எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புத்தக வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தக வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 ஜனவரி, 2015

புத்தம் புதிய புத்தகமே பாகம் 2.

என் முகநூல் நண்பர் சண்முகம் சுப்ரமணியன் அவர்களின் இரு நேர்காணல்கள் இந்தப் புத்தகத் திருவிழாவில் வெளிவருகின்றன. ஒன்று முபின் சாதிகா , இன்னொன்று ட்ராட்ஸ்கி மருது.

புகைப்படம் சார்ந்த பகிர்வுகளில் தத்துவக் கருத்துக்களை தினம் 20 ஆவது பகிர்வார் சண்முகம். ஒவ்வொன்றும் சிந்தனையைச் செதுக்கக்கூடியதாக இருக்கும். உலகளாவிய இலக்கிய தத்துவ ஞானிகளின் மேற்கோள்களும் கருத்துகளும் கவி வரிகளும் தினம் அழகழகான கேரிகேச்சர்களில் பகிர்வார். அவர் எடுத்த நேர்காணல் என்பதால் இரண்டுமே ரொம்ப ஸ்பெஷலாகத்தான் இருக்கும்.

முபின் சாதிகா  அவர்களின்  வலைப்பூவையும் கவிதைகளையும் படித்து அசந்திருக்கிறேன். மிகச் சிறப்பான ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை போலிருக்கும் அவரது எல்லாக் கட்டுரைகளும். நெருக்கமாய் கோர்க்கப்பட்ட சரங்கள் போலிருக்கும் கவிதைகள். இவரது கவிதைகளுக்கு சகோ பாலகணேஷ் விமர்சனம் எழுதி இருக்கிறார்.

வெள்ளி, 9 ஜனவரி, 2015

புத்தம் புதிய புத்தகமே..

2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி தினம் ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்தை முகநூலில் பகிர்ந்து வருகிறேன். அந்த  நூல்கள் பற்றி சிறு அறிமுகம் இங்கேயும்.

என் அன்பிற்குரிய கவித சொர்ணவல்லியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.  

பொசல் 
நிலமிசை வெளியீடு
சிறுகதைகள். 
ஆசிரியர் :- கவிதா சொர்ணவல்லி. 
விலை ரூ 80/-

வியாழன், 25 டிசம்பர், 2014

கோவையில் யாதுமாகி நாவல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.

திருவண்ணாமலை வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் எங்கள் அம்மாவின்  ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா அழைப்பிதழ். கோவை மக்கள் அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்

புதன், 18 ஜூன், 2014

என் முதல் புத்தக வெளியீடு பற்றி.. பரிவு இலக்கிய இதழில்

எழுத்து எனக்கு ஒரு முகம் கொடுத்தது. அதை என் புத்தக வெளியீடு அங்கீகரித்தது. அதனால் பத்ரிக்கைகள் , தொலைக்காட்சிகள், வானொலிகள் ,  சில சந்தர்ப்பங்களில் என்னிடமும் (  முக நூல் சர்ச்சைகள் பற்றியும், சாதனைப் பெண்கள் பற்றியும், சர்வதேச சினிமா பற்றியும் )  கருத்துக் கணிப்புக் கேட்டன.

ஒரு குடும்பத்தலைவியாய் இருந்து மத்திம வயதில் திரும்ப எழுத வந்து எனக்கான ஒரு இடத்தை வலைத்தளத்தில் பெற்றதே என்னுடைய கடின மற்றும் தொடர்ந்த உழைப்பின் பலனாகும். லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்த நான் பேட்டி கண்ட போராடி ஜெயித்த பெண்களின் கதைகளைத் தொகுத்து  சாதனை அரசிகள் புத்தகமாக வெளியிட்டேன். என் அப்பா அம்மா பெயரில் பதிப்பித்தேன். மிக எளிதாக ஆரம்பித்த அந்த முயற்சி பலத்த அயற்சிகளுக்குப் பின் கடைசியில் மிக எளிதாக நிறைவேறியது.

என் புத்தகத்தில் இடம் பெற்ற அனைவரையும் ஒருங்கிணைத்துப் புத்தகத்தை அவர்கள் கையாலேயே வெளியிட எண்ணினேன். ஒருவரைச் சேர்த்தால் இன்னொருவரைக் கோர்க்க முடியவில்லை. நவம்பரில் முடிவான  புத்தகம் ஜனவரியில்தான் வெளிவந்தது. வெளியிட எண்ணிய நாளில் எல்லாம் ஏதோ ஒரு இடையூறு இருந்தது.

திங்கள், 23 டிசம்பர், 2013

அகநாழிகையில் அன்னபட்சி.


அகநாழிகையுடனான அறிமுகம் எனக்கு டிஸ்கவரி புக் பேலஸில் ஏற்பட்டது. டிசம்பர் 2009 இல் வலைத்தளம் ஆரம்பித்து 6 மாதங்களில் நான் கலந்து கொண்ட முதல் புத்தக வெளியீடு அதுதான்.

சனி, 31 ஆகஸ்ட், 2013

வலைப்பதிவ சகோதரர்களின் புத்தக வெளியீடும் அகநாழிகை புத்தக உலகமும்.

அகநாழிகை புத்தக உலகம் சைதாப்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வலைப்பதிவர் சகோ . தேவன் அதன் ஒவ்வொரு புத்தகத்துக்கும் சிறிய அழகான விமர்சனங்கள் கொடுத்து வருகிறார். அங்கே  வலைப்பதிவர் மாநாட்டுக்கு முதல் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வலைப்பதிவ சகோதர்கள் சதீஷ் சங்கவி மற்றும் வீடு திரும்பல் மோகன் குமாரின் புத்தகங்கள் வெளியிடப்படுகிறது.

புதன், 11 ஜனவரி, 2012

சாதனை அரசிகள் வெளியீடு 35 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில்..

டிஸ்கவரி புத்தக அரங்கில் என்னுடைய புத்தகத்தை என் கணவர் வெளியிட உயர்திரு பாரதி மணி ஐயாவும், இளம் பெண் கிரிக்கெட்டர் திருஷ்காமினியும் பெற்றுக் கொண்டார்கள்.

வெள்ளி, 30 டிசம்பர், 2011

என் முதல் புத்தகம், “ சாதனை அரசிகள்”


என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வலைப்பதிவ சகோதரி, சகோதரர்களே..!

என்னுடைய முதல் புத்தகம் ”சாதனை அரசிகள்”.

வெளியிடுபவர்:- என் கணவர் திரு. லெட்சுமணன் அவர்கள்.

முதல் பிரதி பெற்றுக் கொள்பவர் :- நடிகர் ,எழுத்தாளர், உயர்திரு. பாரதிமணி ஐயா அவர்கள்.

பதிப்பகம்:- முத்துசபா பதிப்பகம்.

வெளியீட்டு தேதி - ஜனவரி 8 ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்கு.

இடம் :- புத்தகக் கண்காட்சி டிஸ்கவரி புத்தக நிலையத்தின் 334 ஆம் அரங்கு.

விநியோக உரிமை ;- டிஸ்கவரி புத்தக நிலையம்.

விலை :- ரூபாய் 50/-

வெளீயீட்டு விழாவுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள். அன்பு அழைப்பு..!

சனி, 19 பிப்ரவரி, 2011

வாளோர் ஆடும் அமலை.. ட்ராட்ஸ்கி மருதுவின் புத்தக வெளியீடு..

முகப்புத்தகத்தில் நண்பர்கள் ஐயப்ப மாதவன் மற்றும் கா முகுந்த் தேவநேயப்பாவாணர் அரங்கில் புத்தக வெளியீட்டுக்கு அழைத்திருந்தார்கள்.. அதற்கு அமுதரசன் கீற்றுவில் போட்டிருந்த அழைப்பிதழும் காணவே அருமையாய் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியத்தோடு இருந்தது..

திங்கள், 7 பிப்ரவரி, 2011

தறிகளின் பாடல்.. ( THE SONG OF THE LOOMS...)

சென்ற சனிக்கிழமை பொன் மாலைப் பொழுதில் முத்து வெங்கட சுப்பாராவ் கான்ஸார்ட் ஹாலில் சென்னையின் பெரும் பணக்காரர்களையும்., அதி அழகிய பெண்களையும் ., கலாஷேத்திராவின் கலைஞர்களையும்., காஞ்சீபுரத்தின் நெசவுக்கலைஞர்களையும் ஒரு சேர சந்திக்க நேர்ந்தது.. ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்..

திங்கள், 15 மார்ச், 2010

சொற்கப்பல் ..தமிழ் அலை ..டிஸ்கவரி

சொற்கப்பல்
-----------------
சென்றவாரம் டிஸ்கவரி புக் பாலஸில் இரண்டு
புத்தகங்கள் விமர்சனம் நடந்தது..முகப்புத்தக
நண்பர் அஜயன் பாலா சொற்கப்பல் என்ற விமர்சன
தளத்தை அறிமுகம் செய்ய அழைத்து இருந்தார் ..
செல்ல நினைத்து சில வேலைகளால் செல்ல
இயலவில்லை..வரவேற்புரை அகநாழிகை பொன் .
வாசுதேவனும் அறிமுகம் அஜயன் பாலாவும்..
விளக்குபரிசு பெற்ற விக்கிரமாதித்யனுக்கு சொற்
கப்பல் சார்பாக டிஸ்கவரி புக் பாலஸின் உரிமை
யாளர்கள் முகுந்தும் வேடியப்பனும் பொன்னாடை
போர்த்தினார்கள் ,, சொற்கப்பலின் மாலுமிகள்
தமிழ்மகன் ., அகநாழிகை.,தடாகம்.காம் டிஸ்கவரி
புக் பேலஸ்....

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

லைம் ட்ரீயும் டைரிக்குறிப்பும்

இன்றும் அதே டிஸ்கவரி புக் ஹவுஸ் ..அதே
புத்துணர்ச்சியோடு சகவலைப்பதிவர்களும்.,
நண்பர்களும் .,சகோதரர்களும்....!!!

கேபிள் சங்கர் ஜி மற்றும் பரிசல்காரனின் மலர்ந்த
புன்னகையோடு ஆரம்பித்தது விழா.. சகோதரர்
அப்துல்லாவைத்தான் முதன்முதல் பார்த்தேன்..
அடையாளம் கண்டு கொண்டேன்.. என் சின்ன
மகனுடன் சென்று இறங்கியபோதுதான் சீப் கெஸ்ட்
பிரமிட் நடரஜன் அவர்கள் வந்தார்கள்.. நேரமாகி
விட்டதோ என்று நினைத்து போக நிம்மதி
ஆகிவிட்டது ..போனமுறை நடந்த வெளீயீட்டு
விழா ஹாலின் மேல் மாடியில்.. இன்றைய
வெளீயீடு நடந்தது.. நல்ல கூட்டம்.. ஒரே
காமிரா வெளிச்சம்..

சனி, 26 டிசம்பர், 2009

அகநாழிகை ..... ஒரு புத்தகப்பிரியர்

புத்தகங்களைப் படித்துவிட்டு அலமாரிகளிலோ,
ட்ரங்குப் பெட்டிகளிலோ ,எடைக்கோ போடுவது
அறிந்ததுதான்... ஆனால் படுக்கையிலும் இரண்டு
அடிக்கு புத்தகங்களுடன் வாழ்பவர் சாரு.. இதில்
எனக்கு அவர் மீது ஏற்பட்ட வியப்பைவிட அவர்
மனைவி அவந்திகாவின் மேல்தான் வியப்பு
அதிகம்.. "மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம்".. "சாருவுக்கு மகனும் கூட"..

சாருவின் சில பல கதைகள் கட்டுரைகள் படித்து
இருந்தாலும் ... நன்கு பழகிய ஒருவரை நீண்ட
நாட்களுக்குப் பின் ஒரு ரயில் பயணத்தில் சந்தித்து
கையசைத்துப்பிரியும் வலியை ....அவர்
வார்த்தைகளில் படித்தபோது இன்னும் அதிகமாக
உணர முடிந்தது ...

வியாழன், 24 டிசம்பர், 2009

அகநாழிகை ....ஆரியம் திராவிடம் அற்றது அன்பு

நானும் என் குடும்பத்தினரும் தொடர்ந்து படித்து
வருவது ஆனந்த விகடனும், குமுதமும். அடிக்கடி
மாற்றலாகும் தருணங்களால் ஆசையாய்
வாங்கப்பட்ட புத்தகங்கள் அதிசோக சுமையாகும்
போது [பள்ளி கல்லூரி புத்தகங்கள் தனிசுமை
வேறு] புதிதாய் புத்தகம் வாங்கும் பழக்கம்
சிறிது குறைந்து போனது உண்மை.

எங்கிருந்தாலும் படிக்கும் விகடன் குமுதங்களில்
தன்னுடைய காரசாரமான எழுத்துக்களால்
என்னையும் என் மகனையும் கவர்ந்தவர்
திரு ஞாநி அவர்கள்.. தான் கூறும்கருத்துக்களில்
வலிமையாக நிற்கும் தன்மை, உறுதி படக்கூறுவது,
எளியோருக்கு இரங்குவது, அநேக தருணங்களில்
சரியானவற்றையே கூறுவது என என் ஆரம்ப கால
பள்ளி ஆசிரியர்களின் தொகுப்பாக இருக்கிறார்..

புதன், 23 டிசம்பர், 2009

அக நாழிகை புத்தக வெளியீடு ...ஒரு பார்வை

கிட்டத்தட்ட பதினைந்து தினங்களுக்கு முன் சக
வலைப்பதிவர் பாராவின் கருவேல நிழல்
அகநாழிகை புத்தக வெளியீடு என் வீட்டுக்கு
அருகிலேயே நடப்பது மாலை ஒரு ஐந்து
மணியளவில் தெரிந்தது...

கல்லூரிக்காலத்துக்குப் பின் எழுத்துலகுக்கு ஒரு
ஆறு மாதங்களுக்குமுன் தான் அடி எடுத்து
வைத்ததால் சகவலைப் பதிவர்களை அறிந்து
கொள்ளும் நோக்கிலும் திரு பாராவின்
கையெழுத்துடன் அவர் படைப்பை வாங்கும்
நோக்குடனும் சென்றேன் .திடீரென மாலையில்
மழை இருந்ததால் நான் கொஞ்சம் அங்கு
செல்லத்தாமதம் ஆகிவிட்டது .
Related Posts Plugin for WordPress, Blogger...