திங்கள், 2 மே, 2011

நெசவு...

நெசவு..
**********************
துணி கசகசத்தது
இறந்திருந்த பட்டுப்பூச்சியின்
எச்சத்துடன்., கவிச்சியுடன்..

இலைதின்று
கூடோடு கிடந்தவற்றை
கூண்டோடு அனுப்பி


இழைகளை நீவி
வாரி வாரி சீராக்கி
சாயக்கஷாயத்தில் தோய்த்து..

கசவுகளும் .,
கசடுகளும் நீக்கி
தறியடித்து ஜரிகை சேர்த்து

பட்டு சார்த்தும் போதோ
பட்டு போர்த்தும் போதோ
பட்டின் உடல் நெளி நெளியாய்..

உப்புக் கண்டமாகவோ
கருவாடாகவோ
பட்டு(டாய்)ப்போன புழுக்களோடு..

டிஸ்கி:- இந்தக் கவிதை 23.3.2011 வார்ப்புவில் வெளிவந்துள்ளது.. நன்றி வார்ப்பு..:)

17 கருத்துகள் :

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் பட்டாம்பூச்சி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>கூடோடு கிடந்தவற்றை
கூண்டோடு அனுப்பி

வார்த்தை ஜாலம் வாகாய் வந்து சேர்ந்த இடம்

தமிழ் உதயம் சொன்னது…

ஒரு கணம், பட்டு சேலையான பட்டுப்பூச்சியின் "இறந்த" காலத்தை நினைக்க வைத்துவிட்டீர்கள்.

sakthi சொன்னது…

வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய கவி வாழ்த்துக்கள் வார்ப்பு இதழில் இக்கவிதை வெளிவந்தமைக்கு

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

SUUUUUUUUUUUUUUUUUUUUUUUPER!!!!!

சசிகுமார் சொன்னது…

thanks for sharing

Kitchen சொன்னது…

வாழ்த்துக்கள். அருமையான கவிதை என் மகளுக்கு படித்து கான்பித்தேன். ஆண்டிக்கிட்டெ சொல்லு மம்மி ரொம்ப அழகா இருக்கு. ஏன் ஆண்டி பார்ப்பி பொம்மை படம் போடல்லை என்று கேட்டாள். ஆண்டி நல்ல கவிதை எழுதுவாங்க படம் வரைவாங்களா தெரியல்லை அடுத்த தடவை என் மகளுக்காக் ஒரு பார்பி பொம்மை கவிதை பார்சல்.

Philosophy Prabhakaran சொன்னது…

சூப்பர் மேடம்...

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை - வாழ்த்துக்கள்.
இன்று அம்மாவின் கவிதைகள் படித்தேன். மிக அருமையாக எழுதுகிறார்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக நன்று தேனம்மை.

நாய்க்குட்டி மனசு சொன்னது…

கூடோடு கிடந்தவற்றை
கூண்டோடு அனுப்பி//
wah!!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

08.05.2011 தேதியிட்ட கல்கி இதழின் பக்கம் எண் 40 இல் 'கவிதை கஃபே' பகுதியில் வெளிவந்துள்ள தங்களின் “இரவு” கவிதை படித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
vgk

அமைதிச்சாரல் சொன்னது…

அருமையா இருக்கு தேனக்கா..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பட்டுச்சேலையை போல தோல் செருப்பும்.

கவிதை அருமை அக்கா.

ஜிஜி சொன்னது…

பட்டுப் புழுவைப் பற்றிய கவிதை சூப்பரா இருக்குங்க..பகிர்வுக்கு நன்றி.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி செந்தில்

நன்றி ரமேஷ்

நன்றி சக்தி

நன்றி ஆர் ஆர் ஆர்

நன்றி சசி

நன்றி விஜி

நன்றி பிரபா

நன்றி ரத்னவேல் சார்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி ரூஃபினா

நன்றி கோபால் சார்

நன்றி சாரல்

நன்றி அக்பர்

நன்றி ஜிஜி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...