எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 23 டிசம்பர், 2009

அக நாழிகை புத்தக வெளியீடு ...ஒரு பார்வை

கிட்டத்தட்ட பதினைந்து தினங்களுக்கு முன் சக
வலைப்பதிவர் பாராவின் கருவேல நிழல்
அகநாழிகை புத்தக வெளியீடு என் வீட்டுக்கு
அருகிலேயே நடப்பது மாலை ஒரு ஐந்து
மணியளவில் தெரிந்தது...

கல்லூரிக்காலத்துக்குப் பின் எழுத்துலகுக்கு ஒரு
ஆறு மாதங்களுக்குமுன் தான் அடி எடுத்து
வைத்ததால் சகவலைப் பதிவர்களை அறிந்து
கொள்ளும் நோக்கிலும் திரு பாராவின்
கையெழுத்துடன் அவர் படைப்பை வாங்கும்
நோக்குடனும் சென்றேன் .திடீரென மாலையில்
மழை இருந்ததால் நான் கொஞ்சம் அங்கு
செல்லத்தாமதம் ஆகிவிட்டது .


அதற்குள் புத்தக வெளியீடு முடிந்து விட்டது .
எனக்கு முன்பு ரசனைக்காரி என்ற பெண் பதிவர்
இருந்தார் ..அங்கு எட்டு பெண் பதிவர்களும் வந்து
இருந்தது மகிழ்வாய் இருந்தது.. புத்தகம்
வெளியிட்டவர்களில்  பெண் வலைப்
பதிவர் ஒருவர். பெயர் லாவண்யா.. மற்ற இருவர்
நர்சிம் மற்றும் வினாயகமுருகன் ..

புத்தகம் வெளியிடப்பட்ட டிஸ்கவரி புக் பேலஸ்
மிகப்பெரிய இடமாய் இருந்தது.. 50, 60 பேர்
அமரலாம்.. வேடியப்பனும் அவர் சகோதரர்
சஞ்சயும் அதை நிர்வகித்து வருகிறார்கள் ..
வெளியிட்ட பிரபலங்கள் அஜயன் பாலா, பாஸ்கர்
சக்தி, ஞானி, சாரு ,மற்றும் அகநாழிகை வாசுதேவன்
அனைவரும் பேசினார்கள் சிறப்பாக..

வந்து இருந்தவர்களுக்கு டீ வழங்கப்பட்டது.
பேசியவர்களுக்கு பூங்கொத்தும் புத்தகம் வெளியிட்ட
எழுத்தாளர்களுக்கு பூச்செடியும் வழங்கப்பட்டது..
விழா முடிந்ததும் எனக்கு முகப் புத்தக நண்பர்
வண்ணத்துப் பூச்சியாரைமட்டும் தெரிந்ததால்
அவரிடம் நலம் விசாரித்துவிட்டுக் கிளம்பினேன்.

இதில் எனக்கு ஆச்சர்ய பட வைத்த விஷயங்கள்
அனேகம்.. பாரா வராமலே அவர் புத்தகம்
வெளியிடப்பட்டது.. அவர் சித்தப்பா அவரது மகன்
மற்றும் பாராவின் மகள் மகா மூவரும் வந்து
இருந்தார்கள்.. நான் படித்த 5 ,6 கவிதைகளிலும்
மற்றுமொரு 7 ,8 பகிர்வுகளிலுமே பாரா அருமையாக
எழுதி முத்திரை பதித்து இருந்தது ..அவருக்கு
சக வலைப்பதிவரான அன்பு நண்பர் நேசமித்திரன்
முன்னுரை எழுதி இருந்தது..

அந்த மாலை நேர கசகசப்பிலும் மழையிலும்
புத்தக வெளியீட்டுக்கு அலுவலகத்திலிருந்து
நேராக நிறைய பதிவர்கள் வந்து இருந்தது
உற்சாகமூட்டுவதாக இருந்தது ..மேலும் பெண்
பதிவர்கள் எண்மர் கூட வந்து இருந்து
சிறப்பித்தது.. மேலும் சக வலைப் பதிவர்கள்
ஆர்வமுடன் புகைப் படங்கள் எடுத்து தங்கள்
வலைத்தளத்தில் சுடச்சுட வெளியிட்டது. அவர்களின்
வலைத்தள முகவரிகளை கீழே கொடுத்து
இருக்கிறேன்.. அனேகமாக அனைவரும் கண்டு
இருக்கலாம்..

http://jackiesekar.blogspot.com/2009/12/blog-post_11.html
http://yerumbu.blogspot.com/2009/12/blog-post_09.html

மற்றும் D.R. அஷோக்கின் வலைத்தளம்

இந்த புத்தக வெளியீட்டையும் இன்னும் சில
எண்ணங்களையும் நாளையும் உங்களுடன்
பகிர்ந்து கொள்வேன்..

பி.கு. பாராவைப் பார்த்தீர்களா என்கிறீர்களா
இல்லை மக்கா அவர் வரவில்லை என்பதே
எனக்கு அங்கிருந்து கிளம்பும் போதுதான்
தெரிந்தது.. அடுத்த புத்தக வெளியீட்டில்
அவரின் கையெழுத்தோடு வாங்கலாம்
என கிளம்பினேன்..

34 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு..பா.ரா அவர்கள் எந்த ஊரில் இருக்கிறார்..!!

  பதிலளிநீக்கு
 2. அற்புதம். அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். கவிஞர் என்றால் சும்மாவா?

  அண்ணன் கவிஞர் பாரா கல்பில் இருக்கின்றார். அதனால்தான் அவரால் வர இயலவில்லை என நினைக்கின்றேன்.

  கவிதை மட்டுமல்ல, கட்டுரையுலும் கலக்கறீங்க தோழி தேனம்மை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. // என் வீட்டுக்கு அருகிலேயே நடப்பது //

  உங்க வீட்டுக்கு அருகிலேயே நடந்துகிட்டு இருந்துச்சுல்ல, வீட்டுக்கு கூப்பிட்டு ஒரு டிபன், காபி எல்லாம் கொடுக்க வேண்டியதுதானே. நீங்க ஏன் அங்க போனீங்க?

  பதிலளிநீக்கு
 4. // கல்லூரிக்காலத்துக்குப் பின் எழுத்துலகுக்கு ஒரு
  ஆறு மாதங்களுக்குமுன் தான் அடி எடுத்து
  வைத்ததால் //

  இத்தனை நாள் அஞ்சாத வாசம் ஏனோ?

  பதிலளிநீக்கு
 5. // எனக்கு முன்பு ரசனைக்காரி என்ற பெண் பதிவர்
  இருந்தார் ..//

  தங்கச்சி ரசனைக்காரி முன் சீட்டில் உட்கார்ந்து இருந்ததைச் சொல்றீங்களா? வெரி குட்.

  பதிலளிநீக்கு
 6. அங்க நானும் இருந்தேங்க.. நானும் முதல் முறை சகபதிவர்களை சந்தித்தால் அவ்வளவாக யாருடனும் பேச இயலவில்லை..

  பதிலளிநீக்கு
 7. அன்புடன்-மணிகண்டன் சொன்னது…
  அங்க நானும் இருந்தேங்க.. நானும் முதல் முறை சகபதிவர்களை சந்தித்தால் அவ்வளவாக யாருடனும் பேச இயலவில்லை.//

  me too ::(

  பதிலளிநீக்கு
 8. என்ன தேனு,இப்படி பண்ணிட்டீங்க?..

  ரொம்ப நெகிழ்வும்,(சரியாக சொல்வது எனில்,கூச்சமும்!)நன்றியும் மக்கா!

  மகாவும்,"தேனம்மை என்பவர்கள் குடு,குடுன்னு ஓடி வந்து கையை பிடிசிக்கிட்டாங்கப்பா"என்று சொன்ன போது கண் நிறைந்தது,தேனு.

  அமித்தம்மாவும்,"எங்க வீட்டு விஷேசமல்லோ?"என்று பின்னூட்டமிட்டதும்,மழையோடு மழையாய் போயிட்டு வந்ததும் மனசை ஆழ கீறியது..

  இந்த அன்பிற்க்கெல்லாம் என்ன செய்ய போகிறேன் தேனு?அட,என்ன செய்துதான் என்ன?..

  வாசு,புத்தகங்கள் அனுப்பி இருக்கிறார் எனக்கு.வந்ததும்,கையெழுத்திட்டு உங்களுக்கு அனுப்பி தருகிறேன்.இது என் பாக்கியம்.வரும்போது சந்தித்து கொள்வோம்..

  @வினோ,
  சவுதியில் இருக்கேன் மக்கா!

  @ராகவன் அண்ணாச்சி
  நன்றி அண்ணாச்சி!

  பதிலளிநீக்கு
 9. வெளியீட்டு விழாவிற்கு போகாத குறையை,இந்த கட்டுரை நிவர்த்தி செய்கிறது..தெளிவான காட்சி படுத்துதலில்!..மீண்டும் நன்றி தேனு!

  பதிலளிநீக்கு
 10. உங்களின் எழுத்துக்களை படிக்கும் போதே
  காட்சிகள் அங்கு இப்படிதான் இருந்திருக்கும் என்று கண்களில் விரிகிறது...
  வலை பதிவின் மூலம் என்னை அங்கு அழைத்து சென்றமைக்கும், உங்களின் பதிவிற்கும் என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 11. பகிர்வில் எழுத்தின் மீதுள்ள பாசம் தெரிகிறது ஹனீஈஈஈக்கா....!

  :)))))))

  பதிலளிநீக்கு
 12. அருமையான தொகுப்பு அக்கா. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. நன்றாக எழுதி உள்ளீர்கள். பதிவர் சந்திப்புகளும் சென்னையில் அடிக்கடி நடக்கிறது. இயலும் போது கலந்து கொள்க. பா. ரா பற்றி மேலும் அறிய அவரை குறித்து எனது வலை பதிவில் எழுதிய லிங்க் தந்துள்ளேன். வாசியுங்கள். இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்கள் தெரியும்

  http://veeduthirumbal.blogspot.com/2009/11/blogger_26.html

  பதிலளிநீக்கு
 14. ரொம்ப சந்தோசமா இருக்கு.

  பா.ரா. அடுத்த தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு எப்படியாவது அங்க இருக்கனும் மக்கா உங்க பக்கத்து சீட்ல

  பதிலளிநீக்கு
 15. சந்திப்புல நீங்களும் அட்டன்டன்ஸ் போட்டாச்சா???

  பதிலளிநீக்கு
 16. நன்றாக மேம்பட்ட சிந்தனைகளுடன் வளர்ச்சியடைந்த எழுத்து நடையுடன் கூடிய வர்ணனைகள். மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 17. நன்றி வினோத்
  முதல்ல வந்து பாராட்டுனதுக்கு
  பாரா சவுதியில் இருக்கிறார் என அறிந்தேன்

  நிஜமாவே வினோத்தானா அருமையா இருக்கு முற்பகல் செய்யின் கதை
  எழுத்தில் முதிர்ச்சி தெரியுது
  பாராட்டுக்கள் வினோத்

  பதிலளிநீக்கு
 18. நன்றிங்க ராகவன் உங்க பாராட்டுக்கு

  பாரா சவுதியில் இருப்பதாக அறிந்தேன்

  பதிலளிநீக்கு
 19. இராகவன் நைஜிரியா சொன்னது…
  // என் வீட்டுக்கு அருகிலேயே நடப்பது //

  உங்க வீட்டுக்கு அருகிலேயே நடந்துகிட்டு இருந்துச்சுல்ல, வீட்டுக்கு கூப்பிட்டு ஒரு டிபன், காபி எல்லாம் கொடுக்க வேண்டியதுதானே. நீங்க ஏன் அங்க போனீங்க?//

  சளி பிடிச்சு கிலிஅடிச்சா கூட உங்க கிண்டல் போகல பார்த்தீங்களா ராகவன் சந்தோசமாக இருக்கு

  பதிலளிநீக்கு
 20. இராகவன் நைஜிரியா சொன்னது…
  // கல்லூரிக்காலத்துக்குப் பின் எழுத்துலகுக்கு ஒரு
  ஆறு மாதங்களுக்குமுன் தான் அடி எடுத்து
  வைத்ததால் //

  இத்தனை நாள் அஞ்சாத வாசம் ஏனோ?//

  இத்தனை நாளா நீங்களெல்லாம் கண்ணுலயே தட்டுப்படலயே தெரிஞ்சுருந்தா என் அறுவையை முன்னாடியே ஆரம்பிச்சு இருப்பேன் ராகவன்

  பதிலளிநீக்கு
 21. அடுத்த முறை எல்லோருடனும்பேசிடலாம் மண்கண்டன்
  முதல் முறையா என்னோட வலைத்தளத்துக்கு வந்ததுக்கு நன்றி மணிகண்டன்
  இளய தளபதி ரசிகரா நீங்க
  நல்லாருக்கு மணிகண்டன்
  பிடிச்ச நடிகர் என்பதற்காக பூசி மெழுகாமல் உண்மையை எழுதுனதுக்கு

  பதிலளிநீக்கு
 22. நல்லா எழுதுறீங்க பலா பட்டறை இயற்கையின் உறவுகள் அருமை
  இப்போதான் தெரிந்து கொண்டோமே
  அடுத்த முறை எல்லோருடனும்பேசிடலாம் பலா பட்டறை

  பதிலளிநீக்கு
 23. நன்றி பாரா
  நட்புக்குள் இந்த வார்த்தை அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்
  ஆனா சொல்லாம இருக்க முடியல
  அற்புதம் பாரா ரொம்ப அற்புதமான உணர்வு அது

  பதிலளிநீக்கு
 24. நன்றி கமலேஷ்
  இலக்கணக் கனவு கண்டவரே எப்படி இருக்கீங்க மிக அதிசயமான ஆளு நீங்க
  எல்லோருக்கும் ஏதேதோ கனவு வர உங்களுக்கு இலக்கணக் கனவு
  ஒரு வேளை சோழமண்டலத்துக்காரரா இருக்குறதால இருக்குமோ

  பதிலளிநீக்கு
 25. நன்றி வசந்த் உங்க பாராட்டுக்கு

  பதிலளிநீக்கு
 26. நன்றிமுனியப்பன் சார் உங்க பாராட்டுக்கு

  பதிலளிநீக்கு
 27. நன்றி புலவரே காதலியில்லா நண்பன் கவிதை அருமை

  பதிலளிநீக்கு
 28. நன்றி சித்ரா உனக்கும் என்னோட புத்தாண்டு வாழ்த்துக்கள் மா

  பதிலளிநீக்கு
 29. நன்றி மோஹன் குமார் 2009 ஆம் ஆண்டுக்கான விருது எல்லாம் கொடுத்து கலக்குறீங்க

  நல்லா இருக்கு
  உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 30. நன்றி நவாஸ்
  நிச்சயம் இருப்போம் மக்கா

  நல்ல பகிர்வு நவாஸ் பிரிந்து இருக்கும் அனைத்து குடும்பங்களும் ஒன்றாக வாழபுத்தாண்டில் நல்ல செய்தி சொல்லி இருக்கீங்க
  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 31. நன்றி கலை ஆமாம் ஆஜர் குடுத்தாச்சு புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கு

  பதிலளிநீக்கு
 32. நன்றி ஜோதிஜி உங்க பாராட்டுக்கு


  அருமையான பகிர்வு ஜோதிஜி
  உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்
  புத்தாண்டு நலமாக இருக்கட்டும்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...