ஞாயிறு, 15 மே, 2011

361* வெளியீடு.

நேற்று டிஸ்கவரி புத்தக நிலையத்தில் 361 டிகிரி புத்தக வெளியீடு நடந்தது. நரன் மற்று நிலாரசிகனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. கவிதைகள்., புத்தக விமர்சனம்., சிறுகதைகள்., கட்டுரைகள்., மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் கொண்டு இலக்கியச் சிற்றிதழாக தனிச்சுற்றுக்கு மட்டும். விலை ரூபாய் 20 . காலாண்டிதழ். மிக அருமை . வாங்கிவந்தவுடனே படித்து விட்டேன்.. மிகச்சிறந்த கவிதைகள்.


நரன் வரவேற்க., குட்டி ரேவதி வெளியிட., கவிதா முரளீதரன் பெற்றுக் கொண்டார். ஐயப்ப மாதவன்., அஜயனும் இது குறித்து பேசினார்கள்.


அட்டைப்பட ஓவியம் ரோஹிணி மணி.. மற்ற ஓவியங்களுமே உள் கவிதை கொண்டிருக்கின்றன. மிகப் பெரிய அரிய முயற்சி இது.. அ. முத்துலிங்கம் தொடங்கி., ஜி. குப்புசாமி., கணேசகுமாரன்., ,மனோஜ்., செல்வ புவியரசன்., நேசன்., நரன்., வெய்யில்., நிலாரசிகன்., குட்டி ரேவதி., லீனா, கதிர்பாரதி வேல்கண்ணன்., நதியலை., தேவதச்சன்., விஸ்வாமித்திரன்., அபிலாஷ்., மணிகண்டன்., மண்குதிரை., ஊர்சுலா ராகவ்., சிவன்., முத்துவேல்., சாகிப்கிரான்., மணிவண்ணன்., சபரிநாதன்., இளங்கோ ஆகியோரின் படைப்புகள் அமிர்தம்.

சாதாரண ரசிகர்களை இலக்கிய தரத்துக்கு எடுத்துச் செல்வதில் இதுபோன்ற சிற்றிதழ்களின் பணி பெரிது. இன்னும் இலக்கியத்தில் மேம்பட வேண்டும் என நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை படித்துப் பாருங்கள்.

பெண் எழுத்துக்கள் எவ்வாறு மாறி வருகின்றன என அறிந்துகொள்ள உதவியது. என் சக வலைப்பதிவ தங்கைகளும் தோழிகளும் இதை ஒரு முறையாவது படித்துப் பாருங்கள். நாம் எழுத யோசிக்கும் கருக்களில் எல்லாம் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. குறியீட்டுக் கவிதைகளும் படிமானக் கவிதைகளும் நம்மை வேறு வேறு தளங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. லீனாவின் கவிதைகள் அட்வான்ஸ்ட் திங்க்கிங்கில் போல்டாக எழுதப்பட்டவை. அவ்வாறு நீங்களும் எழுதுங்கள் என சொல்லவில்லை. அப்படியும் ஒரு ஆங்கிள் ., வியூ இருக்கிறது என தெரிந்துகொள்ளலாம்.

இதில் ரொம்பப் பிடித்தவை., மனோஜின் ,”அந்நியை” சிறுகதை., நேசனின் ,”மற்றும்-ஃ” கதிர்பாரதியின் ”யவ்வனம்” கவிதை ., மண் குதிரையின் ,”கண்ணாடி பிம்பங்களின் இசை”..

அடுத்த இதழ்களுக்கும் அனைவரும் கவிதைகள்., கதைகள்., கட்டுரைகள் அனுப்புங்கள். தொடர்புக்கு 361degreelittlemagazine@gmail.com.

361 டிகிரியை பெரும் முயற்சிக்குப்பின் கொண்டுவந்திருக்கும் நரனுக்கும் நிலாரசிகனுக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே வளர்க.. உங்கள் இலக்கியப்பணி..!!

டிஸ்கி 1.. :- இந்த வெளியீடு 16.5.2011. உயிரோசையில் வெளிவந்துள்ளது.

டிஸ்கி 2 ..:- டிஸ்கவரி புத்தக நிலையத்தில் மே 10 இல் இருந்து விகடன் (புக் ஃபேர்) பிரசுர புத்தகங்கள் 10தவிகித டிஸ்கவுண்டில் கிடைக்கின்றன.


டிஸ்கி 3 :- சென்னையில் இருக்கும் பெண் வலைப்பதிவர்கள் மே 20 மெரீனா பீச் மீட்டில் கலந்து கொளுங்கள். லேடீஸ் ஸ்பெஷலின் பெண் வாசகியரும் வரலாம். கலக்கலாம். அசத்தலாம் வாங்க. மறந்துடாதீங்க மே 20 மதியம் மணி 3.30 - 7 30.


15 கருத்துகள் :

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அறிமுகத்துக்கு நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Kandipa vanke padikuren

D.R.Ashok சொன்னது…

gud sharing...

நிகழ்வை பற்றி முன்னரே பதிவு போட்டிருக்கலாமேஜி

தமிழ்வாசி - Prakash சொன்னது…

ஓகே...ஓகே...

ராமலக்ஷ்மி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி தேனம்மை. வாங்க உள்ளேன்:)!

நிலாரசிகன் சொன்னது…

நன்றி :)

நேசமித்ரன். சொன்னது…

நன்றி! உங்கள் வருகை எதிர்பாராதது தேனம்மை!

பெருமக்களோடு இருந்தீர்கள் மக்கா. மகிழ்ச்சி :)

ஜிஜி சொன்னது…

கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன் அம்மா. நீங்க குறிப்பிட்டிருக்கும் ஈமெயில் ஐடி சரியா?அது ஜிமெயில் ஐடியா?

Discovery book palace சொன்னது…

சிற்றிதழ் பற்றிய அழகான-ஆழமான பார்வையில் விமர்சித்துள்ளீர்கள். விகடன் புக் பேரை தவறாமல் குறித்ததுக்கு மிக்க நன்றி!

Discovery book palace சொன்னது…

பத்திரிக்கை டிஸ்கவரி புக் பேலஸ்-ல் கிடைக்கிறது

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி செந்தில்

நன்றி ராஜா

நன்றி அஷோக்

நன்றி ப்ரகாஷ்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி நிலாரசிகன்

நன்றி நேசன்

ஆம் ஜிஜி

நன்றி வேடியப்பன்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

www.navishsenthilkumar.com சொன்னது…

அட... அக்கா விழாவில் உங்களைப் பார்த்தேன்... ஆனால், தாங்கள்தான் என்று அடையாளம் கண்டறிவதற்குள் உங்களைக் காணவில்லை. நேரில் பார்த்தும் பேச முடியாதது வருத்தமே! :(

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

இன்னொரு விழாவில் சந்திப்போம் நாவிஷ் செந்தில்குமார்..:)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...