எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

அடைக்கலம்

ஒரு எழுத்தாளனாகவோ
பத்திரிக்கையாளனாகவோ
நடிகனாகவோ நான் ...

உன் ஒற்றைக் குழந்தையுடன்
துணையை இழந்து இறந்தோ
பிரிந்தோ நீ என்னிடம்...

என் மனக்கூட்டுக்குள்
ஆமையாய் நத்தையாய்
சிப்பியாய் முடங்கி நான்...

உன் நன்னீர்ப்பார்வையால்
நீஞ்சவைக்கிறாய்
என்னை ..

உன் பார்வையில்
குழைந்த மண்ணாகிறேன்..
உன் வார்த்தைகளாலே
வனைகிறாய் என்னை...

நம் உறவு யாருக்கும்
புரியமுடியாத
லிபியில்...

அரைகுறையாகவே வாழ
சபிக்கப்பட்ட நான் உன்னால்
முழுமையடைந்து...

நம் குழந்தைகளும்
ஒருவரை ஒருவர்
நம்மைப் போலவே
ஏற்றுக் கொள்கிறார்கள்
எந்தக் கேள்வியுமில்லாமல்...

எனக்கான நீ ஏன் இத்தனை
தாமதமாக வந்தாய் ...
சாகும்வரை கூட இருப்பேன்
என்ற சத்தியத்துடன்...

என் ஆவியாக இருப்பவளே..
நான் உன்கூட இருப்பதால்
உன் நோவிலும் உனை நெருங்க
மரணம் கூட மிரளுகிறது..

பரதேவதையே.. பாசக்காரியே..
என்னை நண்பனாக .,கணவனாக
அதற்கும் மேலாக மதிக்கிறாய்...

என்னை தெய்வம் என்கிறாய்
எனக்குமுன் தெய்வமாகி விடாதே ..
அதன்பின் நான் உயிர்த்திருப்பேனோ
என்னுயிரே....

46 கருத்துகள்:

 1. தேனம்மை அக்கா , நல்ல கவிதை

  மிக அருமை . காதல் காதல்

  பதிலளிநீக்கு
 2. Edhu Kalluriyil ezhudhiyadhaaa..?
  Enn Kal eeraliyae thottu vittadhu..!

  Elimayana nadiyil varthaikalil varnajalam,
  Endha vana villeen vayadhoo kalluri kalam!

  Vazhthukkal,
  Suresh K.

  பதிலளிநீக்கு
 3. காதலில் கரைந்திட ஒரு நல்ல கவிதை
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. அக்கா என்று அழைக்க முழு உரிமை எனக்குத்தான்

  உங்கள் அளவு, மொழி எனக்கு கைகூடவில்லை

  வாசித்து மகிழ்கிறேன்

  அன்பு தம்பி விஜய்

  பதிலளிநீக்கு
 5. நம் உறவு யாருக்கும்
  புரியமுடியாத
  லிபியில்...

  அரைகுறையாகவே வாழ
  சபிக்கப்பட்ட நான் உன்னால்
  முழுமையடைந்து...


  எனக்கான நீ ஏன் இத்தனை
  தாமதமாக வந்தாய் ...

  அருமையான வரிகள்!....

  நான் முன்பு கூறியது போல‌
  பூக்களை விடுத்து
  மற்ற தலைப்புகளில்
  தொடர்ந்து எழுதவும்...
  உங்கள் வார்த்தைகளின்
  ஆழம் மற்ற தலைப்புகளில்
  அதிகம்...

  பதிலளிநீக்கு
 6. அருமையான கவிதை.

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. நல்ல காதல் கவிதை படித்த உணர்வு
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. //நம் உறவு யாருக்கும்
  புரியமுடியாத
  லிபியில்...//

  லிபின்னா என்னக்கா?

  மீத வரிகள் ரசனையா இருந்ததுக்கா

  பதிலளிநீக்கு
 9. அருமையான வரிகள் வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு
 10. அருமையாக இருக்கிறது கவிதை.

  பதிலளிநீக்கு
 11. நானும் அடைக்கலமாகிவிட்டேன், என்னுள் கவிதையும்.

  பதிலளிநீக்கு
 12. ///என் ஆவியாக இருப்பவளே..
  நான் உன்கூட இருப்பதால்
  உன் நோவிலும் உனை நெருங்க
  மரணம் கூட மிரளுகிறது..///

  ஆழமான் காதலின் வெளிப்பாடு அருமை

  பதிலளிநீக்கு
 13. வழக்கம்போல் கலக்கல்.. நெகிழ்வும் கூட..

  பதிலளிநீக்கு
 14. ஒரு தெள்ளிய நீரோட்டத்தில் நீந்தும் மீன்களின் நகரும் நிழல் கவித்துவம் ... மின்னும் ஒளி வார்த்தைகள்

  100 என்பது வெறும் எண்ணிக்கையாக மட்டும் இல்லாமல் சாரம் உள்ள கவிதைகளின் சரமாக இருப்பது இந்த இடுகைகளின் வெற்றி

  பூக்களின் வாசகி இவரின் புத்தம் புது உவமைகளின் வசீகரம் அலாதியானது ஒரு வாசகனுக்கு

  வாழ்த்துகள் தேனம்மை

  பதிலளிநீக்கு
 15. பாடாய் படுத்துகிறது காதல். காற்றாய் வருகிறது கவிதை. மறக்க முடியாதது காதல் மட்டுமல்ல, அவளுக்காக எழுதிய கவிதையும் தான்.

  பதிலளிநீக்கு
 16. நன்றி ஸ்டார்ஜன் பிரியமுடன் வசந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கீங்க
  நானும் என் பின்னூட்டத்தில சேர்ந்து
  வாழ்த்து சொல்லிக்கிறேன்

  முதல்ல விஜய்க்கு அக்கா

  அப்புறம் உங்களுக்கும்

  பதிலளிநீக்கு
 17. நன்றி வினோத்

  சாலை விஸ்தரிப்பும் விகடன் படிக்கும் பழக்கம் குறைந்து போனதும் யதார்த்தமான உண்மை வினோத் அருமை

  பதிலளிநீக்கு
 18. நன்றி சுரேஷ் உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் உங்க பிஸியான செட்யூல்ல என்னோட வலைத்தளம் வந்து படித்து ஆதரவா நாலு வார்த்தை சொல்லுறதுக்கு நன்றி சுரேஷ்

  பதிலளிநீக்கு
 19. பாலா நன்றி உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும்

  உங்கள் சமபந்தி அருமை பாலா அருமை

  பதிலளிநீக்கு
 20. உங்களுக்குத்தான் முழு உரிமையும் முதல் உரிமையும் விஜய்

  பின்னூட்டத்துக்கு நன்றிவிஜய்

  பதிலளிநீக்கு
 21. நல்ல நடையில்
  இயல்பாக சொற்கள்
  சேர்த்துக் கோர்த்த மாலையாக
  உங்கள் கவிதை
  அருமையிலும் அருமை

  பதிலளிநீக்கு
 22. நன்றி தினேஷ் பாபு

  எப்போ போட்டிக்கு எழுதப் போறீங்க

  பதிலளிநீக்கு
 23. நன்றி சூர்யா உங்க அடுத்த படம் ரிவியூ எப்போ சூர்யா

  பதிலளிநீக்கு
 24. நன்றி நினைவுகளுடன் நிகே
  செல்லமடி நீயெனக்கு அருமை

  பதிலளிநீக்கு
 25. நன்றி வசந்த் உங்க பின்னூட்டத்துக்கு

  வசந்த் 3 4 விஷயம் சொல்லணும்
  ஒன்னு உங்களோட ப்ரொபைல் பிக்சர் நல்லா இருக்கு
  ரெண்டு உங்களுக்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள் மூணாவது அது என்ன ராணி யா இருந்தாலும் வாடின்னு கூப்பிடுறது அது நல்லா இல்ல தோழியா இருந்தாலும்

  நாலாவது லிபின்னா மொழின்னு அர்த்தம்

  பதிலளிநீக்கு
 26. நன்றி சுஸ்ரி உங்க வாழ்த்துக்கு குருமா சூப்பர்ப்

  பதிலளிநீக்கு
 27. நன்றி சித்ரா
  நல்லா சிரிச்சீங்க போங்க

  பதிலளிநீக்கு
 28. நன்றி புலவரே

  தன்வினை எதுகை மோனையோடு நல்லா வந்து இருக்கு புலிகேசி

  பதிலளிநீக்கு
 29. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 30. நவாஸ் நன்றி

  ரணத்தின் எடையும் இலக்க உயர்தலில் என்பதை யோசித்துக் கொண்டு இருக்கேன்

  பதிலளிநீக்கு
 31. நன்றி பட்டியன் வரவுக்கும் வாழ்த்துக்கும்

  பதிலளிநீக்கு
 32. நன்றி நேசன் உதிரன் அருமையான பதிவு


  தனிமை தரும் எண்ணங்கள் அதில் நிறைந்து

  பதிலளிநீக்கு
 33. நன்றி தமிழுதயம்

  மனிதரின் குணாதிசயங்களைப் பற்றி சிறப்பாகச் சொல்லி இருக்கீங்க தமிழுதயம்

  பதிலளிநீக்கு
 34. நன்றி தியா வாழ்க்கைன்னா மேடு பள்ளம் இருக்கும்னு சொல்லி இருக்கீங்க

  அதை ஏற்றுக் கொள்கிறேன் தியா

  பதிலளிநீக்கு
 35. வெனி நன்றிம்மா

  நோக்கியா நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
 36. நன்றி விதூஷ்

  ஹய்யா முதல் முதலா ஓட்டுப் போடக் கத்துகிட்டேன்

  விழுந்து இருக்கானு பார்த்து சொல்லுங்க விதூஷ்

  பதிலளிநீக்கு
 37. இது யார் கதை என்று ஊரே சொல்லும்

  நன்றி செல்வா ..நல்ல பகிர்வு

  எனக்கு திருப்பாவை நல்லா தெரியும் செல்வா

  //கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்
  மற்றும் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் //

  பதிலளிநீக்கு
 38. இப்போதான் படித்தேன். இந்த கவிதை படி தேன்..

  பதிலளிநீக்கு
 39. முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வர்றீங்க
  மிக்க நன்றி

  உண்மையிலேயே காதலுக்கு மரியாதைதான் இது அண்ணாமலையான்

  பதிலளிநீக்கு
 40. தேனு முதலில் மன்னிப்பு.நேரச் சிக்கல்.உங்கள் வேகத்திற்கு ஈடுகொடுக முடியாமல் இருக்கிறது.அதுதான் எல்லாக் கவிதைகளை அப்பபோ பார்க்க முடியவில்லை.
  நிறைவான வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தேனு.

  கவிதை அடைக்கலம்.நானும் அடைக்கலம்தான்.வேற என்ன சொல்ல !

  பதிலளிநீக்கு
 41. நன்றி ஹேமா உங்க வரவுக்கு மறந்துடீங்கன்னு நினைச்சேன்

  பதிலளிநீக்கு
 42. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...