு வெளிப்பட்ட போது
எடுத்துத்தலையில் சூடி
உவகையோடு...//

அடா அடா பூக்களின் காதல் உங்களை இல்லாத கடவுளை காண செய்திருக்கிறது அதே பூவின் வடிவில்..

Sivaji Sankar சொன்னது…

//என்னுடன் பேசும்போது
மனிதராய் மாறி இருந்தார்
செங்கோல் கிரீடம் இல்லாமல்...//
நல்ல உள்ளங்களில் கடவுளிருப்பதே மெய்....

S.A. நவாஸுதீன் சொன்னது…

///தொலைவு ஒரு
பொருட்டாக இல்லை ...
எண்களின் வழிப்பயணத்தில்...

நிறையப் புன்னைகையும்
சில கண்ணீர்த்துளிகளும்
அவரிடமும் ...///

அருமை என்ற ஒற்றை வார்த்தை மட்டும்போதாது அதனால்தான் நேற்று ஓட்டு மட்டும் போட்டுவிட்டு கமெண்ட் போடவில்லை. வார்த்தை கிடைக்காததால் ஒன்றும் சொல்லாமல் வெளியேறுகிறேன் மீண்டு(ம்) வருவதற்கு

கலையரசன்.. சொன்னது…

அதெல்லாம் முடியாதுங்க...

என்னை விடுங்க... என்னை விடுங்க...

யாரு தடுத்தாலும் கேக்கமாட்டேன்....

பாய்ஞ்சு வந்து சொல்லுவோமுல்ல...

""""நல்லாயிருக்குங்க கவிதை!!""""

ரிஷபன் சொன்னது…

உலகை பரிபாலனம் செய்ய
ஒளிப்புன்னகையோடு
கிளம்பினார் கடவுள்....

கவிதைப் புன்னகையோடு நாங்கள்!

tamiluthayam சொன்னது…

காதல், மழை- இவைகள் இல்லாமல் வந்துள்ள ஒரு சிறந்த கவிதை

thenammailakshmanan சொன்னது…

நன்றி சுஸ்ரி சுர்மாவும் சுக்கினி கூட்டும் அருமை சுஸ்ரி

thenammailakshmanan சொன்னது…

நன்றி புலவரே
இல்லாத கடவுள்னு ஒத்துக்கொள்ள மாட்டேன்

இருக்கார் தூணிலும் துரும்பிலும்

அவசர ஊர்திக்கு வழிவிடணும்னு சொன்னதை நான் வழிமொழிகிறேன் புலவரே

thenammailakshmanan சொன்னது…

நன்றி சிவாஜி சங்கர் என் வலைத்தளத்துக்கு முதல் முறையா வர்றீங்க வாழ்த்துக்கள்

thenammailakshmanan சொன்னது…

நன்றி நவாஸ்
அற்புதம் நவாஸ் இன்னும் எவ்வளவுதான் மனசுல அடக்கி வச்சு இருக்கீங்க அப்பப்ப வழியுதே

thenammailakshmanan சொன்னது…

நன்றி கலையரசன் உங்க கருத்துக்கு

படிக்கிறீங்களான்னே தெரியல ஆனா திடீர்னு வந்து வாழ்த்துறீங்களே... எப்பிடி?

ஆமா அதென்ன சாம் ஆன்டர்சன் பான்ஸ்னு ஒரு ப்ளாக் வைச்சு இருக்கீங்க

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரிஷபன் உங்க புறநகர் கடவுள்களும் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி தமிழுதயம்
ரொம்ப நல்லா சொன்னீங்க தமிழுதயம்
கடனற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்னு

Chitra சொன்னது…

உலகை பரிபாலனம் செய்ய
ஒளிப்புன்னகையோடு
கிளம்பினார் கடவுள்....
.............. what a finishing touch!

Chitra சொன்னது…

உலகை பரிபாலனம் செய்ய
ஒளிப்புன்னகையோடு
கிளம்பினார் கடவுள்.... What a finishing touch!

ஹேமா சொன்னது…

ஒரு கவிதையின் பிரசவம்.அதற்காகக் கடவுளோடு கதைத்துப் பேசி....அழகுதான்.

நேசமித்ரன் சொன்னது…

சொற்களற்ற வெளியில் நிறுத்தும் எதிர்பாராத தங்கையின் முத்தம் போல பெரும் பனிப்புயலில் உறையத்துவங்கியது என் காலம் இந்தக் கவிதையில்

thenammailakshmanan சொன்னது…

நன்றி சித்ரா உங்க நட்பு பற்றிய பதிவும் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி ஹேமா உங்க தற்கால மணவாழ்வு பற்றிய எண்ண மாற்றங்கள் அருமை

thenammailakshmanan சொன்னது…

நன்றி நேசன் சுவடுகளற்ற வெளியிலிருந்து அகழ்ந்த கரத்தின் கனிம ஒளிர்வு அற்புதம்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...